Friday, March 17, 2017

வார ராசிப்பலன் - - மார்ச் 19 முதல் 25 வரை 2017

வார ராசிப்பலன் -  - மார்ச்  19 முதல் 25 வரை   2017
 (பங்குனி 6 முதல்  12 வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம்செல்வாக்கு யார் மூலம் கிடைக்கும்?
-     &முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்    &முனைவர் முருகு பாலமுருகன்

வார ராசிபலன் 19&3&2017 முதல் 25&3&2017 வரை
                              &முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!
&டாக்டர் இராரகு M,Sc Astro

நூறாண்டு வாழும் யோகம்!  குமார சுவாமியம் கூறும் பன்னிருபாவப் பலன்கள்!                          &பிராஜசேகரன் M.Phil Astro

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மூலத்தில் பிறந்தோர் முன்னேறும் நெறிகள்நட்சத்திரப்பரிகாரங்கள்!
&ஜோதிஷண்முகம்

கடன் சுமை அகற்றும் சதுரங்க பந்தம்!
&விசு அய்யர்

அண்ணனை பகைக்கும் தம்பிகள் யார்?
&சரவணன் Gendral Sec ICAS

உலக அழகிக்கும் தாமதத் திருமணம் ஏன்?
&ஜோதிடச்சுடர் ஞானரதம் M.A.Astro. M,Phil
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி!
&முனைவர் முருகு பாலமுருகன்


சுக்கி வ
புதன்
சூரிய
செவ்



கேது 

திருக்கணித கிரக நிலை





ராகு
சந்தி

சனி 

சந்தி

               
குரு  (வ)


கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

விருச்சிகம்  17-03-2017 இரவு 08.40 மணி முதல் 20-03-2017 காலை 09.11 மணி வரை.
தனுசு                                20-03-2017 காலை 09.11 மணி முதல் 22-03-2017 இரவு 08.33 மணி வரை.
மகரம்               22-03-2017 இரவு 08.33 மணி முதல் 25-03-2017 அதிகாலை 04.53 மணி வரை.
கும்பம்             25.03.2017 அதிகாலை 04.53 மணி முதல் 27.03.2017 காலை 09.38 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

23-03-2017 பங்குனி 10 - ஆம் தேதி வியாழக்கிழமை, தசமி திதி, உத்திராட நட்சத்திரம், சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள், மேஷ லக்னம். தேய்பிறை



மேஷம்   அசுவினி, பரணி, கிருத்திகை  1--ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். பண வரவுகளில் நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத வகையில் கிடைக்கப் பெறும் உதவிகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் உடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணம் - கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக  கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     23, 24, 25.

சந்திராஷ்டமம்                      17-03-2017 இரவு 08.40 மணி முதல் 20-03-2017 காலை 09.11 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட  ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களில் தாமதநிலை உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் சிறுசிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் சற்று கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்                                     19, 25

சந்திராஷ்டமம்      20-03-2017 காலை 09.11 மணி முதல் 22-03-2017 இரவு 08.33 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளிமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து சென்றால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடித்து உற்றார், உறவிர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியிலும் ஆதாயங்கள் கிட்டும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்                     19, 20, 21, 22.

சந்திராஷ்டமம்                      22-03-2017 இரவு 08.33 மணி முதல் 25-03-2017 அதிகாலை 04.53 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் அதிசாரமாக சனி சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும்  கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் - மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம்உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கல்விக்காக மாணவர்களுக்கு அரசு வழியில் உதவிகள் கிட்டும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்                     20, 21, 22 ,23, 24.

சந்திராஷ்டமம்                      25.03.2017 அதிகாலை 04.53 மணி முதல் 27.03.2017 காலை 09.38 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பெரிய மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்ற படியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார், உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு - வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்                     23, 24, 25.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் - மனைவியிடையே தேவையற்ற வாக்கு - வாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல் - வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு தேவையற்றப் பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, முருகனை வழிபடுவது உத்தமம்-.

வெற்றிதரும் நாட்கள்                     19, 25.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் அதிசாரமாக சனி சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதபட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்வர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் மகிழ்ச்சி, நிம்மதி போன்ற யாவும் சிறப்பாக அமையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைவதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல் - வாங்கலில் சரளமான நிலை இருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்                     20, 21, 22.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
முன்கோபம் உடையவராகவும், எளிதில்  உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 5-ல் புதன், சுக்கிரன், 6ல் செவ்வாய், சஞ்சரிப்பதால் கணவன்மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் - உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் - கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும், அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும், ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சற்று அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள் தேடி வரும். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்                     19,23,24.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும்திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் - மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் - உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை நிலவினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். பணம் - கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் சில எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்                     20, 21, 22, 25.    

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 9-ல் குரு சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் - கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை திரும்ப கேட்பதால் சில வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்களுக்கு கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்                     19, 23, 24.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் செவ்வாய், அதிசாரமாக 11-ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன் - மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் - உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் - வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும், அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிவ பெருமானை வழிபடுவது, ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்                     20, 21, 22, 25.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன  ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். கணவன் - மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் - உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் - கொடுக்கல் வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. முருகவழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்                     20 ,21, 22, 23, 24.


No comments: