Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - ரிஷபம்

 

புத்தாண்டு பலன் & 2021 - ரிஷபம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4&ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2&ஆம் பாதங்கள்.

ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும் சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷபராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9&ல் சஞ்சாரம் செய்வதால் உங்களது பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பண வரவுகள் மிக சிறப்பாக இருப்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசியில் ராகு, 7&ல் கேது சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் வலமான பலனை அடைய முடியும். கணவன்& மனைவியிடையே சின்ன சின்ன விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகமானப் பலனை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடு தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

இவ்வாண்டில் பொன்னவன் என போற்றப்பட கூடிய குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9&ஆம் வீட்டில்   வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் உங்களது பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல்& வாங்கல் சரளமான நிலையில் நடைபெறுவதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். 

உங்கள் ராசிக்கு 9&ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் தொழில் ஸ்தானமான 10&ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடைகளும், முன்னேற்றத்திற்கு இடையூறுகளும் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

 

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலை சற்று சோர்வடையும். முன் கோபத்தை குறைத்து கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் சிறப்பான அனுகூலங்களை பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை

பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதும், எதிலும் சிக்கனமாக இருப்பதும் நல்லது.

கொடுக்கல்& வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான முன்னேற்றங்களை அடைய முடியும். கொடுத்த தொகைகளும் தடையின்றி வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகப்பலனை அடைய முடியும். கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைய முடியும் என்றாலும் 06&04&2021 முதல் 14&09&2021 உள்ள காலத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும், புதிய முயற்சிகளிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் கடனுதவிகள் கிட்டும்.

உத்தியோகம்

உங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகைகள் தடையின்றி வந்து சேரும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்றாலும் சற்றே அலைச்சலும் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் எதையும் சமாளித்து வெற்றி பெறலாம்.

பெண்கள்

பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளால் உடல் அசதி, சோர்வு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் என்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிக்கலாம்.

அரசியல்

எல்லா வகையிலும் முன்னேற்றங்களையும், பதவி உயர்வுகளையும் பெறுவீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் சிறுசிறு செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். மேடை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். விளை பொருளுக்கேற்ற விலையினை சந்தையில் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். விளை நிலங்களை வாங்க முடியும்.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் ஓரளவுக்கு தடையின்றி கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சக நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பத்திரிக்கைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் நல்ல விளம்பரம் கிட்டும். படபிடிப்புகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கார், பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும்.

மாணவ& மாணவியர்

மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். மனது அலைபாயக் கூடிய காலம் என்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. பயணங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நன்மை அளிக்கும்.

 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 5,6,8             நிறம் & வெண்மை, நீலம்,          கிழமை & வெள்ளி, சனி

கல் &  வைரம்   திசை & தென்கிழக்கு,         தெய்வம் & விஷ்ணு, லக்ஷ்மி

No comments: