Monday, May 12, 2025

Today rasi palan - 13.05.2025

 


Today rasi palan -
13.05.2025

இன்றைய ராசிப்பலன் -  13.05.2025

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

வடபழனி, சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-05-2025, சித்திரை 30, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 12.36 வரை பின்பு தேய்பிறை துதியை. விசாகம் நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு அனுஷம். மரணயோகம் காலை 09.09 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

ராகு சுக்கி சனி

சூரிய புதன்

குரு

 

 

 

13.05.2025

செவ்

 

 

 

சந்தி

 

கேது

 

இன்றைய ராசிப்பலன் -  13.05.2025

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் நல்லது நடக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.

கடகம்

இன்று குடும்பத்தில் அமைதி நிலவ பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி மன நிம்மதி இருக்கும்.

சிம்மம்

இன்று உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்களால் நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். 

கன்னி

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக நற்பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் சிறு மனகவலைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் நற்பலனை அடையலாம். வேலைபளு குறைந்து மன நிம்மதி ஏற்படும்.

மகரம்

இன்று உள்ளம் மகிழும் செய்திகள் உங்களை தேடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு அனுகூலப் பலன் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்

இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும்.

No comments: