குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;
விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! பொன்னவனான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயச் சனி நடைபெறுவதால் வாழ்வில் எதிர்பாராத விரயங்களை சந்திக்க வேண்டி வரும் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 21.06.2014 முதல் கேதுபகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். ராகு 11 இல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவுள்ளதால் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும் பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரிகளுக்கு
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டிகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் சேமிக்க முடியும்.
படிப்பு
கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர் பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9&இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்ற முடியும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றக் கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். 21.06.2014 முதல் ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். கேது 5&இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றக் கூடும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலைகளே உண்டாகும். பொருளாதார நிலை மேன்மையாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். அனுகூலப் பலன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். ராகு 11&இல் சஞ்சரிப்பதால் எந்த வித பிரச்சனைகளையும் முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12..2014 வரை
குரு பகவான் லாப ஸ்தானாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9&இல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம் செல்வாக்கு பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்களும், பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களும் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த வீடு மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌரவமான நிலையினைப் பெற முடியும்.
குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்தரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். நிறைய போட்டிகளும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை -ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு பகவான் 10&இல் சஞ்சரிப்பதால் ஜீவன ரீதியாக நிறைய நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பண வரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். 16.12.2014 முதல் உங்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது குறிப்பிடத் தக்கது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை
குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் வக்ரகதியிலிருப்பதால் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை அஜீரண கோளாறு போன்றவைத் தோன்றி மருத்துவ செலவுளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் ஆதரவை முழுமையாகப் பெற இயலாது. எதிர் பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஏழரை சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் மற்றவருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நற்பலனை தரும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை
குரு பகவான் லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை தரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஏழரை சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெற முடியும். கடன்கள் குறையும்.
விசாகம் 4ம் பாதம்
நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்புகளும் கிட்டும். ஏழரை சனி தொடருவதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும்.
அனுஷம்
பலருக்கு சுமை தாங்கியாகவும், மாறுபட்ட மனநிலையை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். ஏழரை சனியும் நடைபெறுவதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.
கேட்டை
வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறனும், நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஏழரை சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனம் தேவை.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் 1,2,3,9,10,11,
நிறம் ஆழ்சிவப்பு, மஞ்சள்,
கிழமை செவ்வாய், வியாழன்,
திசை தெற்க்கு,
கல் பவளம்,
தெய்வம் முருகன்,
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்யவும். 16.12.2014 வரை விரய சனியும் பின்பு ஜென்ம சனியும் நடைபெறவுள்ளதால் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுவும். 21.06.2014 முதல் கேது 5&இல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது சிறந்தது.
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment