Monday, March 31, 2025

Today rasi palan - 01.04.2025

 


Today rasi palan -
01.04.2025

இன்றைய ராசிப்பலன் -  01.04.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-04-2025, பங்குனி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.33 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம் பகல் 11.06 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். அங்கார மாத சதுர்த்தி. கிருத்திகை விரதம். விநாயகர்- முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

 சூரிய ராகு புதன்(வ) சுக்கி(வ) சனி

சந்தி

குரு

செவ்

 

 

01.04.2025

 

 

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  01.04.2025

மேஷம்

இன்று குடும்பத்தில் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களில் வெளிநபர்களின் அறிமுகம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

கடகம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும்.

சிம்மம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன்பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். சுபகாரியம் கைகூடும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மாலைக்கு பின் மன உளைச்சல்கள் குறைந்து சாதகமான சூழ்நிலை உருவாகும்.

துலாம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது. ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுபாடு தேவை.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினை ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

இன்று நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாக முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.