Friday, December 25, 2015

துலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகுஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்

துலாம் ;  சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்
வசீகரமான உடல்வாகும், அழகான முக அமைப்பும், யாருக்கும் பயப்படாத குணமும் கொண்ட துலா ராசி அன்பர்களே ! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் இராகுவும் 5ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். உங்களுக்கு ஏழரை சனியில் பாதச் சனி நடைபெறுவதால் குடும்ப வாழ்வில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என்றாலும், குரு 02.08.2016 வரை லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது, உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த இட மாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரித்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும் பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டிகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.
அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் சேமிக்க முடியும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர் பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
ராகு பகவான் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் கேது பகவான் 3,6க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குருவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்ற முடியும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றக் கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றக் கூடும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
ராகுபகவான் உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும், கேது பகவான் 3,6க்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குருவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மேன்மையாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம் செல்வாக்கு பெருகும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்களும், பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களும் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நடைபெறும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். வரும் 02.08.2016 முதல் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌரவமான நிலையினைப் பெற முடியும்.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும் கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். நிறைய போட்டிகளும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை -ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஜீவன ரீதியாக நிறைய நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பண வரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும் தேவையற்ற பயணங்களையும்  தவிர்ப்பது நல்லது.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும், கேது பகவான் தன களத்திராதியதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை தரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். Êசனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெற முடியும். கடன்கள் குறையும்.

சித்திரை 3,4&ஆம் பாதங்கள்
இறைப் பணி, ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகம் கொண்ட சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றிவிடக்கூடிய ஆற்றல் இருக்கும். ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபம் பெருகும். 02.08.2016 வரை குரு லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கைகூடும். அசையும் அசையா சொத்துகள் சேரும். ஏழரை சனி நடை பெறுவதால் குடும்பத்திலுள்ளவர்களல் வீண் செலவுகள் ஏற்படும். 
சுவாதி
நல்ல அறிவுக் கூர்மையும் திறமையும் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவான் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்களின் நட்சத்திராதிபதி ராகு பகவானே 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். 02.08.2016 வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். ஏழரைசனி நடைபெறுவதால் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் ஏற்படும். 
விசாகம் 1,2,3&ஆம் பாதங்கள்
அன்பும் பாசமும் விசுவாசமும் கொண்ட விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் இருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துகள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். 02.08.2016 வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏழரைச் சனி நடைபெற்றாலும் எதிலும் வெற்றியினைப் பெறக்கூடிய ஆற்றலைப் பெறமுடியும். செல்வம் செல்வாக்கு மேம்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்   4,5,6,7,8
நிறம்   வெள்ளை, பச்சை,
கிழமை  வெள்ளி, புதன்,
திசை   தென் கிழக்கு,
கல்    வைரம்
தெய்வம்  லட்சுமி
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை, வெள்ளை புள்ளிகள் உடைய பழுப்பு நிற பசு போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது. சர்ப சாந்தி செய்வதும், தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 
சனி பகவான் 2&ல் சஞ்சரித்து ஏழரை சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவது. சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும். நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவதும். நீலக்கல் மோதிரம் அணிவதும் நல்லது.



For your consultation


Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


No comments: