Friday, March 24, 2017

இன்று - 24.03.2017

இன்று -  24.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

நலம் சேர்க்கும் குரு பார்வை!-  -முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--முனைவர் முருகு பாலமுருகன்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!-  -சரவணன் Gendral Sec ICAS

திருமணத்தை உறுதியாக்கும் பங்குனி உத்திர கல்யாண விரதம்! (வாரம் ஒரு பரிகாரம்)-            -விசு அய்யர்

காகம் சொல்லும் சகுணம்!- பிரசன்ன ஜோதிட வித்தகர் அம்சி விவேகானந்தன்

பிரம்மச்சரியத்தால் சாதனை படைக்கலாம்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

புராடத்தினரின் புகழ் பெருக்கும் பரிகாரம்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
-ஜோதிஷண்முகம்

ஐந்து வகை ஆயுள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                              -பிராஜசேகரன் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


குறியீடுகளின் தத்துவம்!-        சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (26-3-2017 முதல் 01-04-2017 வரை) பங்குனி 13 முதல் 19 வரை

                                    முனைவர் முருகுபாலமுருகன்
இன்றைய  பஞ்சாங்கம்
24.03.2017, பங்குனி - 11, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.54 வரை பின்பு தேய்பிறை துவாதசி, திருவோணம் நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு அவிட்டம், மரணயோகம் மாலை 04.45 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, ஏகாதசி பெருமாள் - ஹயக்ரீவர் வழிபாடு உத்தமம், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது 
திருக்கணித கிரக நிலை
24.03.2017


சந்தி
ராகு
சனி

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  24.03.2017
மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சனைகள் குறைய உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
ரிஷபம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. பேச்சை குறைப்பது நல்லது.
கடகம்
இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தீடீர் தன வரவு உண்டாகி கடன்கள் குறையும். வேலையில் பணிச்சுமை கூடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது,
துலாம்
இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு சுமாராக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
இன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலம். வியாபாரம் ரீதியாக கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது.
மீனம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


No comments: