Friday, May 19, 2017

இன்று - 19.05.2017

இன்று -  19.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகு பாலமுருகன்

கர்ம வினைகள் போக்கும் கன்னிகா தானம்! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

பரணி படுத்தும் பாடு!-- -          -டாக்டர் இரா. ரகு M,Sc Astro

எதிரெதிர் கூட்டணியினர் இடம் மாறினால்! -     கே.பி. ஐயப்ப சர்மா

கோடிப் பொன் குவிக்கும் யோகம் யாருக்குத் தேடிவரும்! -  பி. ராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்! -
மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

பிள்ளை வரம் பெற்றுத் தரும் பனை! – (வாரம் ஒரு பரிகாரம்)-    விசு அய்யர்

சாதாரணம்-அசாதாரணம் ஆனதெப்படி?!- சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

கலியுக ராமனாகும் மகா பாக்கியம்? -      அம்சி விவேகானந்தன்

களத்திர தோஷம்! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம் M.Phil Astro

வார ராசிபலன் (21-05-2017 முதல் 27-05-2017 வரை) வைகாசி 7 முதல் 13 வரை

முனைவர் முருகு பாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
19-05-2017, வைகாசி -5, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.11 வரை பின்பு தேய்பிறை நவமி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 10.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1, ஜீவன் - 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். சுப முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சுக்கி

புதன்
சூரிய
செவ்

சந்தி
கேது 
திருக்கணித கிரக நிலை
19.05.2017



ராகு
சனி  (வ)

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  19.05.2017

மேஷம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் யாவும் அனுகூலப் பலன் அளிக்கும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சனைகள் குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோர் ஆதரவாய் இருப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
தனுசு
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.
மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பணப்பிரச்சனைகள் குறையும்.

No comments: