Today rasi palan - 26.05.2025
இன்றைய ராசிப்பலன்
- 26.05.2025
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
26-05-2025, வைகாசி 12, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல்
12.12 வரை பின்பு அமாவாசை. பரணி
நட்சத்திரம் காலை
08.23 வரை பின்பு கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.32 வரை
பின்பு ரோகிணி. சித்தயோகம் காலை
08.23 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.32 வரை பின்பு அமிர்தயோகம். அமாவாசை - கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம்
01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு
10.00-11.00.
சுக்கி சனி |
சந்தி |
சூரிய புதன் |
குரு |
ராகு |
26.05.2025 |
செவ் |
|
|
கேது |
||
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 26.05.2025
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.
ரிஷபம்
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை
காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண்
செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது
தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதையும் சிந்தித்து செய்வது நல்லது.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல
முன்னேற்றத்தை காணலாம். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த
நாள் அமையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை
சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல்
ஆரோக்கியத்தில் சிறு
பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண்
வாக்கு வாதங்கள் தோன்றும். உடன்
பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உங்கள் ராசிக்கு பகல் 01.40 வரை
சந்திராஷடமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு பகல்
01.40 க்கு மேல்
சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன
கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தடைப்படும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு
தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் ரீதியாக அரசு
வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
மகரம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
இன்று வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளி
வட்டார நட்புகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
இன்று உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு
மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக
கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment