Thursday, December 24, 2015

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேஷம்

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்




ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017  மேஷம்
மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை  1 ம் பாதம்
எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்ய விருப்பது ஏற்ற இறக்கமானப் பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். இக்காலங்களில் அஷ்டம சனி நடைபெற்றாலும் வரும் 02.08.2016 முடிய குரு பஞ்சம ஸ்தானமான 5ல் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையற்ற  மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படும் ஆற்றலும் உண்டாகும்.
குடும்பம் பொருளாதாரநிலை
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.
தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.
உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.
அரசியல்
பெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது.
பெண்கள்
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளவும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகள் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் உண்டாக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
சர்ப கிரகங்களான ராகு பஞ்சமாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பாக்கியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும் இரு சர்ப கிரகமும் உங்கள் ராசிக்கு நட்பு நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நல்லது பல நடக்கும். அஷ்டம சனி நடைபெறுவதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றினாலும் எதிர் பாராத உதவிகளும் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவு செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு தன சப்தமாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் கேது பாக்கியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதாலும், குரு 5ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் தன சப்தமாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். அஷ்ட சனி நடப்பதாலும் குரு 02.08.2016 முதல் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் எதிலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு  பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால்  வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும், கேது பகவான் ராகு நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் சனி 8ல், குரு 6ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும்.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5--லும்,கேது ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும்  சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 6ல், சனி 8ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் உறவினர்களிடையே பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் நலமுடன் அமைய மாட்டார்கள். என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

அஸ்வினி
27 நட்சத்திரங்களில் முதன்மை நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி கேது பகவான் என்பதால் இயற்கையிலேயே ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொன்னவனான குரு பகவான் 02.08.2016 வரை 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.
பரணி
பரணியில் பிறந்து தரணியை ஆளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் நீங்கள் எப்பொழுதும் ஆடம்பரமான வாழ்க்கை வாழவே விரும்புவீர்கள். உங்கள் நட்சத்திராதிபதிக்கு நட்பு கிரகமான கேது 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் சஞ்சரித்து பல நற்பலன்களை வாரி வழங்கும் குரு 02.08.2016 முதல் 6ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண விஷயங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. 
கிருத்திகை 1&ஆம் பாதம்
நல்ல உழைப்பாற்றலைக் கொண்டு விளங்கும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சூரியன் என்பதால் அதிக முன்கோபம் உடையவராக இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் கேது சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குரு 02.08.2016 வரை 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். அஷ்டம சனி நடைபெறுவதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 
அதிர்ஷ்டம் அளிப்பை
எண்    1,2,3,9
நிறம்    ஆழ்சிவப்பு
கிழமை   செவ்வாய்
கல்    பவளம்
திசை    தெற்கு
தெய்வம்   முருகன்

பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி  மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, பாம்பு புற்றுக்கு பாலூற்றுவது, முட்டை வைப்பது நல்லது. கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது சிறப்பு. அஷ்டமச்சனி நடப்பதால் சனி ப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் சனிக்கு பரிகாரம் செய்வது ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.


For your consultation




Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


No comments: