Saturday, July 1, 2017

வார ராசிப்பலன் ஜுலை 2 முதல் 8 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுலை 2 முதல்வரை   2017 (ஆனி  18 முதல்  24 வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com






சுக்கி
செவ்
சூரிய,
புதன்

கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு

சனி ( )


குரு
சந்திர
               
கிரக மாற்றம்
03-07-2017  கடகம் புதன் அதிகாலை 03-05 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி               30-06-2017 அதிகாலை 01.31 மணி முதல் 02-07-2017 காலை 10.51 மணி வரை
துலாம்             02-07-2017 காலை 10.51 மணி முதல் 04-07-2017 இரவு 10.43  மணி வரை
விருச்சிகம்  04-07-2017 இரவு 10.43  மணி முதல் 07-07-2017 பகல் 11.21 மணி வரை
தனுசு                                07-07-2017 பகல் 11.21 மணி முதல் 09-07-2017 இரவு 11.24 மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
03-07-2017 ஆனி 19 ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

05-07-2017 ஆனி 21 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி அனுச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ராசியதிபதி செவ்வாய் 5-ஆம் அதிபதி சூரியன் சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் இருப்பதால் வெற்றிகளை குவிக்கும் உன்னத அமைப்பாகும். பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நல்ல அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். சுக்கிரன் 2-ல் வலுவாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கான நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில்- வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். சனி 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது நிதானத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4.

சந்திராஷ்டமம்      04-07-2017 இரவு 10.43  மணி முதல் 07-07-2017 பகல் 11.21 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் வலுவாக இருப்பதும், பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நாவடக்கத்தோடு செயல்பட்டால் வெற்றிகளை குவிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியுடன் செயல்பட முடியும். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் கிழமை முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 6.

சந்திராஷ்டமம்      - 07-07-2017 பகல் 11.21 மணி முதல் 09-07-2017 இரவு 11.24 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெற முடியும் என்றாலும் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் நிதானமாக செயல்படுவதன் மூலம் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த பிரச்சனையும் எதிர்கொண்டு நற்பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் சோர்வு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. தொழில்- வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -  5, 6, 7, 8.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே  அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 7, 8.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் வலுவாக இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகள் அனுகூலமாய் அமைவார்கள். 2-ல் குரு சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில்- வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். துர்க்கையம்மனை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே இவ்வாரம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி, ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பாகும். உங்களுக்குள்ள அலைச்சல் டென்ஷன் குறைந்து நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு  கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் பெற முடியும். தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 2, 5, 6, 7.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை  போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே இவ்வாரம் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சூரியன், புதன் 11-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பது நற்பலனை தரும் அமைப்பாகும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். கடந்த காலங்களில் இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில்- வியாபாரம் செய்பவர்கள்  கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியிருக்காது. தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத பலனே கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறர்க்கு வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பதும்  பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனி பகவானையும் விநாயகரையும் வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 7, 8.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். சுக்கிரன் 7-லும், குரு லாப ஸ்தானமான 11-லும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில்- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். லாபம் பன்மடங்காக பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். இந்த வாரம் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 2, 5, 6, 7-.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும், ராசியதிபதி குரு 10-ஆம் வீட்டில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில்- வியாபாரத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தட்சிணாமூர்த்தியை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 7, 8.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, இந்த வாரம் 6-ல் சூரியன், செவ்வாய் 9-ல் குரு, ராசியதிபதி சனி 11-ல் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில்- வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு புது வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பல புதிய பொறுப்புகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வத்துடன் படிப்பார்கள். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 6, 7.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இவ்வாரம் சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குரு 8-ல் இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி இருந்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில்- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8.

சந்திராஷ்டமம்                      30-06-2017 அதிகாலை 01.31 மணி முதல் 02-07-2017 காலை 10.51 மணி வரை

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று சாதகமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. முடிந்த வரை மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளி மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சிவ பெருமானையும் முருக கடவுளையும் வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8.

சந்திராஷ்டமம்                      02-07-2017 காலை 10.51 மணி முதல் 04-07-2017 இரவு 10.43  மணி வரை


No comments: