Saturday, March 24, 2012

காதலை ஏற்படுத்தும் 5ம் பாவம்

காதல் இன்றைய தலைமுறையினருக்கு இன்றியமைதாகி விட்டது. பழங்காலங்களில் நம்முடைய மூதாதையர்கள் சொந்தத்திலேயோ அல்லது அசலிலேயோ பார்த்து நிச்சயம் செய்தவர்களையே திருமணம் செய்து கொள்வார்கள். நம்மைச் சார்ந்தவர்களுக்கோ எந்த விதமான பங்கமும் ஏற்படாமலிருக்கும். இந்த முறைகள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாகும்.

சாதி, மதம், மொழி, இனம் மாறாமல் சந்ததிகள் தொடரும். ஆனால் ஒரு சிலர் இந்த எல்லாவிதமான சம்பிரதாயங்களையும் முறியடிப்பது போல காதல் என்னும் பெயரில் தாம் விரும்பியவர்களையே கைபிடித்து, அனைவருக்கும் பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறார்கள். மனதில் ஏற்படக்கூடிய இனக்கவர்ச்சியையும் காதல் என்ற பெயரால் தம்முடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்பவர்களும் உண்டு.

ஏன், இப்படி காதல் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொள்கிறார்கள் என்று பார்த்தால், அவரவரின் ஜனன ஜாதக ரீதியான 5ம் பாவத்தான் காரணமாக இருக்கிறது. ஒருவரைப் பார்த்தவுடன் மனதில் ஏற்படக்கூடிய ஈர்ப்புத் தன்மை, உணர்வுகள் அவற்றால் உண்டாகக்கூடிய பாசம், அவர்தான் தன் வாழ்க்கை என முடிவெடுக்கக்கூடிய மனோபாவம் அனைத்திற்கும் 5ம் பாவம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

5ம் பாவமானது பாதிக்கப்படாமல் இருந்து உறவுகளைக் குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், செவ்வாய், சந்திரன் ஆகியவை 5ல் அமையப் பெற்று, பாவகிரக பார்வையின்றி குரு போன்ற சுபகிரக பார்வைப் பெற்றிருந்தால் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்து நிச்சயம் செய்யக்கூடியவரையே ஜாதி, மதத்திற்க எந்த பங்கமும் ஏற்படாமல் மணம் செய்து கொள்ளக்கூடிய அருமையான யோகம் உண்டாகிறது.

அதுவே 5,7,9, பாவங்களில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலோ 5,7,9ம் அதிபதிகள் பாவகிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ பெற்றாலோ, தாம் விரும்பியவரை மணக்கும் அமைப்பு, கலப்புத் திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகிறது. 5ல் பாவிகள் அமையப் பெற்று 7ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகரித்து விரும்பியவரையே கைபிடிக்கும் நிலை உண்டாகும்.

பொதுவாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு சனி, ராகு போன்ற கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 5,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காதல் திருமணம், கலப்புத் திருமணம் உண்டாகிறது.

நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன், அறிவு காரகனாவார். ஆண்களுக்குச் சுக்கிரன் களத்திர காரகனாவார். பெண்களுக்குச் செவ்வாய் களத்திர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 5,7,9ல் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சனி, ராகு கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சனி பார்வை 5,7 க்கு இருந்தாலும் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அந்நியத்தில் ஓரளவுக்கு கலப்பில் திருமணம் செய்ய நேரிடும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும், 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்று 7ம் வீட்டைப் பார்வைச் செய்தாலும், காதல் திருமணம், கல்ப்பு திருமணம் உண்டாகிறது. பொதுவாக 5,7,9 ல் சனி ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றால் கலப்புத் திருமணம் காதல் திருமணம் உண்டாகிறது. அதுபோல  5,7 க்கு அதிபதிகள் கேது சேர்க்கைப் பெற்றாலும், கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும் காதல் திருமணம் உண்டாகிறது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



2 comments:

சிவநேசன்சிவா said...

பின் கூறுபவை ஓலை சுவடியில் உள்ளவை இதை தாங்கள் ஆராய்ந்து உங்கள் வலைதளத்தில் ஒரு பகுதியாக வெளியிடுங்கள்
இதில் கட்டமாக இல்லை நான் வரிசை படுத்துகிறேன் தாங்கள் அதை கட்டம் போட்டு வலைதளத்தில் வெளியிடுங்கள் .
1.கண்ணியலக்கினம்
2.சுத்தம்
3.சுத்தம்
4.சனி
5.சுத்தம்
6.செவ் ,ராகு
7.சுத்தம்
8.வியாழன்
9.சூரியன்,புதன்
10.சுக்கிரன்
11.சுத்தம்
12.கேது,சந்திரன்
இது மிகப்பெரிய மனிதனின் ஜாதகம் கணித்து கூறுங்கள்.பிறகு அவர் யார்யென்று கூறுகிறேன் .

Raja said...

நவம்சம், கிரகங்களின் நட்சத்திர சாரங்கள் இன்றி ஆராய்வது கடினமல்லவா?