Wednesday, May 17, 2017

இன்று - 17.05.2017

இன்று -  17.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
17-05-2017, வைகாசி -3, புதன்கிழமை, சஷ்டி திதி மாலை 04.31 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 07.25 வரை பின்பு திருவோணம். அமிர்தயோகம் காலை 07.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2, ஜீவன் - 0. சஷ்டி முருக வழிபாடு நல்லது. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சுக்கி

புதன்
சூரிய
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
17.05.2017


சந்தி
ராகு
சனி  (வ)

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  17.05.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்
இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.
கடகம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்ககூடும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வருமானம் பெரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் வளர்ச்சிக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

No comments: