Monday, March 12, 2018

நீர் ஆதாரம்

நீர் ஆதாரம் 

தண்ணீர் பிரச்சினை இன்று பெரிய பிரச்சினையாகவே மாறிவருகிறது. நல்ல மழை பொழிந்தால்தான் பூமியில் நீர் ஊரும்.  பூமி குளிர்ந்தால்தான் ஊற்றுகள் உண்டாகும். ஊற்றுகள் நன்றாக இருந்தால்தான் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ முடியும். மாறி வரும்  இன்றைய சூழ்நிலையில் தார் ரோடுகளும், காங்கிரிட் கட்டடங்களும் நிறைய உண்டாவதால், மண் என்பது கண்ணால் பார்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அதற்காகத்தான் அரசாங்கம் கூட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. 
நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி சேகரித்தால் மட்டுமே அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்குத் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்கும் இல்லையெனில் தண்ணீரும் அரசாங்கத்தால் லிட்டர் கணக்கில் விற்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சொந்த வீட்டைக்கூட கட்டிவிடலாம். ஆனால் அந்த வீட்டில் நீர்வளம் சிறப்பாக இருந்தால் மட்டுமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும். இதற்கும் ஜோதிட ரீதியாக அவரவரின் 4ம் பாவமே காரணமாக அமைகிறது. 
ஒரு வீட்டின் உரிமையாளருடைய ஜாதகத்தைக் கொண்டு, அவர் வீட்டில் உள்ள கிணறு, போர் போன்றவற்றில் நீர் எப்படி இருக்கும் என்று கூறலாம். 4ம் பாவமானது நீர் ராசி என வர்ணிக்கக்கூடிய கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசியாக இருந்தாலும், 4ம் அதிபதி நீர் ராசிகளில்அமைந்திருந்தாலும், சந்திரன், சுக்கிரன் 4ம் அபதியின் சேர்க்கைப் பெற்றாலும், 4ம் வீட்டைப் பார்வை செய்தாலும் நீர் ஆதாரம் சிறப்பாக இருக்கும். 
4ல் அமையக்கூடிய கிரகங்களைப் பொறுத்தும் நீர் ஆதாரத்தினை அறியலாம். 4ல் சூரியன் பலமாக இருந்தால் தண்ணீர் மிகவும் ஆழமான இடத்தில் இருக்கும். சந்திரன் சுக்கிரன் 4ல் இருந்தால் நீரோட்டம் மிக அதிகமாக இருக்கும். செவ்வாய், கேது இருந்தால் பாறைகளுக்கிடையே நீர் கிடைக்கும். குரு பகவானிருந்தால் தண்ணீர் அருமையாகவும், சுவையாகவும் இருக்கும்.புதன் இருந்தால் மணல் அதிகமாக இருந்து, அதனடியில் நீர் ஊற்று சிறப்பாக இருக்கும். 
சனி இருந்தால் தண்ணீர் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தாலும் கறுப்பாகவும், உவர்ப்பாகவும் இருக்கும். ராகு பகவானிருந்தால் வறண்ட பூமியாக இருக்கும். 
ஆக சூரியன், குரு, புதன் போன்ற கிரகங்களின் ஆதிக்கம் 4ம் வீட்டிற்கு இருந்தாலும், பார்வை செய்தாலும் தண்ணீர் சுவையாகவும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். 


No comments: