Friday, March 30, 2012

வயிற்றில் பிரச்சினை தரும் அமைப்பு

யாரையாவது நாம் எதிரில் பார்க்க நேர்ந்தால் முதலில் கேட்கும் கேள்வி எப்படி இருக்கிறீர்கள? என்றுதான். அந்த  எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கு அர்த்தம் சொந்த வீடு இருக்கிறதா, கார் இருக்கிறதா, சொத்து சுகம் இருக்கிறதா என்பது பற்றி அல்ல. உடல் நிலை நன்றாக இருக்கிறதா என்றுதான்.

இன்று விஞ்ஞான முன்னேற்றம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு புதுப்புது நோய்களும் உண்டாகிக் கொண்டு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. அவற்றிற்கு நம் விஞ்ஞானிகள் புதுப்புது பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதை விரும்பினாலும் இந்த அவசர யுகத்தில் அது இயலாத ஒன்றாகி விடுகிறது.

எல்லாமே ரெடிமேடாக கிடைப்பது போல உணவு வகைகளும் ரெடிமேடாகவே கிடைப்பதால் மக்களுககு உணவு பழக்க வழக்கங்களும் சரியாக அமைய வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது. பொதுவாகவே உண்ணும் உணவு சரியாக இல்லையென்றால் அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை உண்டாகும் என்றாலும், எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து உடல்நிலையைப் பேணிக்காப்பவர்களுக்குக் கூட வயிறு  சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி அவதியுற வைக்கிறது. இதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம் என்று பார்த்தால் 5ம் பாவம் சரியாக அமையாதததுதான்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டைக் கொண்டு வயிறு, குடல், சிறுகுடல், குடலின் கீழ் பகுதி, உண்ணும் உணவு, ஜீரணிக்கும் உறுப்பு, அஜீரணக்கோளாறு, அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுமா என்பதனைப் பற்றி தெளிவாக அறியலாம். 5ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்று 5ம் அதிபதி வலுவாக இருந்தால் நல்ல ஜீரண சக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும்.

5ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் வயிறு கோளாறு, அஜீரண சக்தி, உண்ணும் உணவு செரிக்கும் அமைப்பு உண்டாகும்.

5ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றாலும் வயிறு கோளாறு, அஜீரணக் கோளாறு உண்டாகும்.

5ம் வீட்டில் சூரியன் அமையப் பெற்றால் நல்ல ஜீரண சக்தியும், அதிகமான உணவு உண்ணுவதில் அதிக  விருப்பமும் உண்டாகும். சூரியனுடன் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் குறிப்பாக செவ்வாய் அமையப் பெற்றாலும் ஜீரணக்கோளாறு உண்டாகி குடலில் புண் ஏற்படும்.

5ம் வீட்டில் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் விதவிதமான உணவு உண்பதில் அதிக அக்கறை கொண்டவராக இருப்பார். அதுவும் வளர்பிறை சந்திரன் என்றால் கேட்கவே தேவையில்லை. பாவிகள் பார்வை சேர்க்கை இல்லாமலிருந்தால் உண்ணும் உணவு உடனடியாக செரிக்கும் நல்ல ஆரோக்கியம் யாவும் அமையும். அதுவே தேய்பிறை சந்திரனாகி பாவிகள் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் அஜீரணக் கோளாறு, தேவையற்ற மனக் கவலைகளால் அல்சர் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கேதுவின் சம்மந்தம் சந்திரனுக்கு இருந்தால் குடலில் பாதிப்புகள் ஏற்பட்டு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

5ம் வீட்டில் செவ்வாய் பலமாக அமைந்து, சுபர் பார்வையோ, சுப்ர் சாரமோ பெற்றிருந்தால் சூடான உணவு உண்பதில் அதிக விருப்பம், காரமான உணவுகளை விரும்பி உண்ணக்கூடிய அமைப்பு உண்டாகும் என்றாலும், செவ்வாய் உஷ்ண கிரகம் என்பதால் பாவிகள் தொடர்பு இருந்தால் உண்ணும் உணவு செரிக்காத நிலை, குடல் புண், வாயு தொல்லை, அல்சர் போன்றவை உண்டாகும். குறிப்பாக நீசம் பெற்றிருந்தால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி காலங்களில் இன்னும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அதிகமாக ஏற்படுத்தும். வயிற்றுப் போக்கு கூட உண்டாகி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலை கூட உண்டாகும்.

அதுவும் பெண்கள் என்றால், செவ்வாய் ரத்த காரகன் என்பதால், பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கோளாறு, கருச்சிதைவு போன்றவை உண்டாகும். செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்று அமைந்து விட்டால், கர்ப்பபையையே எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

புதன் 5ம் வீட்டில் பலமாக அமைந்து சுபச் சேர்க்கை பார்வைப் பெற்றிருந்தால் உணவை ரசித்துஉண்பவராக இருப்பார். நல்ல ஜீரண சக்தி இருக்கும். உடல் நிலை ஆரோக்கியமாக அமையும். அதுவே புதன் பலஹீனமாக அமைந்து விட்டால் பசியின்மை, உணவு உட்கொள்ளாததால் மயக்கம், உடல்நிலையில் தளர்ச்சி உண்டாகும். வாயுத் தொல்லைகளால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் உண்டாகும். உண்ட உணவு சரியாக செரிக்காமல் வயிற்றுப் போக்கும் உண்டாகும்.

ஐந்தில் குரு அமையப் பெற்றால் நன்றாக பசி எடுத்து உண்ணக்கூடிய அமைப்பு, நல்ல ஜீரணத்தன்மை இருக்கும். குரு பகவான் செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் அல்லது பார்வை பெற்றால் அஜீரணக் கோளாறு, வயிற்றில் புண், வாயுத் தொல்லை உண்டாகும்.

ஐந்தில் சுக்கிரன் அமைந்தால், இனிப்பான உணவு வகைகளை விரும்பி உண்பார்கள். சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால், எண்ணெயில் செய்த உணவுப் பண்டங்களை அதிகம் உட்கொள்வார்கள். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால் சூடான உணவுவகைக¬ள் விரும்பி உண்பார்கள். சனி சேர்க்கைப் பெற்றிருந்தால் எல்லா உணவு வகைகளையும் விரும்பி உட்கொள்பவராக இருப்பார்கள்.

சனி 5ல் அமைந்திருந்தால், அதிக அளவில் உணவு உட்கொள்பவராகவும், எந்த நேரமும் அசை போட்டுக் கொண்டே இருப்பவராகவும் இருப்பார். இதனால் அஜீரணக் கோளாறு, குடலில் புண், போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

ராகு கேது 5ல் அமைந்தால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள  முடியாத காரணத்தால் குடலில் புண், வயிற்றுவலி போன்றவற்றால் குடும்பத்திலேயே மகிழ்ச்சி குறையும். குறிப்பாக  ராகு புத்தி காலங்களில் வயிறு பிரச்சினைகள் அதிகரிக்கும்.

5ம் வீட்டிற்கு குரு பார்வை அல்லது சுபக்கிரக பார்வை இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நல்ல ஆரோக்கியம் அமையும். அதுவே சுபர் பார்வையின்றி 5ல் பாவிகள் அமையப் பெற்றால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Thursday, March 29, 2012

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர் யார்?

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவிதத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றே எண்ணுகிறோம். அதற்கேற்றவாறு இன்று பலவிதமான கலைகளும், துறைகளும் பெருகிக்கொண்டே வருகிறது. நம்மை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் பெற்றோர்களும், பெரியோர்களும் ஏன் அரசாங்கம் கூட பலவகையில் உதவிகரமாக அமைகின்றது. சிலருக்குப் படிப்பில், சிலருக்கு கலை, இசை துறைகளில் ஈடுபாடு கொடுக்கிறது. சிலருக்கு விளையாட்டுத்துறைகளில் ஈடுபாடு கொடுக்கிறது. 

நம்நாட்டில் பலவிதமான விளையாட்டுக்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டாகும். அதன் மூலம் பரிசுகளும், பாராட்டுகளும் சமுதாயத்தில் ஓர் உயர்வான அந்தஸ்தும் கிடைக்கிறது. பொதுவாக எல்லோரின் விருப்பமும் எல்லா வகையிலும் பூர்த்தியாகி விடுவதில்லை. அதற்கு நம்முடைய ஜனன ஜாதகத்தில் கிரக நிலைகள் பலமாக அமைய வேண்டும். குறிப்பாக 5ம் பாவம் பலம் பெற்று, 5ம் வீட்டு அதிபதியும் சுபக்கிரகசேர்க்கைப் பார்வை பெற்றிருந்தால், விளையாட்டுத்துறைகளில் ஈடுபாடும் முன்னேற்றமும் கொடுக்கும். ஒருவருக்கு 5ம் வீட்டில் வலுவான கிரகங்கள் அமைகின்றபோது, விளையாட்டுத் துறைகளில் மேன்மையான பலன்களை உண்டாக்குகிறது.

ஜென்ம லக்னத்தைக் கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுதுபோக்குகளைப் பற்றி விரிவாக அறியலாம். ஒருவருக்குத் தைரியம், துணிவு இருந்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும். நவக்கிரகங்களில் தைரியம், துணிவு போன்றவற்றிற்கு காரகனாக விளங்கக்கூடிய கிரகம் செவ்வாய் பகவானாவார். செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சஸ்தானங்கள் அமையப் பெற்றோ வலிமையாக இருந்தால்தான், எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். 

ஒருவருக்கு ஆத்ம சக்தி உடல் வலிமை, நல்ல ஆரோக்கியம், சிறப்பான கண்பார்வை போன்றவைகள் அமைய சூரியன் பலம் பெற வேண்டும். அதுபோல எதையும் சாதிப்பதற்கு மனவலிமை வேண்டும். அதற்கு மனோகரகன் சந்திரன் பலம் பெற வேண்டும். விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு வெற்றிபெற நல்ல புத்திகூர்மை வேண்டும். அதற்குப் புத்திகாரகன் புதன் பலம் பெற வேண்டும். ஆக விளையாட்டுத் துறையில் சாதிக்க செவ்வாய், சூரியன், சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் பலமாக அமைவது சிறப்பான பலனைத் தரும்.

ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவத்தைக் கொண்டு விளையாட்டைப் பற்றி அறிய முடியும் என்பதால், 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பது, கேந்திரதிலோ, திரிகோணத்திலோ நட்பு வீட்டிலோ அமைவது சிறப்பு. 5ம் அதிபதி நீசம் பெற்றோ பலஹீனமாக இருப்பதோ நல்லதல்ல.
5ம் பாவத்தைக் கொண்டும், 5ல் அமையக்கூடிய கிரகங்களை வைத்தும் எந்த விளையாட்டில் ஈடுபாடு உண்டாகும் என்பதைப் பற்றி தெளிவாக  அறியலாம். விளையாட்டில் பலவிதம் உண்டு. கிரங்களின் தன்மைக்கேற்ப விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உண்டாகும். 

குறிப்பாக ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட கால்களில் செயல்பாடு கண்டிப்பாக தேவை. 12ம் வீடு கால்களைப் பற்றிக் குறிக்கும் ஸ்தானமாகும்.  சனி பகவான் எலும்பு மண்டலத்திற்கு அதிபதியாவார். சனி, செவ்வாய் பலம் பெற்று 5ம் பாவமும் பலம் பெறுவதுடன், 12ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். அதுமட்டுமின்றி 3ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் விடா முயற்சியுடன் எதிலும் செயல்படக்கூடிய ஆற்றலைத் தரும். 3, 12 பாவமும் சிறப்பாக அமையப் பெற்றால் கைப்பந்து, கல்பந்து, மட்டைப் பந்து போன்றவற்றில் சாதிக்க முடியும்.

புத்திகாரகன் புதன் பலம் பெற்று 5ம் பாவமும் பலம் பெற்றிருந்தால் செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். புதனுடன், சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்றால் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

நவகிரகங்களில் நீர்க் கிரகங்கள் சந்திரன், சுக்கிரன் ஆகும். குறிப்பாக 5ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் வலிமையாக அமையப் பெற்றிருந்தால், நீச்சல் துறையில் சாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

இது போல விளையாட்டுக்களில் பல துறைகள் நீண்டது. அவற்றைப் பற்றி குறிப்பிடுவதென்றால் இப்புத்தகமே போதாது. எனவே சிலவற்றைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001


Tuesday, March 27, 2012

இறைபணியில் ஈடுபட வைக்கும் அமைப்பு

இறைவன் என்பவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றாலும், மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்குமே இறைபக்தி என்பது இயற்கையிலேயே இருப்பதில்லை. நம் நாட்டில் ஆத்திக வாதிகளும் உண்டு. நாத்திக வாதிகளும் உண்டு. சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு முற்றும் துறந்து விடுவார்கள். சிலருக்கு நடுத்தர வயதில் ஆன்மிகத்தில் ஈடுபடக்கூடிய சூழநிலைகள் உண்டாகும். சிலருக்குக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைபணி, ஆன்மிக பணிகளில் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

இறைபணி செய்வது என்பது ஒரு சிறந்த பாக்கியமாகும். இந்த பாக்கியம் என்பது எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடாது. குறிப்பாக இறைபணி என்பது எல்லா மதத்திற்கும் பொதுவான ஒன்றாகும். அவரவர் மதத்திற்கு ஏற்றவாறு இறைபணிகளில் ஈடுபடுவார்கள். இறைபணியில் ஈடுபடுவதற்கு அவரவரின் ஜனன ஜாதகப்படி 5ம் பாவம் பலமாகவும், சுப கிரகங்கள் அமையப் பெற்றும், பார்வை பெற்றும் அமைந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி 5ம் பாவத்திற்கு 5ம் பாவமான 9ம் பாவமும் பலமாக இருந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்.

நவக்கிரகங்களில் தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கக்கூடிய குரு பகவான், ஒருவர் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் தெய்வீக எண்ணம், ஆன்மிக எண்ணம், இறைபணியில்  ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அது போல நவக்கிரகங்களில் நிழல் கிரகம், சாயாகிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய கேது பகவான் ஞான காரகன் என்பதால், ஒருவர் ஜாதகத்தில் கேது வலுப்பெற்றிருந்தாலும் ஆன்மிக, தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

அது போல கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தாலும் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்திருந்தாலும் தெய்வீக எண்ணங்கள் உண்டாகும்.

குரு, கேது வலுப்பெற்றால் தெய்வீக எண்ணங்கள் ஏற்படும் என்றாலும், எங்கு வலுப்பெற்றால் சிறப்பு என்று பார்க்கும்போது, ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீட்டில் வலுப்பெற்றால் தான் தெய்வீக  எண்ணங்கள் ஏற்படும். 5ல்  குரு, கேது இருந்தாலும் 5ம் வீடு குரு வீடாக அமைவது, 5ம் வீட்டைக் குரு பார்வை செய்வதாலும் 5ம் அதிபதி குரு கேது சேர்க்கைப் பெற்றாலும், அந்த ஜாதகருக்கு தெய்வீக எண்ணம், இறை பணி பல்வேறு ஆன்மிக செயல்களில் ஈடுபடும் அமைப்பு கொடுக்கும்.

சந்திரனானவர் மனோகாரகன் என்பதால், அவர் குரு கேது சேர்க்கைப் பெற்று 5ல் அமையப்பெற்றாலும், சந்திரனுக்கு 5ல் அமையப் பெற்றாலும், சந்திரனுக்கு 5ல் குரு, கேது அமையப் பெற்றாலும் தெய்வீக நாட்டம் உண்டாகும். குரு கேது ஆகிய கிரக சேர்க்கைப் பெற்று 5ல் அமைந்தோ, 5க்கு 5ல் அமைந்தோ அதன் தசாபுக்தி நடைபெற்றால் கண்டிப்பாக ஆன்மிகம், தெய்வீகம் போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.

கேது பகவான் விருச்சிக ராசியில் உச்சம் பெறுவதால், ஒருவர் ஜாதகத்தில் கேது உச்சம் பெறுவதால், ஒருவர் ஜாதகத்தில் கேது உச்சம் பெற்று  லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, அது 5ம் பாவமாக அமையப் பெற்றுவிட்டால் தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ல் அமையப் பெற்று விட்டால் தெய்வீகப் பணிகளில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். 5ல் அமையும் குரு பகவான் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு  கிரகச் சேர்க்கைப் பெற்று, அதன் தசா அல்லது புக்தி நடைபெற்றால்  கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுவே குரு பலஹீனமாக இருந்தாலும், 5ம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் ஆன்மிக, தெய்வீக சிந்தனைகளால் ஈடுபாடு குறையும்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001

Sunday, March 25, 2012

தாய்

தாய் என்ற வார்த்தைக்குத்தான் என்ன மதிப்பு. தாய் என்றாலே அன்பு, பாசம், பண்பு என்று எல்லாம் கலந்த கலவையாக அல்லவா இருக்கிறாள். ஆசைப்பட்டா, காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம். அம்மாவ வாங்க முடியுமா, என்ன ஒரு கவிஞனின் வார்த்தைகள். அம்மாவை புகழாத கவிஞனோ, மகளோ, மகன்களோ இந்த பூமியில் இருக்கவே முடியாது. கருவறையில் பத்து மாதங்கள் நம்மை பத்திரமாக பாதுகாத்து உள்ளிருந்து நாம் தரும் துன்பங்களை எல்லாம் பொறுமையுடன் தாங்கி, தான் ஆசைபட்டவைகளை உண்ணாமல், உறங்காமல் அனைத்தையும் தியாகம் செய்து பூமியில் நாம் ஜனிக்க காரணமாக விளங்குபவள் தாய். நாம் பிறந்தவுடன் அள்ளி அணைத்து முத்தமிட்டுதான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் தாய். ஒரு தாய்க்கு ஒரு மகன் எழுதிய கவிதை வரிகள் 'அடுத்த ஜென்மத்தில் என் தாய்க்கு மிதி

அணிகளாய் பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை கருவறையில் சுமந்த என் தாயை நான் சுமக்க அது ஒன்றே வழி'  என்று எழுதியிருக்கிறான்.

இப்படி தாயின் பெருமைகளைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் பிறந்த நேரம் தாய்க்கு நல்லது செய்யுமா? தாய் வழி உற்றார், உறவினர்களிடையே பந்தம் நீடிக்குமா? தாயின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? நம்மால் அவளுக்கு அனுகூலம் உண்டா? அவளால் நமக்கு நற்பலன் விளையுமா? என்பதைப் பற்றியெல்லாம் ஜோதிடம் என்ற காலக கண்ணாடியின் மூலம் தெளிவாக அறியலாம்.

இதற்கு உறுதுணையாக இருப்பது அவரவரின் ஜனன காலத்தில் அமையும் 4 ம் பாவமே. நவக்கிரகங்களில் தாய் காரகனாக விளங்குபவர் சந்திரன். ஒருவரது ஜாதகத்தில் 4 ம் பாவமும், தாய் காரகன் சந்திரனும் பலமாக அமைவது ஜாதகரைப் பெற்ற தாய்க்கு நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். தாயால் ஜாதகருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நற்பலன்களையும் உண்டாக்கும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருப்பதும், நட்பு கிரக வீட்டில் அமைந்திருப்பதும் சிறப்பு. நட்பு கிரகசேர்க்கைப் பெற்றிருப்பதும் குரு போன்ற சுப கிரக பார்வையுடன் 4ம் அதிபதியும் சந்திரனும் பலமாக அமையப் பெற்றிருப்பதும், தாய்க்கு நீண்ட ஆயுளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். தாய் காரகன் சந்திரன் ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு வீட்டில் அமையப் பெற்றோ இரந்தால் தாய்க்கு ஆயுள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

4ம் அதிபதி பலம் பெற்று, திரிணோதிபதிகளாகிய 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்று அந்த கிரகங்களுக்கு சந்திரனின் தொடர்பிருந்தால், ஜாதகருக்கு தாயால் ஏற்படக்கூடிய அனைத்து நற்பலன்களும், செல்வம் மற்றும் செல்வாக்குகளும் கிடைக்கப் பெறும். தாய் வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். தாய் வழி உற்றார் உறவினர்களின் அனுசரணையும், ஆதரவும் சிறப்பாக இருக்கும்.

குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு ஜென்மம் என்றே கூறலாம். எல்லா பெண்களுக்கும் எளிதாக குழந்தை பிறந்து விடுவதில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமோ, சிலருக்கு ஆயுதங்களை உபயோகப்படுத்தியோ, குழந்தையை வெளியே எடுக்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகின்றது. அதற்கும் பிறக்கும் குழந்தையின் 4ம் பாவமானது பாதிக்கப்பட்டோ, சுபர் பார்வை இன்றி இருந்தாலோ, சனி பார்வை மற்றும் கிரகணங்களை ஏற்படுத்தக்கூடிய ராகு கேது,  சேர்க்கை பெற்றோ சந்திரன் இருந்தாலும் பிரசவத்தில் மிகவும் கஷ்டங்களை எதிர்கொள்ள நெரிடுகிறது.

கடந்த மாதம் அயல்நாட்டில் பிரசவத்தின் போது தாயும் மகளும் இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவர்கள் மீண்டும் அவர்கள் உயிர்த்தெழுந்த அதிசயத்திற்க விடை தெரியாமல் விழித்தார்கள். இதற்குக் காரணம் விஞ்ஞானத்தையும் தாண்டி அந்த குழந்தையின் 4ம் பாவ கிரக அமைப்பாக இருக்கலாமல்லவா?

சில குழந்தைகள் பிறக்கும்போதே தாயை இழக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம் என ஜோதிடரீதியாக பார்க்கம் போது 4ம் அதிபதி நீசம் பெற்றிருந்தாலும், சந்திரன் பலஹீனமாக  இருந்து சனி, ராகு போன்ற பவ கிரகங்களின் சேர்க்கை பெற்று சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்திருந்தால், முதலில் சந்திர திசை நடக்கும். அதுவே தாய்க்குக் கண்டத்தைக் கொடுக்கும்.
4 ம் பாவமும் சந்திரனும் பாதிக்கப்பட்ட ஒரு ஜாதகருக்கோ, ஜாதகிக்கோ பாதிக்கப்பட்ட கிரகங்களின் தசா புத்திகள் நடைபெறும் காலங்களில் தாய்க்குப் பாதிப்புகளை உண்டாக்கும். மேலே குறிப்பிட்ட காலத்தில் ஏழரை சனி, அஷ்டமச் சனி போன்றவைகள் நடைபெற்றாலும் தாய்க்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும். தூய்மையானது தாய்மை. குழந்தையை இழிவுபடுத்தக்கூடிய சில பேய்களும் தாய் என்ற பெயரில் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்படி தாயாலேயே கொடுமைகளை அனுபவிக்கும் குழந்தைகளும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறந்தவுடன் குப்பைத் தொட்டியில் போடுவது, கொடுமைப் படுத்துவது, மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பெற்ற பிள்ளைகளையே விரோதியாக நினைப்பது போன்ற துரூ குணங்களைக் கொண்ட தாய் அமையக் காரணம் என்னவென்று ஜோதிட ரீதியாக  ஆராயும்போது, 4ம் அதிபதிபதியும் சந்திரனும்  6ம் வீட்டிலோ, பாதக ஸ்தானத்திலோ அமையப் பெற்றிருந்தாலும், 4ம் அதிபதியும், 6ம் அதிபதியும் சேர்க்கை பெற்றிருந்தாலும்  தாயாலேயே பிள்ளைகளுக்கு துன்பம் உண்டாகும்.

காலபுருஷ தத்துவப்படி 4ம் பாவம் கடகராசியாகும். அதுவே சந்திரனின் சொந்த வீடாகும். கடகத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் தாய்க்குப் பாதிப்பு, தாய் வழி உறவினர் வகையில் பகை உண்டாகம்.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001


Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Saturday, March 24, 2012

காதலை ஏற்படுத்தும் 5ம் பாவம்

காதல் இன்றைய தலைமுறையினருக்கு இன்றியமைதாகி விட்டது. பழங்காலங்களில் நம்முடைய மூதாதையர்கள் சொந்தத்திலேயோ அல்லது அசலிலேயோ பார்த்து நிச்சயம் செய்தவர்களையே திருமணம் செய்து கொள்வார்கள். நம்மைச் சார்ந்தவர்களுக்கோ எந்த விதமான பங்கமும் ஏற்படாமலிருக்கும். இந்த முறைகள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாகும்.

சாதி, மதம், மொழி, இனம் மாறாமல் சந்ததிகள் தொடரும். ஆனால் ஒரு சிலர் இந்த எல்லாவிதமான சம்பிரதாயங்களையும் முறியடிப்பது போல காதல் என்னும் பெயரில் தாம் விரும்பியவர்களையே கைபிடித்து, அனைவருக்கும் பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறார்கள். மனதில் ஏற்படக்கூடிய இனக்கவர்ச்சியையும் காதல் என்ற பெயரால் தம்முடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்பவர்களும் உண்டு.

ஏன், இப்படி காதல் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொள்கிறார்கள் என்று பார்த்தால், அவரவரின் ஜனன ஜாதக ரீதியான 5ம் பாவத்தான் காரணமாக இருக்கிறது. ஒருவரைப் பார்த்தவுடன் மனதில் ஏற்படக்கூடிய ஈர்ப்புத் தன்மை, உணர்வுகள் அவற்றால் உண்டாகக்கூடிய பாசம், அவர்தான் தன் வாழ்க்கை என முடிவெடுக்கக்கூடிய மனோபாவம் அனைத்திற்கும் 5ம் பாவம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

5ம் பாவமானது பாதிக்கப்படாமல் இருந்து உறவுகளைக் குறிக்கக்கூடிய கிரகங்களான சூரியன், செவ்வாய், சந்திரன் ஆகியவை 5ல் அமையப் பெற்று, பாவகிரக பார்வையின்றி குரு போன்ற சுபகிரக பார்வைப் பெற்றிருந்தால் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்து நிச்சயம் செய்யக்கூடியவரையே ஜாதி, மதத்திற்க எந்த பங்கமும் ஏற்படாமல் மணம் செய்து கொள்ளக்கூடிய அருமையான யோகம் உண்டாகிறது.

அதுவே 5,7,9, பாவங்களில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலோ 5,7,9ம் அதிபதிகள் பாவகிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ பெற்றாலோ, தாம் விரும்பியவரை மணக்கும் அமைப்பு, கலப்புத் திருமணம் செய்யக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகிறது. 5ல் பாவிகள் அமையப் பெற்று 7ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகரித்து விரும்பியவரையே கைபிடிக்கும் நிலை உண்டாகும்.

பொதுவாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு சனி, ராகு போன்ற கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 5,7 க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காதல் திருமணம், கலப்புத் திருமணம் உண்டாகிறது.

நவகிரகங்களில் சந்திரன் மனோகாரகன், அறிவு காரகனாவார். ஆண்களுக்குச் சுக்கிரன் களத்திர காரகனாவார். பெண்களுக்குச் செவ்வாய் களத்திர காரகனாவார். ஒருவரது ஜாதகத்தில் 5,7,9ல் செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சனி, ராகு கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சனி பார்வை 5,7 க்கு இருந்தாலும் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அந்நியத்தில் ஓரளவுக்கு கலப்பில் திருமணம் செய்ய நேரிடும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும், 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்று 7ம் வீட்டைப் பார்வைச் செய்தாலும், காதல் திருமணம், கல்ப்பு திருமணம் உண்டாகிறது. பொதுவாக 5,7,9 ல் சனி ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றால் கலப்புத் திருமணம் காதல் திருமணம் உண்டாகிறது. அதுபோல  5,7 க்கு அதிபதிகள் கேது சேர்க்கைப் பெற்றாலும், கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும் காதல் திருமணம் உண்டாகிறது.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Tuesday, March 13, 2012

கற்பு


கற்பு என்பதுஆண், பெண் இருவருக்கும் சமமானதே. ஆனால் அக்காலம் முதல் இக்காலம் வரை கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள். ஒழுக்கமான நடத்தை, நல்ல பண்பு, மற்றவர்களிடம் அதிகமாக பேசாத குணம் போன்றவை  உள்ளவர்களையே கற்புள்ளவர்களாக எண்ணுகிறார்கள்.  தற்போதுள்ள கால சூழ்நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாக பழகுவதென்பது சகஜமாகி வருகிறது. கல்லூரியிலோ, பள்ளியிலோ பயிலும் ஆண், பெண் இருவரும் ஒன்றாக அமர்ந்து படிப்பது, உணவு உண்பது என்பது சகஜமாக மாறி வருகிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அனைவரையும் கற்பிழந்தவர்களாக கூறிவிட முடியுமா?

குறிப்பாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 4ம் பாவம் பாதிக்கப்பட்டாமல் சுபர்சேர்க்கை பார்வையுடன் இருக்குமாயின், அவளின் கற்புக்கு எந்த பங்கமும் சேராது.

அதுவே 4ம் பாவமானது பாதிக்கப்பட்டிருந்தால் தேவையற்ற நட்புகள் தேடிவரும். இதனால் கெட்ட  பழக்க வழக்கங்கள் முளைக்கும். பெயர் கெடும். வாழ்வில் பல இன்னல்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். கற்பிழந்தவள் என்ற முத்திரையுடன் வாழ வேண்டியிருக்கும். இதனால் அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் பாதிப்புகள் உண்டாகும்.

பொதுவாக, பெண்கள் நாட்டின் கண்கள் என்பதால் ஒரு  பெண்ணானவள் ஒழுக்க நெறியும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டிருந்தால் நாட்டிற்கும் நல்லது. வீட்டிற்கும் நல்லது. அதற்காக அடுக்களையில் அடைந்து கிடக்க வேண்டும் என்பதில்லை. புலியையே முறத்தால் அடித்து விரட்டியவள் பெண் என்பதால், துணிவு, தைரியம் யாவையும், பெற்றிருத்தல் அவசியம். கெட்ட பழக்க வழக்கங்களைத் தவிர்த்து குடும்பத்திற்கு குல விளக்காகத் திகழ்வதால் அனைவரும் போற்றக்கூடியவளாக வாழ முடியும்.

பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.

குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.

ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும்  சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.

நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன்  ஆகிய  கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.

4ம் வீட்டில் குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.

சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற  யாவும் உண்டாகும்.
வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.

4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது.  4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.

நவகிரகங்களில் சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன், ராகு, கேது, சனி போன்ற பாவக்கிரகங்கள் 4ல்  அமைவதோ, 4ம்  வீட்டைப் பார்வை செய்வதோ,  4ம் அதிபதி மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவதோ அவ்வளவு சிறப்பில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அதாவது 2,3 பவகிரகங்கள் கற்பு ஸ்தானமான 4ல் அமைவது, அவ்வளவு சிறப்பல்ல. இதனால் ஜாதகிக்கு தேவையற்ற நட்புகள் சேரும் அமைப்பும், அவப்பெயர், மற்றவர்கள் பழி சொல் கூறும் சூழ்நிலையும் உண்டாகும்


Astrologer MURUGUBALAMURUGAN Cell-72000163001

Saturday, March 10, 2012

சொந்தவீடு யோகம்

சொந்தவீடு யோகம் என்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சியமாகும். எலி வலை ஆனாலும் தனிவலை வேண்டும். என விரும்புபவர்களே அதிகம். எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு சொந்த வீடு கட்டியோ, வாங்கியோ விட வேண்டும் என்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லோருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடை கூற முடியாது. கற்பனைகள் அனைத்தும் கனவாகவே முடிந்து விடுவதும் உண்டு.

சிலர் சொந்த வீடு கட்ட நினைத்து வங்கியில் கடன் வாங்கி அலைச்சல் பட்டு அதை ஒழுங்காக கட்ட முடியாமல் போதுமாடாசாமி என நினைப்பவர்களும் உண்டு. சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும்  யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த  வீட்டிற்கு  அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

இப்படி சொந்த வீட்டுமனை அமைய  ஜாதக ரீதியாக 4ம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும்  உண்டாகும். 4ம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் இடத்து அதிபகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

4  அதிபதியும், 4ம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. 4ம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அது போல பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக 4ல் அல்லது 4 ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால்,  ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

4ம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, 4ம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, 4ம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.
வீட்டின் அமைப்பு

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் 4 ம் பாவத்தின் மூலம் அறியலாம். சிலருக்கு மாட  மாளிகையும், உயரமான கட்டிடங்களில் வசிக்கக்கூடிய யோகமும், சிலருக்கு ஓட்டு வீடு, குடிசை வீடு என அவரவர் 4ம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும்.

பொதுவாக சூரியன், கேது 4ம் வீட்டில் இருந்தால் அமையக்கூடிய வீடானது பார்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதி தன்மையற்றதாக இருக்கும்.

சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடும் அமையும்.

குரு இருந்தால் மிகவும் உறுதியான தரமிக்க வீடு அமையும். புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உணண்டாகும். 

செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்கு தீயால் பாதிப்புபள் உண்டாகும்.

சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4ம் வீட்டையோ, 4ம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

யார் மூலம் சொத்து

பூர்வீகச் சொத்து
ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவமானது பூர்வீகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். என்றாலும் பூர்வீக வழியில் அசையா சொத்து யோகம் உண்டாக 4,5க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, 4,5 க்கு அதிபதிகள் இணைந்திந்தாலோ, 4,5 க்கு அதிபதிகளிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந்தாலோ பூர்வீக வழியில் வீடு யோகம் உண்டாகும்.


தந்தை,

நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகனாவார். 9ம் இடம் தந்தை ஸ்தானம் ஆகும். 4,9 க்கு  அதிபதிகள் பலமாக அமைந்து சூரியனும், பலமாக இருந்தால் தந்தை வழியில் அசையாச் சொத்து யோகம் உண்டாகும். 4,9 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்று இருப்பதும் 4ம் அதிபதி 9ல் 9ம் அதிபதியின் சேர்க்கை பெற்று இருப்பது போன்றவற்றாலும் தந்தை வழியில் அசையாச் சொத்து யோகத்தைக் கொடுக்கும்.

தாய்,

நவகிரகங்களில் தாய் காரகன் சந்திரனாவார். ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி பலமாக அமைந்து தாய் காரகன் சந்திரனும் பலமாக இருந்தால் தாய் மூலம் அசையாச் சொத்து யோகம் அமையும்.

உடன் பிறந்தோர்,

நவகிரகங்களில் சகோதரகாரகன் செவ்வாய் ஆவார். ஒருவர்  ஜாதகத்தில் 3,11 க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ அமைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் பலமான வீடு யோகம் உண்டாகும்.

அதுவே பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் பலமாக இருந்தால், உடன் பிறந்த
சகோதரிகள் மூலம் வீடு யோகம் உண்டாகும்.


திருமணத்தின் மூலம் சொத்து யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 7ம் பாவம் திருமண வாழ்வு  பற்றி குறிப்பிடுவதாகும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 4,7 க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றிருந்து இருவருக்கு மிடையே பலமான தொடர்பு ஏற்பட்டு இருந்தால்  அதாவது பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, சேர்க்கைப் பெற்றிருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ திருமண பந்தத்தின் மூலம் அசையாச் சொத்து அமையும் யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி இருவரும் சேர்ந்து கூட்டாக  சொத்துக்கள் வாங்கி மேலும் மேலும் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

மற்றவர்கள் பெயரில் சொத்து (பினாமி)

பொதுவாக ஒருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள பலமான கிரகங்களின் தசாபுத்தி நடைபெறும் காலங்களில்தான் வீடு, மனை, அசையாச் சொத்து யோகம் உண்டாகும். சிலருக்கு 4ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலோ, நடைபெறக்கூடிய தசா புத்தி  சாதகமற்று இருந்தாலோ, அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தைச் சொத்தாக மாற்றக்கூடிய யோகம் இருக்காது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஜாகத்தில் எந்த கிரகம் பலமாக அமையப் பெற்றிருக்கின்றதோ, அந்த கிரகத்திற்குரிய நபர்களின் மீது சொத்துக்கள் வாங்கும்போது, அதன்மூலம் அபிவிருத்தி முன்னேற்றம் உண்டாகும்.

சூரியன், குரு போன்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் தந்தை, குடும்பத்தில் மூத்தவர்கள் பிள்ளைகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது சிறப்பைத் தரும்.

செவ்வாய் பலமாக இருந்தால் உடன் பிறந்தவர்கள் பெயரில்  சொத்தும்,

சுக்கிரன், சந்திரன் பலமாக இருந்தால் பெண்கள் பெயரிலும் சொத்துக்கள் வாங்குவது நல்லது.

புதனிருந்தாலும் உறவினர்கள் பெயரிலோ, தொழில் செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரிலோ முதலீடு செய்வது  நல்லது.

சனி பலமாக இருந்தால் வேலையாட்களால் பலவிதத்தில் ஆதாயம் அடைவார்கள்.

எப்பொழுது சொத்து அமையும்?

ஒருவருக்கு 4ம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய  திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், 4ல் பலமாக அமையப்பெற்ற  கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையாச் சொத்து யோகம் உண்டாகும்.

சொத்துக்களால் பிரச்சினை

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6ம் பாவமானது கடன், வம்பு, வழக்குகளை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். பொதுவாக 6ம் அதிபதி 4 ல் அமைந்திருந்தாலும், 4,6 க்கு அதிபதிகள்  இணைந்து இருந்தாலும், 6ம் அதிபதியின் சாரம் பெற்று 4ம் அதிபதி இருந்தாலும் சொத்துக்களால் பிரச்சினை, வம்பு, வழக்கு, கடன் தொல்லைகள் உண்டாகும்.

வீடு, மனை யோகம் இல்லாத அமைப்பு

ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 6,8,12 ல் மறைவுப் பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றிருந்தாலும், சனி போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்தவீடு அமைய தடை உண்டாகும். 4ம் அதிபதி நீசம், அஸ்தங்கம், பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் வீடு, அசையா சொத்துக்கள் அமையாது.

வண்டி, வாகனம் யோகம்

நடைமுறை வாழ்க்கையே மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அவசர கதியில் நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்புவதில்லை. இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோதான் பயன்படுத்துகிறார்கள். நடந்து செல்வதற்கு பாதைகள் இல்லை என்பது வேறு விஷயம் என்றாலும் வண்டி, வாகனங்களை பயன்படுத்துவதை பேஷனாகவும், பெருமையாகவும் நினைக்கிறார்கள். செல்ல வேண்டிய இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் பணிகளை எளிதாக முடிப்பதற்கும், அலைச்சலைக் குறைப்பதற்கும் சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது எளிய முறையாக உள்ளது.  இப்படி சொந்தமாக  வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. அதற்கு ஜோதிட ரீதியாக 4ம் பாவம் பலம் பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த  கிரகங்களின் சேர்க்கையால் சொந்த வண்டி, வாகன யோகம் உண்டாகும் என்று பார்ப்போமா?

நவகிரகங்களில் வண்டி, வாகன காரகன் சுக்கிரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 4 பாவமும், சுக்கிரனும் பலம் பெற்றால் வண்டி, வாகன யோகம் சிறப்பாக அமையும்.

4ம் அதிபதி லக்னாதிபதி சந்திரன் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

இத்துடன் சுக்கிரனும் இணைந்து பலமாக அமையப் பெற்றால் சொகுசான நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

4,9 க்கு அதிபதிகள் இணைந்து உடன் குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலம் பெற்றிருந்தால் நான்கு சக்கரம் வாங்கும் யோகம், மதிப்பு மிக்க உயர்பதவிகளால் அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் யோகம் உண்டாகும்.

அது போல 4ம் அதிபதி 9,10 க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்று குரு பார்வைப் பெற்றால் உயர்ரக வாகன யோகம் உண்டாகும்.  4,9 க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஜாதகருக்கு வலிமையான வாகன யோகம் உண்டாவது மட்டுமின்றி செல்வம், செல்வாக்கு உயரும்.

4ம் அதிபதியும் சுக்கிரனும் சுபர் பார்வையுடன் வலுவாக இருந்தால் வலிமையான வண்டி, வாகன யோகம் உண்டாகும். அதுவே பாவிகள் பார்வையுடனிருந்தால் வாகனங்கள் அமைந்தாலும் அனுபவிக்கமுடியாத அளவிற்கு இடையூறுகள், நாளடைவில் பழுதடையக்கூடிய நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி சந்திரன் அல்லது சுக்கிரனுடன் இருந்து கேந்திர, திரிகோணங்களிலோ அல்லது 2,11 லிலோ இருந்தால் பலவகையில் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் வாகன யோகம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்தில் 4ம் அதிபதி அமையப் பெற்று குருபார்வைப் பெற்றால் வலிமையான வாகன யோகம் உண்டாகும்.

4 ம்  அதிபதி பகை பெற்றாலோ, நீசம் பெற்றாலோ 6,8,12 ல் மறைந்திருந்தாலோ ஜாதகருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வாகனங்கள் வாங்க இடையூறுகள் உண்டாகும்.

அது மட்டுமின்றி வாகனங்களை அனுபவிக்கவும் தடைகள் ஏற்படும். அது போல  சுக்கிரன் நீசம் பெற்றாலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையில்லாமலிருந்தால் வாகனங்கள் அமைய இடையூறுகள்,
அப்படி அமைந்தாலும் அதன் மூலம் விபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி வலுவாக அமையப்பெற்று உடன் புதன் பலமாக இருந்தால் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதிக்கும் சுக்கிரனுக்கும் சனியின் சம்மந்தமிருந்தால் புதிய  வாகனத்தை வாங்குவதைவிட  பழைய வாகனங்களை வாங்கி புதுப்பித்து அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

அதுபோல 4ம் இடம் சனியின் வீடாக இருந்தாலும். சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கும், சனி திசை நடைபெறுவபவர்களுக்கும் பழைய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பொதுவாக 4ம் அதிபதியின் திசை அல்லது புத்தியிலோ, சந்திரன், சுக்கிரனின் திசை அல்லது புத்தியிலோ 4ல் அமையக்கூடிய கிரகங்களின் திசை அல்லது புத்தியிலோ பலமான வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

அது போல 4ம் அதிபதியும், சுக்கிரனும் அமைந்துள்ள வீட்டிற்கு திரிகோணத்தில் குரு கோட்சாரத்தில் வரும் போது வாகன யோகம் உண்டாகும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Friday, March 9, 2012

உயர்கல்வி, மேற்கல்வி தரும் 5ம் பாவம்


உயர்கல்வி, மேற்கல்வி தரும் 5ம் பாவம்

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்வி செல்வம் அழியாதது. பிறரால் களவாட முடியாதது. கல்வி அறிவு இருந்தால் எங்கு சென்றாலும் அதனால் மதிப்பும், மரியாதையும் உயரும். எங்கு யாரிடத்தில் எப்படிப் பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற ஆற்றல் உண்டாகும். ஆயிரம் கோவில்கள் கட்டி, அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதை விட ஒரு கல்விச்சாலை அமைத்து பலருக்குக் கல்வி அறிவு புகட்டுதல் மிகவும் சிறப்பானதாகும்.
கல்விச் சிறப்பு அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஜோதிட ரீதியாக ஒவ்வொருவரின் ஜெனன ஜாதகத்தில் 5ம் பாவத்தைக் கொண்டு ஒருவரின் அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, உயர்கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

கற்றறிந்த சான்றோர்களால் இயற்றப்பட்ட பல நூல்கள் நமக்கு இன்றும் பலவகையில் உதவிகரமாகவும், அறிவுக்கு விருந்தளிப்பதாகவும் அமைந்துள்ளது. இதற்கு 5ம் பாவம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 5ம் பாவமானது சுபகிரகங்களின் பார்வை சேர்க்கையுடன் இருந்தாலும், 5ம் அதிபதி பலமாக அமைந்திருந்தாலும் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலும் வாய்ப்பும், நல்ல அறிவாற்றல் யாவும் சிறப்பாக அமையும்.

பொதுவாக, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 2ம் பாவமானது அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4ம் பாவமானது கல்வி ஸ்தானம் என்பதால், பொதுவாக ஒருவரின் கல்வி அறிவு, திறமை பற்றி அறிய உதவும். கல்வி என்பது இன்றைய விஞ்ஞான யுகத்தில் மிகவும் முக்கியம் என்றாலும் படிப்பது முக்கியமில்லை. மிக சிறப்பாக படிப்பது தான் முக்கியம். இதற்கு 5ம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும். மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும். முதுநிலை பட்டப்படிப்புக்குக் குறிப்பிட்ட ஒரு துறையில் முனைவர் பட்டம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும்.

5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம்  இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனைகள் பல செய்ய நேரிடும்.

5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் 5ம் அதிபதி கேந்திர, திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்ய நேரிடும்.

2,4,5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது. அப்படி பாவ கிரகங்களால் சூழப்பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும். குறிப்பாக, சர்பகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஆகிய கிரகங்கள் மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும்.

அதுவும் ராகு அல்லது கேதுவின் திசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகிறது.  சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு திசை வருமம். இந்த ராகு திசை காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் நாட்டம் குறையும். விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்வடிய வயதில் கேது திசை நடக்கும். இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும்.
5ம் பாவத்தில் கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் உயர்படிப்பு யோகம், அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப அமையும்.

பொதுவாக, 5ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று, உடன் செவ்வாய் அமையப் பெற்றோ, பலன் பெற்றோ இருந்தால் மருந்து, அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் சாதனை செய்ய நேரிடும். அதுவும் சூரியன், செவ்வாய் பலம் பெறுவதுடன் உடன் மருத்துவ கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தால், மருந்து சார்ந்த துறைகளில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

5ல் சந்திரன்  வலுப்பெற்றால் மருந்து, கேட்டரிங், கடல் சார்புடைய படிப்பில் சாதிக்க முடியும்.

செவ்வாய், சூரியன், குரு பார்வையுடன் 5ல் வலுவாக இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் சாதிக்க முடியும்.

செவ்வாய் 5ல் பலமாக இருந்தால், நிர்வாகம் சார்ந்த எம்.பி.ஏ. படிக்க முடியும்.  செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் கட்டடத்துறை சார்ந்த துறை, எந்திரம் சார்ந்த துறையில் உயர்கல்வி கற்கக்வடிய யோகம் உண்டாகும். செவ்வாய், புதன் இணைந்திருந்தால் கம்ப்யூட்டர் துறையில் உயர்கல்வி யோகம் உண்டாகும்.

5ல் புதன் பலம் பெற்றால் கணக்கு கம்ப்யூட்டர், ஆடிட்டிங் சார்ந்த துறைகளில் உயர்கல்வி யோகம் உண்டாகும்.

5ல் குரு பலம் பெற்றால் வங்கிப் பணிக்கான  கல்வி, வக்கீல், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறி வழி நடத்தக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குரு, புதன் இணைந்திருந்தால் கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து, பள்ளிக் கல்லூரிகளில்  ஆசிரியர், பேராசிரியர் ஆகும் யோகம் உண்டாகும்.

சனி பலம் பெற்றால் டெக்னிக்கல் கல்வி உண்டாகும்.

சுக்கிரன் பலம் பெற்றால் கலை, இசை தொடர்புடைய கல்வியில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

ராகு பகவான் 5ல் சுபப் பார்வையுடன் பலம் பெற்றால் புதுவகையான கல்வியில் எதிர் நீச்சல் போட்டு சாதிக்கும் ஆற்றல்  உண்டாகும்.

5ல் கேது அமையப் பெற்றால் மருந்து, கெமிக்கல்  சார்ந்த கல்வி, சமயம் சார்ந்த கல்வியில் சாதிக்க நேரிடும்.

எனவே, ஒருவருக்கு 5ம் இடம் பலமாக அமைந்து விட்டால் நல்ல கல்வி ஞானம் கிடைக்கப் பெற்று, சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தையும், மதிப்பு மரியாதையையும் பெறமுடியும். நல்ல நிர்வாக திறமையும், பலரை வழி நடத்தக்கூடிய அறிவாற்றலும் உண்டாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகமும் உண்டு. கல்வி ஒருவருக்கு வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே வாழ்வில் அனைவரும் கண்டிப்பாக முன்னேறுவோமாக!


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Thursday, March 8, 2012

பூர்வீக சொத்தும்

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பார்கள். அவர்கள் சேர்த்து வைத்த புண்ணியங்கள் இன்றைய தலைமுறையினரைக் காப்பது போல, அவர்கள் செய்த பாவகாரியங்களும் நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். நாம் வாழும் வாழ்க்கை சுகமானதாக இருக்க வேண்டும் என்பது போல, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரும் சுகமாக வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.

சிலர் தம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை வாழையடி வாழையாக காப்பாற்றி, பெருக்கிக் கொண்டே வந்து கோடீஸ்வரராகவும், குபேரராகவும் வாழ்கின்றனர். இப்படி பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய யோகம் எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. எப்படி முன்னோர் செய்த நற்செயல்கள் நமக்கு நல்ல வாழ்க்கையையும், பலனையும் தருகிறதோ அதுபோல, அவர்கள் செய்த பாவ காரியங்களால் பூர்வீக வழியில் அனுகூலப் பலனை அடையமுடியாமல் எத்தனையோ பேர் அவதிபடத்தான் செய்கிறார்கள்.

பூர்வீக வழியில் புண்ணியங்களை அடைய அவரவர்களின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் பாவமானது பலமானதாக அமைய வேண்டும். தாய் தந்தையர் சேர்த்து வைத்த சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் எவ்வளவு உரிமை உள்ளதோ அதைவிட உரிமை பேரன் பேத்திகளுக்கே அதிகமாக உள்ளது.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், நட்பு வீட்டில் இருந்தாலும், பூர்வீகச் சொத்து கண்டிப்பாக இருக்கும். 5ம் வீட்டையும், 5ம் அதிபதியையும் குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்வது மூலம் பூர்வீக வழியில் அனுகூலங்கள் அதிகரிக்கும். 5 ம் அதிபதி கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ அமைந்திருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று தந்தை ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 9ம் இடமும் சாதகமாக அமையப் பெற்று, தந்தை காரகன் சூரியன் பலமாக அமையப் பெற்றால், தந்தை வழியில் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய உன்னதமான நிலை உண்டாகும். குறிப்பாக தந்தை காரகன் சூரியன் பலமிழந்தாலோ, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலோ, தந்தைக்கு தோஷத்தையும், தந்தை வழியில் பூர்வீக சொத்துக்களை அடைய தடைகளையும் ஏற்படுத்தும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் இடம் பலமாக இருந்த தாய் காரகன் சந்திரனும், தாய் தானமான 4ம் இடமும் வலுவாக இருந்தால், தாய் வழியில் பூர்வீக சொத்தை அடையக்கூடிய யோகம் உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதி 4ம் அதிபதியுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், 4ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகச் சொத்துக்களை அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 5ம் அதிபதி 10 அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதால், மூதாதையர்கள் செய்த தொழிலை வம்சா வழியாக ஜாதகரும் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பூர்வீக தொழில் யோகமும், அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகமும் உண்டாகும்.

5ம் அதிபதி பலமாக அமையப்பெற்று 6ம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றாலோ, 6ல் இருந்தாலோ சொத்துக்கள் தொடர்பாக வம்பு வழக்குகளை சந்தித்து வெற்றி பெற நேரிடும். அதுவே 5ம் அதிபதி பலஹீனமாக இருந்து 6ம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றால் சில தேவையற்ற வம்பு வழக்குகளை சந்தித்து, அதனால் பூர்வீக சொத்துக்களை இழக்க நேரிடும்.

ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றாலும் 6,8, 12 ல் அமைந்து பலஹீனமாக இருந்தாலும் பாதக ஸ்தானத்தில் அமைந்தாலும் பூர்வீக சொத்து வகையில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படாது.

அது போல சனி, ராகு போன்ற பாவிகள் 5ல் அமையப் பெற்றாலும், 5ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்கள் இருக்காது. குறிப்பாக சனி 5ல் இருப்பது தோஷம் என்றாலும், சனி தன் சொந்த வீட்டிலிருந்து அது 5ம் பாவமாக இருந்தாலும், லக்னாதிபதியாகி 5ம் வீட்டை பார்வை செய்தாலும் கெடுதியை கொடுக்காமல் பூர்வீக வழியில் நற்பலனை தருவார்.

நவக்கிரகங்களில் சகலவிதமான தோஷங்களை விலக்கக்கூடிய குரு பகவானின் பார்வை 5ம் வீட்டிற்கோ, 5ம் அதிபதிக்கோ இருந்தால் பூர்வீக வழியில் சிறிதளவாவது அனுகூலங்கள் ஏற்படும்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Monday, March 5, 2012

சுகவாழ்வு, சொகுசு வாழ்வு

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏழை முதல் பணக்காரர் வரை சுகவாழ்வு, சொகுசு வாழ்வு வாழ்வதையே விரும்புவார்கள். மனிதனின் ஆசைக்கும், அபிலாஷைகளுக்கும் அளவுதான் ஏது? நடந்து செல்பவருக்கு சைக்கிளில் செல்ல ஆசை, பைக்கில் செல்பவருக்கு காரில் செல்ல ஆசை, காரில் செல்பவருக்கு விமானத்தில் செல்ல ஆசை. இப்படி சொகுசுவாழ்வு வாழ விரும்புவதை ஆசைகளாய் அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவரும் உண்டு. உழைக்காமலே உயரவேண்டும் என்ற பேராசை பிடித்தவர்களும் உண்டு.

சிலர் சுகவாழ்வு வாழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டும் தன்னைச் சுற்றி பத்து வேலையாட்கள் எப்போதும் கைகட்டி நிற்பதாக நினைத்து வாழ்பவரும் உண்டு. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என நினைத்து வாழ்வதே சுகமான வாழ்க்கையாகும். வரும்போது எதைக் கொண்டு வந்தோம். போகும் போது எதைக் கொண்டு செல்வோம் என யாரும் நினைப்பதே இல்லை. இருக்கும் வரை சுகவாழ்வு வாழ்வதையே  விரும்புவார்கள். சரி எல்லோருக்குமே சுகவாழ்வு, சொகு-சு வாழ்வு அமையுமா?

அதுதான் இல்லை!  எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தாலும், நாயிடம் கிடைத்த தேங்காய் போல தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் அனுபவிக்க விடாமல் இருப்பவர்களும் உண்டு. ஜோதிடத்தின் மூலமாக ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு, அவரின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதைப் பற்றி தெளிவாக அறியலாம். 4 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு தேடிவரும். அதுபோல 4ம் வீட்டை குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதி சுப கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம்  இருக்காது. 4ம் அதிபதி நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு மேன்மையடையும்.

அதுவே 4ம் அதிபதி பகை பெற்றோ, நீசம் பெற்றோ சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். 4ம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பாவிகள் சூழ்ந்திருந்தாலும் நற்பலன்கள் உண்டாகாது. பொதுவாக 4ம் வீட்டில் என்ன கிரகம் இருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு எப்படி அமையும் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.

சூரியன்

ஜென்ம லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்லும் குணம் இருக்கும். உற்றார், உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இசையில் ஆர்வம் அதிகம் இருக்கும். சிலருக்கு இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு ஓரளவுக்கு மேன்மை ஏற்படும்.

சந்திரன்

4ல் சந்திரன் இருந்தால் சொந்த வீடு, மனை, வண்டி, வாகன யோகம், இல்லறத்துணையுடன் சுகபோக வாழ்க்கை போன்ற நற்பலன்கள் யாவும் அமையும். அசைவ உணவில் நாட்டம், அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு மற்றும் நல்ல கற்பனை வளம் இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும்.

செவ்வாய்

4ம் வீட்டில் செவ்வாய் பலத்துடன் அமையப் பெற்றிருந்தால் பூமி, மனை யோகம் உண்டாகும். நிலபுலன்களால் நல்ல வருவாய் அமையும். உடன் பிறந்தவர்களாலும் உன்னதமான உயர்வுகள் ஏற்படும். சற்று முன்கோபமும் பேச்சில் வேகம், விவேகமும் நிறைந்திருப்பதால் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும். உடலில் வெட்டுக் காயங்கள் உண்டாகும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு நன்றாகவே அமையும்.

புதன்

4ல் புதன் பலம் பெற்று அமையப் பெற்றால், நல்ல அறிவாற்றல் கொண்டவராகவும் பல்வேறு கலைகளில் ஈடுபாட்டுடனும் இருப்பார். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வார். சுகபோக வாழ்க்கை, ஆடம்பரமான வாழ்க்கை எளிதில் அமையும். நவீனகரமான பொருட்சேர்க்கைகளும், அசையும், அசையாச் சொத்து யோகங்களும் சிறப்பாக அமையும்.

குரு

4ம் வீட்டில் குருபகவான் பலம் பெற்று கிரக சேர்க்கையுடன் அமைந்திருப்பதால் மற்றவர்களை வழி நடத்தும் யோகம், நல்ல புத்திக் கூர்மை, பல்வேறு பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் மதிப்பு மரியாதை யாவும் உண்டாகும். பூமி மனை யோகம், சுகபோக வாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

சுக்கிரன்

4ம் வீட்டில் சுக்கிரன் பலம் பெற்று அமையப் பெற்றால் நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலங்கள் ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பெண்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். கலை, இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். நவீனகரமான வீடு, வண்டி, வாகனங்கள் அமையும். சுகவாழ்வு, சொகுசுவாழ்வு யாவும் மிகச் சிறப்பாக அமையும்.

சனி

4ல் சனி அமையப்பெற்றால் பழைய வீடு வாங்கம் யோகம், பழைய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் அமையும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வை அனுபவிக்க சில தடைகள் ஏற்படும்.

ராகு

சாயாகிரகமான ராகு 4ல் இருந்தால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், அதை அனுபவிக்க தடைகள் ஏற்படும். உறவினர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும். மதம் மாறக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ராகு சுபகிரக சேர்க்கை பார்வை பெற்றாலும், எதிர்பாராத வகையில் நற்பலன்களும் அசையாச் சொத்து யோகமும் உண்டாகும்.

கேது

கேது 4 ல் இருந்தால் உடல் ரீதியாக பலவீனமாக இருப்பார். உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். சுகவாழ்வு பாதிப்படையும். கேது சுப சேர்க்கை பெற்றிருந்தால், சில தடைகளுக்குப் பிறகு அசையா சொத்து யோகமும் வாழ்வில் ஓரளவுக்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வும் உண்டாகும்.

Astrologer Murugubalamurugan



Saturday, March 3, 2012

பூஜையில் தேங்காய் ஏன்?


பூஜை காலங்களில் தேங்காய் இன்றி பூஜை இல்லை. தேங்காய் இன்றி பூஜை செய்தால் பூஜையின் முழுத்தன்மை அடைவதில்லை. நம் முன்னோர் தான் தேங்காய் வைத்து பூஜை செய்யும் வழக்கத்தை உருவாக்கித் தந்துள்ளார்கள். திருமணம், சடங்கு, பூப்படைதல், விழா, ஹோமம், கிரகபிரஷேம், கும்பாபிஷேகம், பூரண கும்பம் கொண்டு மரியாதை செய்தல்,இது போன்ற பல செயல் பாட்டில் தேங்காயைப் பயன் படுத்துகிறோம். தேங்காய் வடிவத்தில் மும்மலம் கருத்து உள்ளது. தேங்காய் ஓடு, நார் மனிதனின் உடல், தேங்காயின் உள்பகுதி வெண்மை உள்ள நிலை மனிதனின் மனம். தேங்காய் உள்ள நீர் மனிதனின் உயிர். பூஜை நேரத்தில் தேங்காயைப் படிப்படியாக களையும் போது அங்காரம் என்ற ஓடு நோறுங்க மனம் வெண்மையாக பிரகாசிக்கிறது. அதன் நீரை இறைவனுக்கு அர்பணிக்கப்படுகிறது. மனிதனின் உயிர் இறைவனுடன் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.

இறைவனுடைய திருக்காட்சியைக் காண மனிதனின் அகங்காரம் என்ற தேங்காய் ஓடு உடைத்தால் மனத்தூய்மை (தேங்காய் உள்ள வெண்மை) உருவாகி மனிதனின் உயிர் (நீர்) ஞான உணர்வு பெற்று இறைவனை தரிசிக்கிறது. மனிதனுக்கு இரண்டு கண்கள் மூன்றாவது கண் ஞானக்கண், இது போன்று தேங்காய்க்கு மூன்று கண் அமையபட்டுள்ளது. தத்துவக்குணத்துடன் சஞ்சலமில்லாமல் மனிதனின் ஞானக்கண்ணால் இறைவனை தரிசிக்கும் போது பக்தி உணர்வுகள் இதயம் உணர்கிறது.

சிதறு தேங்காய்

வழிப்பாட்டில் தேங்காயை தூள் தூளாக தரையில் அடிப்பது வழக்கத்தில் காணலாம். நான்கு திசைகளில் சிறும்படி தேங்காய் உடைப்பது சதுர் தேங்காய் வழிபாடு.  சிதறும் தேங்காய் துண்டுகள் பலரும் எடுத்துக்கொள்வது வழக்கம் இது போன்ற முறை குறிப்பாக விநாயகர் கோவிலில் காணலாம். சிதறும் தேங்காய் துண்டுகள் குழந்தை பிள்ளையாரின் பிரசாதம். இதன் காரணமாக என்னவோ சிதறும் தேங்காய் பகுகளைக் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

சிதறு தேங்காய் வழிபாட்டு தன்மையில் மனிதனின் அகங்காரத்தின் முடிவையும் தியாகத்தின் தொடக்கத்தின் நிலை உணற முடிகிறது. ஏழை சிறுவர்கள் சிதறு தேங்காய் துண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலை மறைமுகமாக செய்யும் தர்மமாகும். அகங்கார மண்டை உடைய வேண்டும் அமுதமான அறிவுநீரை அடைய வேண்டும் என்பதுதான் சிதறு தேங்காய் வழிபாட்டின் தத்துவம்.


ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001



Friday, March 2, 2012

கல்வி


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்உடையர் கல்லாதவர்

படித்தவர்கள் இரண்டு கண்களை உடைய வராகவும், படிக்காதவர் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தாலும், அது புண்களுக்குச் சமமாகும் என்பது வள்ளுவரின் வாக்கு.

படிக்க படிக்கத்தான் பொது அறிவு வளரும். ஒருவர் கற்கும் கல்வியானது அவரது ஏழு தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் செல்வமாகும். எல்லாச் செல்வங்களையும் ஒருவர் இழந்தாலும், அவர் கற்ற கல்வியினால்  எந்த ஊருக்கு, நாட்டிற்குச் சென்றாலும் பிழைத்துக் கொள்ள முடியும்.  நாம் கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுக்க, கொடுக்க நமக்கும் அறிவுத்திறன் உயரும். மற்றவர்களும் இதனால் பயனடைவார்கள். அதனால்தான் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புடையதாகிறது. நாம் கற்ற கல்வியை பிறரால் களவாட முடியாது. படிப்பதால் உலக விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லத கெட்டது எது என ஆராய்ந்து செயல்பட முடிகிறது. யாரிடம் எப்படிப் பழக  பேச வேண்டும் என்ற  பண்பாடு வளர்கிறது. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உண்டாகிறது. கல்வி கற்றால்தான் இதெல்லாம் முடியுமா? கல்வி கற்காதவர்கள் சாதிக்கவில்லையா? என தர்க்கம் செய்பவர்களும் உண்டு. கண்டிப்பாக சாதிக்க முடியும். அதுவும் கற்றவரின் துணையுடன். ஆனால் அதனால் என்ன பயன்? எளிதில் ஏமாறக்கூடிய வாய்ப்புகள் அதிகமல்லவா?
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியான கல்வியோகம் உண்டாக ஜோதிட ரீதியாக அவரவரின் ஜெனன கால ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக 4ம் பாவம் கல்விக்குரிய ஸ்தானமாகும். இந்த 4ம் பாவத்தில் கிரகங்கள்  பலமாக அமைந்து சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் அவரின் கல்வித் தகுதியானது மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகும். 4ம் பாவம் கெட்டு பலவீனமடைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் கல்விச் செல்வத்தை அனுபவிக்கவே முடியாமல் போய்விடும்.

நான்காம் பாவமானது கல்விச் செல்வத்தைப் பற்றியும், நல்ல அறிவாற்றல், அனுபவ அறிவு பற்றியும் குறிப்பிடுவதாகும். குறிப்பாக பேச்சுவன்மை, ஞாபக சக்தி, மூளையின் செயல்பாடு, கல்வி கற்க வேண்டும் என்ற வெறி போன்றவற்றைப் பற்றியும் 4ம் பாவத்தைக் கொண்டு அறியலாம்.

நவக்கிரகங்களில் சந்திரன் மனோகாரகனாவார். இவர், ஒருவரின் மனநிலையையும், மன வலிமையையும் எந்த நிலையில் இருக்கும் என அறியும் கிரகமாவார்.  புதன் கல்வி காரகனாவார். இவர் ஞாபகசக்தி, புத்திசாலித் தனம், கல்விகற்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் கிரகமாவார். குரு நல்ல பேச்சாற்றல், அறிவாற்றல், புத்திசாலித்தனம், படிப்பறிவு போன்றவற்றிற்குக் காரகனாவார்.

பொதுவாக ஒருவருக்குக் கல்விச் செல்வம் சிறப்பாக அமைய ஜெனன ஜாதகத்தில் 4ம் பாவமும், சந்திரன், குரு, புதன் போன்ற கிரகங்களும் பலமாக அமைந்திருப்பது நல்லது. 4ம் பாவம் பலம் பெறுவது மட்டுமின்றி அடிப்படைக் கல்வியை குறிக்கக் கூடிய 2ம் பாவமும் பலம் பெறுவது நல்லது. குறிப்பாக கற்ற கல்வியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற 5ம் பாவமும் பலம் பெறுதல் அவசியம். ஆகவே 2,4,5 ம் பாவங்கள் பலம் பெற்று அமைந்துவிட்டால், சரஸ்வதி தேவி கதவைத் தட்டி கல்விச் செல்வத்தை வாரி வழங்குவாள். அதன் மூலம் வாழ்வில் வளம் பெற முடியும்.

ஆக 4ம் அதிபதியும், புதன் பகவானும் ஆட்சி உச்சம் பெற்றிருப்பது, சுபகிரக சேர்க்கை பார்வை பெற்றிருப்பது மூலமாக கல்விச் செல்வமானது சிறப்பாக அமையும். 4 ல் அமையக்கூடிய கிரக அமைப்பைக் கொண்டு ஒருவருக்கு எந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைப் பற்றிக் தெளிவாக அறியலாம்.

கல்வி காரகன் புதன் 4ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், ஆடிட்டிங் தொடர்புடைய கல்வியில் யோகம் உண்டாகும். புதன், சூரியன் சேர்க்கை பெற்று இருந்தால் கம்ப்யூட்டர் துறையில் சாதனை செய்யக்கூடிய வாய்ப்பு, அந்தத் துறையில் பொறியாளர் ஆகும் யோகம் உண்டாகும்.

செவ்வாய் 4ம் வீட்டில் பலமாக இருந்தால் நிர்வாகத் தொடர்புடைய கல்வி, குறிப்பாக பி.பி.ஏ., எம்.பி.ஏ., தொடர்புடைய கல்வியில் ஏற்றம் உண்டாகும். கல்வித் தகுதியின் காரணமாக அரசுத் துறையில் பணியாற்றக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் 4 ம் வீட்டில் இணைந்திருந்தால் பொறியியல் துறையில் பொறியாளராக ஆகக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக அமையப் பெற்றவர்கள் மருத்துவத்துறையில் சாதனை செய்வார்கள். சூரியன் செவ்வாயுடன் சந்திரன் அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் கண்டிப்பாக மருத்துவத் துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

செவ்வாய் புதன் இணைந்திருந்தால் கட்டப் பொறியாளராகும் யோகம், செவ்வாய், சந்திரன் இணைந்திருந்தால் கப்பல் துறை தொடர்புடைய கல்வி யோகம் உண்டாகும்.  செவ்வாய், புதன், குரு சேர்க்கை பெற்றால் அறிவியல் சார்ந்த கல்வி சாதகமாக அமையும் பட்சத்தில் விஞ்ஞானியாகும் யோகம் ஏற்படும்.

புதன் பகவான் குரு போன்ற சுபர் சேர்க்கை பெற்றால் பேச்சால், வாக்கால் மேன்மை கிடைக்கும். அவர்கள் ஆசிரியர் பணி, பள்ளிக் கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய யோகம் வழக்கறிஞராகும் நிலை, மற்றவர்களுக்கு ஆலோசகராக விளங்கக்கூடிய கல்வி யோகம் உண்டாகும். குறிப்பாக குரு அதிபலம் பெற்றால் வங்கிப் பணி சார்ந்த கல்வி யோகம் உண்டாகும்.

குரு புதனுடன் சந்திரன் சேர்க்கை பெறுகின்றபோது ஒருவர் எழுத்துத் துறை, பத்திரிகை துறையில்  சாதனை செய்யும் யோகம், நல்ல கற்பனை வளம், கதை, கவிதைகள் எழுதக்கூடிய ஆற்றல் உண்டாகும். 4ம் வீட்டில் சந்திரன் பலம் பெறுகின்றபோது கேட்டரிங் கல்வி, கடல் சார்ந்த கல்வி உண்டாகும். சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தால் கலை, இசை, சங்கீதம் பாட்டு தொடர்புடையவற்றில் ஈடுபாடு உண்டாகும். சுக்கிரன் பலம் பெற்று புதன் சேர்க்கைப் பெறுகின்றபோது கலை தொடர்புடைய தொழில்நுட்ப  கல்வி யோகம் உண்டாகும்.

ஒருவர் எவ்வளவுதான் கல்வி ரீதியாக உயர்வுகளைப் பெற்றாலும், பலபட்டங்களை வாங்கி இருந்தாலும் கற்ற கல்விக்கேற்ற பணியையோ, தொழிலையோ செய்யமுடியாத நிலை உண்டாகி விடுகிறது. கல்வியை விட்டு பிற தொழிலில் ஈடுபடகூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் என்ன எனப் பார்க்கும்போது ஜோதிட ரீதியாக 4ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்த்தால்  இந்த நிலை ஏற்படுகிறது.

ஜோதிடமாமணி முருகு பாலமுருகன்  கைபேசி எண் 0091 72001 63001

Jothida mamani  Murugu Balamurugan. Astro Ph.D.research scholar cell-00917200163001