Monday, December 21, 2015

அனைத்துலக சோதிடவியல் மாநாடு 2


 





மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும்
உலகத்தமிழ் மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும்(ம.ச.ஆ.762/13)
இணைந்து நடத்தும்

அனைத்துலக சோதிடவியல் மாநாடு 2

நாள்    22-23 சனவரி 2016
நேரம்       காலை 8.00 – மாலை 7.00
நிகழ்விடம்    கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம்

ஆதரவு     மலாயாப் பல்கலைக்கழக   இந்து சங்கம்
சோதிடவியல்

சோதிடவியல் துறை தமிழர்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும் நெருங்கியத் தொடர்புடையது. பழந்தமிழர்களின் வாழ்க்கை விழுமியங்களை எடுத்துரைக்கும்  சங்க இலக்கியம், தமிழ்க்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், அறநூல்கள் போன்றவை சோதிடம் சார்ந்த செய்திகளை பரவலாகக் கொண்டிருப்பதானது, தமிழர் வாழ்வில் இக்கலை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையிலும் இக்கலையின் தாக்கம் இருப்பதை அறியமுடிகின்றது.  மலேசியத் தமிழர்களுக்கும் சோதிடக் கலைக்குமான தொடர்பு சற்றேறத்தாழ 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியாகத் தமிழர் மரபின்  பல்வேறு கலைகளைத் தங்களின் வாழ்க்கையில்   இன்றளவும் அவர்கள் போற்றி வருகின்றனர். அவற்றுள் மலேசியத் தமிழர்களிடம் சோதிட நம்பிக்கையின் தாக்கம் சற்று மேலோங்கியே உள்ளது. ஆனால் இன்று மக்களிடையே இக்கலையைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் பெருகத் தொடங்கின. சோதிடக் கலையைப் பற்றி எதிர்மறையான கருத்துகளைக் கூறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  உயரிய நோக்கத்துக்காக நமது முன்னோர்களால் ஆக்கப்பட்ட இக்கலை மனிதத் தவறுகளால் இத்தகைய எதிர்மறை கருத்துகளுக்கு ஆளாகிவருகின்றது. ஆனாலும் இக்கலையின்பால் ஆழ்ந்த ஈடுபாடும் நம்பிக்கையும் தெளிவும் கொண்ட தரப்பும் இருக்கவே செய்கின்றனர்.

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இக்கலையைப் பற்றிய சரியான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இறை, உடல், உயிர், மனம் பற்றிய தெளிவைப் பெற்று ஆன்மக் கடைத்தேற்றம் பெறுவதற்கு இக்கலையை நமது  முன்னோர் கையாண்ட  உயரிய நோக்கம் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும். இக்கலை தவறாகக் கையாளப்படுவதற்கான காரண காரியங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பிழை கலையில் இல்லை மாறாக அதைக் கையாளும் மனிதனிடம்தான் உள்ளது எனும் உண்மை தக்க சான்றுகளோடும் ஏதுக்களோடும் எடுத்துரைக்கப்பட வேண்டும். இன்றைய இளையதலைமுறையினர் இக்கலையின் உண்மை நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள ஆராய்ச்சித் துறை மாணவர்கள்    இத்துறையில் ஈடுபட்டு ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் பயன்தரும் பல்வேறு  ஆய்வு முடிவுகளை வெளிக்கொணர வேண்டும்.  மேற்கண்ட நோக்கங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்ற வகையில் இம்மாநாடு அமைகின்றது.

1.3.2015 முதலாவது அனைத்துலகச் சோதிடவியல் மாநாடு தமிழகத்தில் குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. அம்மாநாட்டை தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மையமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வு துறையும் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தன. அம்மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இரண்டாவது மாநாடு மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் மலேசியா, தமிழகம், சிங்கை, இலங்கை ஆகிய நாடுகளைச் சார்ந்த பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நோக்கம்:

1.சோதிடக்கலையின் உயரிய நோக்கங்களை அறிமுகப்படுத்துதல்

2.சோதிடக்கலையின்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்மறைச் சிந்தனைக்கான காரண  காரியங்களைக் கண்டறிதல்

3.சோதிடக்கலைத் துறையில் ஈடுபட்டு ஆய்வுகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளைக்  கண்டறிதல்

நிகழ்வு:

22.1.2016 (வெள்ளிக்கிழமை)

காலை 8.00-9.00         :   பதிவும் பசியாறலும்
காலை 9.00-10.00      :மாநாட்டின் தொடக்கம்
·      தலைமையுரை
·      சிறப்புரை
·      திறப்புரை
காலை 10.00-11.00     :    முதல் அமர்வு
காலை 11.00-11.30     :     சிற்றுணவு
காலை 11.30-1.00       :    இரண்டாம் அமர்வு
நண்பகல் 1.00-2.00     :    உணவு
பிற்பகல்  2.00-4.00     :    மூன்றாம் அமர்வு
மாலை    4.00-5.00      :    கருத்துக்களம்
மலை  5.00-5.30          :    சிற்றுணவு
மாலை 5.30-7.30         :    ஓய்வு
இரவு  7.30-8.30          :    இரவு உணவு

23.1.2016 (சனிக்கிழமை)

காலை 8.00-9.00          :   பசியாறல்
காலை 9.00- 10.30       :   நான்காம் அமர்வு
காலை 10.30-11.00      :   சிற்றுணவு
காலை 11.00-12.30      :   ஐந்தாம் அமர்வு
நண்பகல் 12.30-1.00    :   மாநாட்டு நிறைவு
பிற்பகல் 1.00-2.00       :   உணவு


பதிவு பாரம்

பெயர் : ...............................................................
நாடு :   ...............................................................
அடையாள அட்டை எண்:...................................
செல்பேசி எண்:  .................................................
மின்னஞ்சல் : .....................................................
முகவரி : .............................................................            
 ........................................................................................................................................................                                     

நான் இம்மாநாட்டில் பங்கெடுக்க ஆர்வமாக உள்ளேன். ஏற்பாட்டுக் குழுவினர் விதிக்கும் எல்லா விதிகளுக்கும் கட்டுப்படுவேன் என உறுதியளிக்கிறேன்.

பங்கேற்புக் கட்டணம் :
வெளிநாட்டுப் பேராளர்கள் : RM100
மலேசியப் பேராளர்கள்       : RM50

இத்துடன் RM100            RM50

ரொக்கம்/காசோலை இணத்துள்ளேன்.


...............................                          ...................                                                                  கையொப்பம்                                           நாள்

மாநாட்டுச் செயற்குழு:
ஆலோசகர் :  முனைவர் மோகனதாசு இராமசாமி

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்:
பேரா.கோவி.சிவபாலன்(மலேசியா)
பேரா. மகாலட்சுமி(தமிழ் நாடு)

செயற்குழு உறுப்பினர்கள்:
முனைவர் எஸ்.மணிமாறன் (மலேசியா)
இளங்குமரன்(மலேசியா)
சோதிடர் ஓம் உலகநாதன்(தமிழ் நாடு)
ஜோதிடத்திலகம் நெல்லை வசந்தன்(தமிழ் நாடு)
சோதிடர் முனைவர் முருகுபாலமுருகன்
சோதிடர் கா.மீனாள்(தமிழ் நாடு)
புலவர் நவமணி சண்முகம்(தமிழ் நாடு)
சோதிடர் மாடசாமி(தமிழ் நாடு)
சோதிடர் மீனாட்சி சுந்தரம்(தமிழ் நாடு)
சோதிடர் சுப்பிரமணியம்(மலேசியா)
சோதிடர் பாலகிருஷ்ணன்(மலேசியா)

தொடர்புக்கு     
பேரா.கோவி. சிவபாலன்     :012-3503290
பேரா.மகாலட்சுமி  : 0091-9884364603

செயலகம்
இந்திய ஆய்வியல் துறை
மலாயாப்  பல்கலைக்கழகம்
செயலகத் தொடர்பு எண் :   
பேரா.கோவி. சிவபாலன்     :012-3503290


No comments: