Monday, May 15, 2017

இன்று - 15.05.2017

இன்று -  15.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
15-05-2017, வைகாசி-1, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.56 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சுக்கி

புதன்
சூரிய
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
15.05.2017



ராகு
சந்தி
சனி  (வ)

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் - 15.05.2017

மேஷம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களில் கவணம் தேவை.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடன்பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவு ஏற்படக்கூடும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும்.
மகரம்
இன்று குடும்பத்தினர்க்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
கும்பம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.

No comments: