Saturday, March 17, 2018

விளையாட்டுத்துறையில் மேன்மை


விளையாட்டுத்துறையில் மேன்மை  

     ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா. இது பாரதி நமக்கு சொல்லி தந்த பாடம். கல்வியில் சாதனைப் படைப்பதைப் போலவே விளையாட்டுத் துறைகளிலும் மற்ற துறைகளிலும் சாதனை படைக்க இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஒவ்வொரு மணி நேரமும் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. காலை 5 மணி தொடங்கியதிலிருந்து யோகா, தியானம், உடற்பயிற்சி, நாட்டியம், இசை, பாடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து என பல பயிற்சிகளுக்கு பிள்ளைகளை ஈடுபடுத்துவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
     பணம் எவ்வளவு செலவானாலும் பிள்ளைகளை ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றவே முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள். பிள்ளைகளை ஊக்குவிப்பது நல்ல செயல் என்றாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதிலும் திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை ஆராய்ந்து அதில் அவர்களை ஈடுபட செய்வது பெற்றோருக்கும் நல்லது. பிள்ளைகளுக்கும் நல்லது. 
     ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் வீட்டை கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுது போக்கு செயல்கள் பற்றி தெளிவாக அறியலாம். விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதற்கு முதலில் நல்ல தைரியமும், மனோ வலிமையும்  புத்திக் கூர்மையும் வேண்டும். இவற்றிற்கு காரகனாக விளங்கக் கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய் புதன் போன்ற கிரகங்களும் பலம் பெற்றிருந்தால் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும்.
     சூரியன் பலம் பெற்றால் நல்ல உடல் பலமும், சந்திரன் பலம் பெற்றால் மனோபலமும், செவ்வாய் பலம் பெற்றால் தைரியம் துணிவும், புதன் பலம் பெற்றால் புக்தி கூர்மையும், சனி பலம் பெற்றால் கால்களில் பலமும் உண்டாகும்.  
சனி, செவ்வாய் பலம் பெற்று 3,12ல் வலுவாக அமையப் பெற்றால் கைபந்து, கால்பந்து, ஒடி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.
     சுக்கிரன், சந்திரன் நீர் கிரகங்கள் என்பதால் 5ம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் பலமாக அமையப் பெற்றால் நீச்சல் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
     புதன் 5ஆம் அதிபதியாக இருந்தாலும் 5ல் அமையப் பெற்றாலும் புத்திக்கு வேலை தரக்கூடிய செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.
     குறிப்பாக 5ஆம் இடமும் 5ஆம் அதிபதியும் சூரியன், சந்திரன், செவ்வாயும் பலம் பெற்றால் விளையாட்டுத் துறைகளில் தைரியமாக செயல்பட்டு பல வெற்றிகளை குவிக்க முடியும். ஆணுக்கு பெண் குறைந்தவர்கள் இல்லை என்பதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆர்வம் உடையவர்களை முன்னேற விடுங்கள். அவர்களை மட்டம் தட்டி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதீர்கள்.


No comments: