Saturday, March 17, 2018

காரகத்வ தோஷம்

காரகத்வ தோஷம்

     காரகோ பாவநாசா என்ற சொல்லை அடிக்கடி ஜோதிடர் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதன் விளக்கம் என்ன என பார்த்தால் சகோதரகாரகன் செவ்வாய். சகோதர ஸ்தானம் 3ம் இடம் சகோதரகாரகன் ஆகிய செவ்வாய் சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷம் உண்டாக்குகிறது. குறிப்பாக இளைய சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு, இழப்பு போன்றவை உண்டாகிறது.
     தாய்காரகன் சந்திரன் தாய் ஸ்தானமாக கருத கூடிய 4ம் இடத்தில் இருப்பது தாய்க்கு தோஷத்தை உண்டாக்கும். தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, தாயிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். 
     தந்தைகாரகன் சூரியன் தந்தை ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்தால்  தந்தைக்கு தோஷத்தை உண்டாக்கும். தந்தைக்கு முன்னேற்ற தடை, ஆரோக்கிய பாதிப்பு, தந்தையிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். 
புத்திரகாரகன் குரு, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்பட தடை, தாமதநிலை, பிள்ளைகளால் மன கவலை போன்றவை உண்டாகிறது.
     களத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருப்பது களத்திர தோஷமாகும். இதனால் கணவன் மனைவிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு பிரச்சனை போன்றவை ஏற்படும்.
இதில் ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானமாகிய 8ஆம் இடத்தில் இருக்கும் போது ஆயுள் பலன் அதிகரித்து நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.     
காரகர்கள் அமையும் அந்தந்த வீடுகள் ஆட்சி வீடாக இருந்தால் தோஷம் ஏற்படாமல் கெடு பலன்கள் குறைந்து விடுகிறது.
     அது போல காரகர் அந்தந்த பாவங்களில் வீற்றிருந்தாலும் சுப கிரகங்களின் சேர்க்கை, சுபர்களின் பார்வை ஏற்படும் போது காரக தோஷம் அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுவதில்லை.
     


No comments: