Today rasi palan - 25.05.2025
இன்றைய ராசிப்பலன்
- 25.05.2025
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
25-05-2025, வைகாசி 11, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி
பகல் 03.51 வரை
பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அஸ்வினி நட்சத்திரம் பகல்
11.12 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 11.12 வரை
பின்பு பிரபலாரிஷ்ட யோகம். மாத
சிவராத்திரி விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற
நாள்.
இராகு காலம் - மாலை 04.30 -
06.00, எம கண்டம் - பகல் 12.00 -
01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 -
04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 -
11.00.
சுக்கி சனி |
சந்தி |
சூரிய புதன் |
குரு |
ராகு |
25.05.2025 |
செவ் |
|
|
கேது |
||
|
|
|
|
இன்றைய ராசிப்பலன் - 25.05.2025
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.
மிதுனம்
இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் வழியில் நல்ல
செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன்
கைக்கு வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கடகம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். தொழில் ரீதியாக வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். நவீன
பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
சிம்மம்
இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண்
செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்
பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த
நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
துலாம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண
உதவிகள் வந்து சேரும். தர்ம
காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களால் வீண்
விரயங்கள் ஏற்படலாம். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல
முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல
வாய்ப்புகள் கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை
உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன்
பிரச்சினை தீரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
இன்று உடல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை
செலவிட நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்து வழியாக அனுகூலப்பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment