Sunday, March 11, 2018

அமாவாசை பெணர்ணமி நாட்களில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

அமாவாசை பெணர்ணமி நாட்களில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள். 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் முன்கோபம், முரட்டு தனம், மனக்குழப்பம் போன்றவைகள் உண்டாவது இயற்கையான ஒன்று. ஆனால் சில நேரங்களில் மனிதன் தன்னிலை மறந்து எல்லை தாண்டி விடுவார்கள். நன்றாக தானே இருந்தார் ஏன் இப்படி செய்தார் என மற்றவர்கள் ஆச்சிரியப்படும்படி சிலரின் செயல்பாடுகள் இருக்கும். அதிலும் குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் அவர்களின் நடவடிக்கைகள் விநோதமானதாக இருக்கும். ஜோதிட ரீதியாக நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் இணையும் நாள் அமாவாசை. சூரியனுக்கு 7ல் சந்திரன் வரும் நாள் பௌர்ணமி ஆகும். 

அமாவாசை பெணர்ணமி நாட்களில் சூரியன், சந்திரனின் இழுப்பு விசை சக்தி அதிகமாகி பூமியில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதராரணமாக இந்நாட்களில் கடல் அலைகளில் சீற்றங்கள் அதிகமாக இருப்பதை காணலாம். கடந்த கால வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் போதும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் நிறைய இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. 
இதுபோலவே மனித உடலிலும் பலமாற்றங்கள் ஏற்படுகின்றன. மனித உடலில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. அமாவாசை பௌர்ணமி நாட்களில், சூரிய சந்திரனால் உடல் நீரானது இழுப்பு விசைக்கு உள்ளாக்கப்பட்டு வாத நீர், உப்பு நீர், விஷ நீர் ஆகியவை அதிகமாக சுரந்து வெளியேறுகின்றது. இதனால் மனிதனுக்கு உடல் நிலையில் பாதிப்பு தலைவலி, கை கால் வலி, சோர்வு, எதிலும் ஈடுபாடற்ற நிலை, முன்கோபம், மனக்குழப்பம், தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடும் நிலை போன்றவை ஏற்படுகின்றது. நோயாளிகளுக்கு கண்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மன நிலை பாதிக்கப்பட்வர்கள் இந்நாட்களில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். 

குறிப்பாக மனோகாரகன் சந்திரனின் நட்சத்திரங்களாகிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், சந்திர திசை அல்லது சந்திர புக்தி நடப்பில் இருப்பவர்களுக்கும், சந்திரனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகத்தின் திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்களுக்கும், ஜெனன ஜாதகத்தில் சந்திரன் பலவீனம் பெற்றவர்களுக்கும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மன அழுத்தங்கள் அதிகமாக இருக்கும்.  இந்நாட்களில் முடிந்தவரை அமைதியாக செயல்படுவது, தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது, தான தர்ம காரியங்களில் ஈடுபடுவது உத்தமம்.
         




No comments: