Thursday, December 24, 2015

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;
மிதுனம் ; மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும், தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் மிதுன ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகுவும், 9ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். சனி 6ல் இருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். 02.08.2016 முடிய குரு 3ஆம் வீட்டிலும் பின்பு 4ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் அமையும் என்றாலும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல்நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை முன்னேற்றமடையும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்.
உத்தியோகம்
பணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்
பெயர் புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுப காரியங்கள் யாவும் கை கூடும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு  பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் 3ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3லும், கேதுபகவான் கேந்திராதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 9லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் பஞ்சம விரயாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் கேந்திராதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அற்புதமான நற்பலன்களையே அடைய முடியும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் பஞ்சம, விரயாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் சதய நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும். 02.08.2016 முதல் குரு 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் சனியும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது 6,11க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நற்பலன்களை அடைய முடியும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு பெருகும்.

மிருகசீரீஷம் 3,4&ஆம் பாதங்கள்
பொறுமையும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் கொண்டு விளங்கும் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் நல்ல அறிவுக் கூர்மையுடன் விளங்குவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு முயற்சி ஸ்தானமான 3ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு சாதகமற்று சஞ்சரித்தாலும் சனி 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்ட கொடுத்து செல்லவும்.
திருவாதிரை
தன்னுடைய காரியங்களில் மட்டும் அதிக கவனமுடன் செயல்படும் ஆற்றல் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் எதிலும் சுயநலவாதியாக இருப்பீர்கள். உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவானே முயற்சி  ஸ்தானமான 3ல் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. சனி 6ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
புனர்பூசம் 1,2,3&ஆம் பாதங்கள்
கண்டிப்பானவராகவும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கக் கூடிய குணம் கொண்ட புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான் தர்மம் செய்யக் கூடிய குணம் இயற்கையிலேயே இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு முயற்சி ஸ்தானமான 3ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். குரு பகவான் சாதகமற்று சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். சனி 6ல் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்   5,6,8,
நிறம்   பச்சை, வெள்ளை
கிழமை  புதன், வெள்ளி
கல்   மரகதம்
திசை  வடக்கு
தெய்வம்  விஷ்ணு

பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமின்ற சஞ்சரிபப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும். 


For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001

No comments: