Monday, June 22, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015 2016 துலாம்

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்) 



குரு பெயர்ச்சி பலன்  2015  2016 துலாம்
05.07.2015 முதல் 02.08.2016 வரை 

துலாம் ; சித்திரை 3,4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்
அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட துலா ராசி அன்பர்களே! பொன்னவனான குரு பகவான் வரும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல்  சஞ்சாரம் செய்கிறார். குரு 3,5,7ஆம் வீடுகளை பார்வை செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும், குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும். 08.01.2016ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால்  ராகு 11ல் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் எதிலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும்.ஏழரைசனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.  குடும்பதிலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஏழரை சனியால் பல இடையூறுகளை சந்தித்து வந்தாலும் குரு 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் தற்போது கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூற முடியாது.

குடும்பப் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்.

உத்தியோகம்
பணியில் தடைப்படு கொண்டிருந்த உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.

அரசியல்
பெயர் புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய பணவரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுப காரியங்கள் யாவும் கை கூடும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

கலைஞர்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள்.

மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும்.  பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் ராசியாதிபதி சுக்ரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11&ல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களையே அடைய முடியும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். கேது 6ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களே உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு விரய ஸ்தானத்தில் 12ஆம் வீடான கன்னியில் சஞ்சாரம் செய்வதால் எதிர் பாராத வீண் விரயங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களால் நடக்க விருந்த சுபகாரியங்களும் தடைப்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவும் குறைவடையக்கூடிய காலம் என்பதால் கவணமாக செயல்படுவது நல்லது, தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர் பாராத வீண் விரயங்கள் உண்டாகும். ராகு 11ல் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11&ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல  அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
இக்காலங்களில் குரு பகவான் சிம்ம ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஏழரை சனி தொடருவதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும், உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கடன்கள் குறையும்.பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

சித்திரை 3,4ஆம் பாதங்கள்
நல்ல அறிவு கூர்மையும், நடைமுறைக்கேற்றவாறு வாழும் பண்பும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

சுவாதி
அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்களை அடைய முடியும். வேலை பளு குறையும்.

விசாகம் 1,2,3ஆம் பாதங்கள்
நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 11&ல் குரு சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் தடைபட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்   4,5,6,7,8
நிறம்   வெள்ளை, பச்சை,
கிழமை  வெள்ளி, புதன்,
திசை   தென் கிழக்கு,
கல்    வைரம்
தெய்வம்  லட்சுமி
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 08.01.2016 முதல் 5ல் கேது சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வதும், தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. சனி பகவான் 2ல் சஞ்சரித்து ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: