Saturday, December 21, 2019

சிம்மம் - புத்தாண்டு பலன் - 2020


சிம்மம் - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! நவகிரகங்களில் ராஜாவான சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகமான குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று  சஞ்சரிப்பதாலும், ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு லாபஸ்தானமான 11-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க கூடிய ஆண்டாக 2020-ஆம் ஆண்டு இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால் சிலருக்கு வயிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்--- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  சிலருக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்ட புத்திர பாக்கியம் இவ்வாண்டில் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் நவீனகரமான பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும்.
தொழில். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருந்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் விலகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து உங்களது கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளில் நல்லதொரு தீர்வு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிலும் புது தெம்புடனும் பொலிவுடனும் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவ செலவுகள் யாவும் குறையும். உணவு விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரண கோளாறுகள் உண்டாகுவதை தவிர்க்க உதவும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும்.
உத்தியோகம்
பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றம் கிட்டும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளை பெற முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைப்பார்கள்.
கொடுக்கல் வாங்கல்
இந்தாண்டில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிடைக்கும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் வெற்றிக் கிட்டும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும்.
அரசியல்
உங்களது பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் எல்லாம் எளிதில் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கும் சென்று வரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்கள்
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செல்ல நேரிடும். கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறைந்து மன நிம்மதி உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
பெண்கள்
உடல் நிலை அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
மாணவ மாணவியர்
மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும்.

மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகளில் சரளமான நிலை இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பயணங்களால் சாதகப்பலனை அடைவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 01-01-2020 இரவு 09.38 மணி முதல் 04-01-2020 காலை 10.05 மணி வரை மற்றும் 29-01-2020 அதிகாலை 05.29 மணி முதல் 31-01-2020 மாலை 06.09 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சூரியன், சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இம்மாதம் தடை விலகி நற்பலன் அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 25-02-2020 பகல் 12.27 மணி முதல் 28-02-2020 அதிகாலை 01.08 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும்  பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.  சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 23-03-2020 மாலை 06.37 மணி முதல் 26-03-2020 காலை 07.16 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், சனி, 11-ல் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றமும், எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய தைரியமும் உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் இருந்து போட்டி பொறாமைகளும் குறையும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது,  சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் - 20-04-2020 அதிகாலை 00.37 மணி முதல் 22-04-2020 பகல் 01.18 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு சனி 6-லும், சுக்கிரன் 10-லும், ராகு 11-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்களை பெறுவீர்கள். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணம் பல வழிகளில் தேடி வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 17-05-2020 காலை 07.15 மணி முதல் 19-05-2020 இரவு 07.54 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசியதிபதி சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் புதன், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்து விட முடியும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். குரு பகவானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 13-06-2020 பகல் 02.45 மணி முதல் 16-06-2020 அதிகாலை 03.18 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது சிறப்பு. முருக கடவுளை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 10-07-2020 இரவு 10.55 மணி முதல் 13-07-2020 பகல் 11.15 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு சனி 6-ல், சுக்கிரன், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வதால் அனுகூலப் பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். விநாயக பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.
செப்டம்பர்.
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சனி 6-ல், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகள் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு செய்து வந்தால் மங்களங்கள் பெருகும்.
சந்திராஷ்டமம் - 03-09-2020 பகல் 02.15 மணி முதல் 06-09-2020 அதிகாலை 02.20 மணி வரை மற்றும் 30-09-2020 இரவு 08.35 மணி முதல் 03-10-2020 காலை 08.50 மணி வரை.
அக்டோபர்.
ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன் இல்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பெயர், புகழ் உயரும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 28-10-2020 அதிகாலை 02.30 மணி முதல் 30-10-2020 பகல் 02.58 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசியதிபதி சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அனுகூலப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாட்டையும் முருக வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 24-11-2020 காலை 08.52 மணி முதல் 26-11-2020 இரவு 09.20 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதும் அலைச்சலை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும்.  பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 21-12-2020 மாலை 04.30 மணி முதல் 24-12-2020 அதிகாலை 04.33 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9             நிறம் - வெள்ளை, சிவப்பு          கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் -  மாணிக்கம்          திசை - கிழக்கு       தெய்வம் - சிவன்


No comments: