Friday, January 31, 2025

Today rasi palan - 01.02.2025

 


Today rasi palan -
01.02.2025

இன்றைய ராசிப்பலன் -  01.02.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

01-02-2025, தை 19, சனிக்கிழமை, திரிதியை பகல் 11.38 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 02.33 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் பின்இரவு 02.33 வரை பின்பு சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

 சுக்கி ராகு

 

குரு (வ)

செவ் (வ)

சந்தி சனி

 

01.02.2025

 

சூரிய புதன்

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  01.02.2025

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பழைய கடன்கள் குறையும்.

மிதுனம்

இன்று உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகள் வகையில் மனகவலைகள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.

கடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

துலாம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாக கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். எதிலும் பொறுமையுடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

கும்பம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.

Thursday, January 30, 2025

Today rasi palan - 31.01.2025

 


Today rasi palan -
31.01.2025

இன்றைய ராசிப்பலன் -  31.01.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

31-01-2025, தை 18, வெள்ளிக்கிழமை, துதியை பகல் 01.59 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பின்இரவு 04.14 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

 சுக்கி ராகு

 

குரு (வ)

செவ் (வ)

சந்தி சனி

 

31.01.2025

 

சூரிய புதன்

 

 

 

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  31.01.2025

மேஷம்

இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம்  பெருகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கடகம்

இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் டென்ஷன் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் பண பிரச்சினையை தவிர்க்கலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் -னுகூலம் உண்டாகும்.