Sunday, December 27, 2015

தனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்

தனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

தனுசு ;  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
செய்த நன்றியை மறவாத குணமும் நல்ல மனவலிமையும், வைராக்கியமும் கொண்டவராகவும் விளங்கும் தனுசு ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 9லும், கேது பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பே ஆகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். வரும் 02.08.2016 முடிய குரு பகவான் பாக்கிய ஸ்தானனமான 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு அதிகமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்காக மருத்துவ சிகிச்கை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்வடுவது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருக்கவும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்தியோகம்
பணியில் சற்று வேலைபளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்து கொண்டால் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன் படுத்தி கொள்ளவும்.
அரசியல்
பெயர் புகழக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்து கொள்ள வேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக தானிருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாட பட வேண்டி வரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டார்கள். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். 
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக் கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்று விட முடியும். தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனை தரும்

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் உங்கள் ராசியாதிபதி குருவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருவும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையேயும் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பிள்ளைகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 6,11க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் குடும்பத்தில் நிம்மதியான நிலையே இருக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில்  உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைய மாட்டார்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குரு 9ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடி இருக்கும். வீடு மனை போன்றவற்றை வாங்குவதன் மூலம் செய்யும் செலவுகள் சுபச் செலவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும்.

இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016 முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் 6,11க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஒரளவுக்கு முன்னேற்றப் பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. 02.08.2016 முதல் குரு 10ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் சற்று தாமதப்படும். 

இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்றப் பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தினை அடைந்து விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர் பார்க்கும் உயர்வினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும்.

இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ஆம் வீட்டிலும், கேது பகவான் 5,12க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அதிக சிரமங்களை எதிர் கொண்டே வெற்றியினைப் பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் ஒரளவுக்கு ஏற்றம் அளிக்கும். போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

மூலம்
பிடிவாத குணமும் அதிகாரம் செய்யும் இயல்பும் கொண்ட மூல நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி கேது பகவான் என்பதால் பிறருக்கு உதவி செய்து வாழக் கூடிய பண்பு இயற்கையிலேயே இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் உங்கள் நட்சத்திராதிபதி கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். 02.08.2016 வரை குரு பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கவிருப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும், குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். ஏழரை சனியில் விரய சனி தெடருவதால் தேவையற்ற வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூராடம்
எந்தச் சூழ்நிலையிலும் நல்ல மனநிலையில் இருக்கும் பூராட நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் தயாள குணமும் திடகாத்திரமான உடலும் இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். ராசியாதிபதி குரு 02.08.2016 வரை பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கவிருப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, மனை வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். விரய சனி தெடருவதால் எதிலும் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. 
உத்திராடம் 1ஆம் பாதம்
மனித உணர்வுகளை மதிக்கக் தெரிந்த உத்திராட நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் எப்பொழுதும் கலகலப்பாக பேசிக்கொண்டேயிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ராசியாதிபதி குரு பகவான் 02.08.2016 வரை பாக்கிய ஸ்தானமான 9ல் சஞ்சரிக்கவிருப்பதகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். சனி 12ல் இருப்பதால் பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. 

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   1,2,3,9
கிழமை  வியாழன், திங்கள்,
திசை    வடகிழக்கு,
நிறம்   மஞ்சள், சிகப்பு,
கல்    புஷ்ப ராகம்,
தெய்வம்  தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது. சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்வது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது. நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda 

No comments: