Monday, December 28, 2015

ஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்

ஜனவரி மாத ராசிப்பலன் - 2016



மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 7&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், அதிசாரமாக குரு 6ல் சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்
பரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது குருவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  05.01.2016 இரவு 12.56 மணி முதல் 08.01.2016 காலை 09.46 மணி  வரை

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். மாத முற்பாதி வரை சூரியன் 8ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 08.01.2016 காலை 09.46 மணி முதல் 10.01.2016 மதியம் 03.32 மணி வரை

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் சனி சுக்கிரன் சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் ராகு 3ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற் கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 10.01.2016 மதியம் 03.32 மணி முதல் 12.01.2016 மாலை 07.17 மணி வரை

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சுக்கிரன் ருண ரோக ஸ்தானமான 6&ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும்.
பரிகாரம். ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 12.01.2016 மாலை 07.17 மணி முதல் 14.01.2016 இரவு 10.15 மணி  வரை

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். 
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.01.2016 இரவு 10.15 மணி முதல் 17.01.2016 அதிகாலை 01.12 மணிவரை

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 3&ல் சனி சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் 6ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். பொருளாதார  நிலை சிறப்பாகவே இருக்கும். எந்த எதிர்ப்பையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது  பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 17.01.2016 அதிகாலை 01.12 மணி முதல் 19.01.2016 காலை 04.31 மணி வரை. 

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  மாத முற்பாதியில் ஜென்ம ராசிக்கு 3&ல் சூரியன் சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் 11ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும்.
பரிகாரம். சனி பரிகாரம் செய்வது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 19.01.2016 காலை 04.31 மணி முதல் 21.01.2016 காலை 08.33 மணி வரை. 

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு அதிசாரமாக 11&ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில்  சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். 
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.01.2016 காலை 08.33 மணி முதல் 23.01.2016 மதியம் 02.03 மணி வரை. 

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 11&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 8ம் தேதி முதல் 3ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் சற்று சாதகமான அமைப்பே ஆகும். என்றாலும் ஏழரை சனியில் விரய சனி தொடருவதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன் கோபத்தை குறைப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல பெருகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 23.01.2016 மதியம் 02.03 மணி முதல் 25.01.2016 இரவு 09.54 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  ஜீவன ஸ்தானமான 10&ல் செவ்வாயும் லாப ஸ்தானமான 11&ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் லாபமும் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். 
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 25.01.2016 இரவு 09.54 மணி முதல் 28.01.2016 காலை 08.37 மணி  வரை. 

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் ஜென்ம ராசிக்கு 10&ல் சுக்கிரன் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் 10&ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.01.2016 அதிகாலை 00.13 மணி முதல் 03.01.2016 மதியம் 01.06 மணி  வரை
மற்றும் 28.01.2016 காலை 08.37 மணி முதல் 30.01.2016 இரவு 09.18 மணி  வரை. 

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், அதிசாரமாக குரு 7ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். எதிர் பார்த்த இட மாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேர முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். அம்மன் வழிபாடு மேற்கொள்வது முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03.01.2016 மதியம் 01.06 மணி முதல் 05.01.2016 இரவு 12.56  மணி  வரை
மற்றும் 30.01.2016 இரவு 09.18 மணி முதல் 02.02.2016 காலை 09.40 மணி  வரை. 


சுப முகூர்த்த நாட்கள்

06.01.2016 மார்கழி 21 ஆம் தேதி  புதன்கிழமை துவாதசிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை.

07.01.2016 மார்கழி 22 ஆம் தேதி  வியாழக்கிழமை திரயோதசிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை.

20.01.2016 தை 06 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

FOR YOUR CONSULTATION



JOTHIDAMAMANI

DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI,  CHENNAI-600026 NEAR BANK OF BARODA   
 MY CELL - 0091 - 7200163001,  9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN


E-MAIL  MURUGU.ASTRO@GMAIL.COM MURUGU_ASTRO@YAHOO.CO.IN.
WEB  WWW.MURUGUASTROLOGY.COM

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

OR

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda 


No comments: