Thursday, December 24, 2015

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 சிம்மம்

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்



ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
சிம்மம் : மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
நல்ல மனவலிமையும், உண்மை பேசும் குணமும், வசீகரமான தோற்ற அமைப்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை சர்ப கிரகங்களான இராகு ஜென்ம ராசியிலும், கேது 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சனியும் சுக ஸ்தானமான 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வரும் 02.08.2016 முதல் குரு தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும் பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.  பணம்  கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர் கொண்டே முன்னேற்ற அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறு சிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும் என்றாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. மன குழப்பங்கள் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். சுப காரியங்கள் சில தடைகளுக்குப்பின் நடைபெறும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதாரநிலை  தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளாலும் பிரச்சனைகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.
உத்தியோகம்
பணியில் வேலை பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலை பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
அரசியல்
மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதையும் சமாளித்து விட முடியும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தோன்றி மறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப்பின் நல்ல வரன்கள் அமைய பெறும் பண வரவுகளில் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது மூலம் விரயங்களை குறைக்க முடியும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் மதிப்பெண்களை பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
இராகு பகவான் ராசியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் கேது பகவான் 5,8க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 7ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். சனி பகவான் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகு பகவான் 3,10க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் 5,8க்கு அதிபதியான குருவின்  நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் தேக்க நிலை இல்லாமல் தொழில் செய்ய இயலும். பயணங்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016 முதல் 17.11.2016 வரை
இராகு பகவான் 3,10க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் இராகுவின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டிகள் சற்று குறையும். கூட்டாளிகள் பகை உணர்வு மறந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் வேலை பளுவை குறைக்க உதவும். வரும் 02.08.2016 முதல் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றப் பலன்களை அடையலாம். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல் படுவது நற்பலனை தரும்.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
இராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருபகவான் 2ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியான தடைகள் விலகும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமும் கிட்டும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபார ரீதியாக லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஆதரவும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்து கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும், கேது பகவான் 4,9க்கு அதிபதியான செவ்வாயின்  நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சில நேரங்களில் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களாலும் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் தோன்றினாலும் வர வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும்.

மகம்
இந்த ஜெகத்தையே ஆளக்கூடிய திறமை கொண்ட மகத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி கேது பகவான் என்பதால் எதிரிகளை ஒட ஒட விரட்டக் கூடிய வலிமையைப் பெற்றிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7லும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கிய விஷயத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது.  சனி 4ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். 02.08.2016ல் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர பாக்கியமும் உண்டாகும். பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். 
பூரம்
சுக வாழ்வையும், சொகுசு வாழ்வையும் அதிகம் விரும்பக் கூடிய குணஅமைப்பு கொண்ட பூர நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால், வளமாக வாழக்கூடிய அமைப்பினைப் பெற்றிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7லும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு பகவான் 02.08.2016 முதல் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், பண வரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளிலும் சாதகமான பலன்கள் உண்டாகும். சனி 4ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சுக வழ்வு பாதிப்படையும்.
உத்திரம் 1&ஆம் பாதம்
யார் மனதையும் புண்படுத்தாமல் பேசக் கூடிய பண்புடைய உத்திர நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல புத்திக் கூர்மையுடன் விளங்குவீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும் கேது 7லும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி 4ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உணடாகும். குரு பகவான் 02.08.2016 முதல் 2ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் கடன்கள் யாவும் குறையும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி ஒடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வினைப் பெறுவார்கள். பொருளாதார நிலை மேன்மையடையும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   1,2,3,9
நிறம்   வெள்ளை, சிவப்பு
கிழமை  ஞாயிறு, திங்கள்
கல்    மாணிக்கம்
திசை   கிழக்கு
தெய்வம்  சிவன்

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 7ல் கேது சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்குவது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது. கேதுவை வழிபடும் முறைகள் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. 9 முக ருத்ராட்சம் அணிவது நல்லது. சனி 4ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும், சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும். 

For your consultation



Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Person you sent money By western union money transfer 

Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001

No comments: