Monday, March 27, 2017

ஏப்ரல் மாத ராசிப்பலன் - 2017

ஏப்ரல் மாத ராசிப்பலன் - 2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

 வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மின் சாதனங்களை எங்கு அமைக்கலாம்?-  -முனைவர் முருகுபாலமுருகன்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS


வார ராசிபலன் (02-04-2017 முதல் 08-04-2017 வரை) பங்குனி 20 முதல் 26 வரை 
முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--                  முனைவர் முருகுபாலமுருகன்

உன்னதப் பலன்களை உடனடியாகத் தரும் 30 வகை பரிகாரங்கள்!-
ஜோதிட ஞானி சிரோன்மணி கடகம் இராமசாமி

குறியீடுகளின் தத்துவம்! –                  சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திராடத்தினரின் உயர்வு பெறும் வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

ராகு காலத்திலும் நல்ல நேரம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

ஆபரண்ங்களை அள்ளிச் சேர்க்கும் ஆறுமுகன்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                -விசுஅய்யர்

ஒளிமயமான எதிர்காலம் மூவரிடத்தில்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பாலாரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     
-முனைவர் முருகு பாலமுருகன்

                                                               
சூரிய
சுக்கி(வ)
---
செவ்
புதன்
சந்தி

கேது
திருக்கணித
கிரக நிலை


ராகு
சனி


குரு  (வ)

கிரக மாற்றம்
06.04.2017 சனி (வ) ஆரம்பம்
10.04.2017 புதன் () ஆரம்பம்
13.04.2017 ரிஷப செவ்வாய்
14.04.2017 மேஷ சூரியன்
16.04.2017 சுக்கிர (வ) நிவர்த்தி

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும்.
பரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது பிரதோஷ விரதமிருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம்  14.04.2017 அதிகாலை 04.09 மணி முதல் 16.04.2017 மாலை 04.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11ல் அமையப் பெற்று சூரியன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். குரு 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். வேலை தேடுபவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்-.
பரிகாரம். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்  16.04.2017 மாலை 04.40 மணி முதல் 19.04.2017 அதிகாலை 04.43 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ம் வீட்டில் சுக்கிரனும் மாத முற்பாதியில் 10ல் சூரியன் 11ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமையை பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிட்டும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய இடம் பொருள் வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  19.04.2017 அதிகாலை 04.43 மணி முதல் 21.04.2017 மதியம் 02.16 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு ருண, ரோக ஸ்தானமான 6ல் சனி பலமாக சஞ்சரிப்பதாலும் 10ல் செவ்வாய் புதன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றத்தை அடைவீர்கள். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உற்றார் உறவினர்களின் உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பொருளாதார ரீதியான தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பரிகாரம். சர்பசாந்தி செய்வது, விநாயகர் வழிபாடு, துர்கை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  21.04.2017 மதியம் 02.16 மணி முதல் 23.04.2017 இரவு 07.56 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு ராசியதிபதி சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்று 8ல் இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு 2ல் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு குறையிருக்காது என்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன்படுத்தும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  23.04.2017 இரவு 07.56 மணி முதல் 25.04.2017 இரவு 09.56 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு சமசப்தம ஸ்தானமான 7ல் சூரியன் 8ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.   எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் உண்டானாலும் அதற்கேற்ப அனுகூல பலன்களும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டிவிரதம் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்  25.04.2017 இரவு 09.56 மணி முதல் 27.04.2017 இரவு 09.51 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் இம்மாத தொடக்கத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் படிபடியாக குறையும். எந்தவித பிரச்சனைகளையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 7ல் செவ்வாய் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் இருந்த பிரச்சனைகள் விலகி நல்ல -னுகூலப் பலன்கள் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கப்பெறும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  27.04.2017 இரவு 09.51 மணி முதல் 29.04.2017 இரவு 09.46 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு 5ல் சுக்கிரன் மாத முற்பாதியில் 6ல் செவ்வாய் பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை மேலோங்கும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிட்டும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  02.04.2017 மதியம் 02.05 மணி முதல் 04.04.2017 மாலை 05.23 மணி வரை. மற்றும் 29.04.2017 இரவு 09.46 மணி முதல் 01.05.2017 இரவு 11.35 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, 4ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. கணவன்-மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடன் பிறப்புகளாலும் சில தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடலில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். மறைமுக எதிர்ப்புகளால் தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு லாபம் குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெறும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  04.04.2017 மாலை 05.23 மணி முதல் 06.04.2017 இரவு 11.01 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட உங்களுக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் குரு, 4ல் புதன் மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவும். லாபம் பெருகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் அடைவர். புதிய பொருட் சேர்க்கை அதிகமாகும். வெளியிலிருந்து வரவேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  06.04.2017 இரவு 11.01 மணி முதல் 09.04.2017 காலை 06.52 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சனி 11ல் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 3ல் செவ்வாய், பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பது பல்வேறு வகையில் வெற்றிகளை உண்டாக்கும் அமைப்பாகும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். தாராள தன வரவுகளால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல் வாங்கலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  09.04.2017 காலை 06.52 மணி முதல் 11.04.2017 மாலை 04.40 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே, புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தடை வீண் பிரச்சனைகளை சந்திக்கும் நேரிடும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 13ம் தேதி முதல் 3ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப் பலனை பெற முடியும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ப நல்ல அனுகூலப்பலன்களும் கிட்டும்.
பரிகாரம். சிவபொருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  11.04.2017 மாலை 04.40 மணி முதல் 14.04.2017 அதிகாலை 04.09 மணி வரை.



சுப முகூர்த்த நாட்கள்

02.04.2017 பங்குனி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

09.04.2017 பங்குனி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரியோதசிதிதி உத்திர நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

13.04.2017 பங்குனி 31 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

17.04.2017 சித்திரை 04 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டிதிதி மூல நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

21.04.2017 சித்திரை 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி அவிட்ட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

24.04.2017 சித்திரை 11 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை


30.04.2017 சித்திரை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமிதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

No comments: