Thursday, May 8, 2025

Today rasi palan - 09.05.2025

 


Today rasi palan -
09.05.2025

இன்றைய ராசிப்பலன் -  09.05.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

09-05-2025, சித்திரை 26, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பகல் 02.56 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 12.09 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் இரவு 12.09 வரை பின்பு சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

 

ராகு சுக்கி சனி

சூரிய புதன்

குரு

 

 

 

09.05.2025

செவ்

 

 

 

 

 

சந்தி கேது

 

இன்றைய ராசிப்பலன் -  09.05.2025

மேஷம்

இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன்கள் குறையும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக செயல்படவும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவால் பணிச்சுமை சற்று குறையும்.

No comments: