Friday, March 16, 2018

கிரகங்கள் வக்ரம் விளைவுகள்

              கிரகங்கள் வக்ரம் விளைவுகள்
   
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். ஜெனன ஜாதகங்களை கணிக்கும் போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். ஆங்கிலத்தில் (ஸி) என குறிப்பிட்டிருக்கும்.  இதற்கு தமிழில் வக்ரம் என்றும் ஆங்கிலத்தில் ஸிமீtக்ஷீஷீரீக்ஷீணீபீமீ  என்றும் அர்த்தமாகும். கிரகங்கள் எப்பொழுது வக்ரம் பெறுகிறது. கிரகங்கள் ஜாதகத்தில் வக்ரம் பெற்றால் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா?
     நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி செல்வார்கள்.
     நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.
     மாதக் கோள்களான புதன், சுக்கிரன் ஆகிய இருவரும் சூரியனை ஒட்டியே எப்பொழுதும் சஞ்சரிக்கும் கிரகங்களாகும். சூரியன் அமைந்திருக்கும் வீட்டிற்கு அதிக பட்சம் முன்பின் 2 வீடுகளில் முன், புதனும், சுக்கிரனும் சஞ்சரிப்பார்கள்.
     சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், சூரியனுக்கு 14 டிகிரியில் சஞ்சரிக்கின்ற போது வக்ரம் பெற்று 20 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடையும். சுமார் 24 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கும். 
     சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் மற்றொரு கிரகமான சுக்கிரன் சூரியனுக்கு 29 டிகிரியில் வக்ரம் பெற்று 26 டிகிரிக்கு வரும் போது வக்ரம் நிவிர்த்தியாகும். சுமார் 42 நாட்கள் வக்ரம் பெறும்.
     ஒரு ராசியில் ஒன்றரை மாதங்கள் தங்கும் கிரகமான செவ்வாய் சூரியனுக்கு 228 டிகிரியில் வரும் போது வக்ரம் பெற்றும், 132 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 80 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிந்து கொள்ள சூரியனுக்கு 8ல் செவ்வாய் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று சூரியனுக்கு 6ல் செவ்வாய் வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.
     ஆண்டு கோளான குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும் போது வக்ரம் பெற்று 115  டிகிரிக்கு வருகின்ற போது குரு வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும். இதனை எளிதாக அறிய ராசி சக்கரத்தில் சூரியனுக்கு 9ல் குரு வருகின்ற போது குரு வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் வரும் போது வக்ர நிவர்த்தியடையும்.
     ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். 
   ஜெனன ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் பல்வேறு எதிர்மறையானப் பலன்களை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டதிபதி வக்ரம் பெறுகிறதோ அவ்வீட்டின் காரக பலனும், எந்த கிரகம் வக்ரம் பெறுகிறாதோ அக்கிரகத்தின் காரக பலனும் பாதிக்கப்படுகிறது. குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது. புதன் வக்ரம் பெற்றால் கற்ற கல்வியை பயன் படுத்தாமல் வேறு துறைக்கு செல்லும் சூழ்நிலை, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. செவ்வாய் வக்ரம் பெற்றால் உடன்பிறப்பிடம் பிரச்சனை, பூமி மனை யோகம் அமைய தடை உண்டாகும். சுக்கிரன் வக்ரம் பெற்றால் சகோதரியிடம் கருத்து வேறுப்பாடு, திருமண வாழ்வில் நிம்மதி குறைவு ஏற்படுகிறது. சனி வக்ரம் பெற்றால் வேலை ஆட்கள் மூலம் பிரச்சனை, ஆரோக்கிய ரீதியாக எதிர்ப்பு சக்தி குறைவு உண்டாகிறது. வக்ரம் பெற்ற கிரகங்களின் திசை புக்தி காலங்களில் நற்பலன்கள் ஏற்படுவதில்லை என்பதால் இக்காலங்களில் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 

No comments: