Wednesday, May 31, 2017

இன்று - 31.05.2017

இன்று -  31.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சூரியன் ஏற்படுத்தும் அஸ்தங்கத விளைவு! -     கே.பி. ஐயப்ப சர்மா

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

குலம் காக்கும் தெய்வம் எது? – ஆரூடம் சொல்லும்! - அம்சி விவேகானந்தன்

ரோகிணி தரும் பலன்கள்!-- -          -டாக்டர் இராரகு M,Sc Astro

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

நவதானியப் பரிகாரத்தின் அறிவியல் விளக்கம்! –      ஜோதி ஷண்முகம்

நோயின்றி வாழச் செய்யும் சந்திர தரிசனம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

வள்ளல் குணம் யாருக்கு? -          பிராஜசேகரன் M.Phil Astro

சாதனைக்குத் துணை நிற்கும் வாழ்க்கைத் துணை!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஜீவ ஆற்றல் தரும் அரச மரம்! –      சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (04-06-2017 முதல் 10-06-2017 வரை) வைகாசி 21 முதல் 27 வரை

முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
31-05-2017, வைகாசி -17, புதன்கிழமை, சஷ்டி திதி காலை 07.11 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.13 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1 , ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக - நவகிரக வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சுக்கி
புதன்
சூரிய
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
31.05.2017

சந்தி

ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  31.05.2017

மேஷம்
இன்று குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.
கன்னி
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 11.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு காலை 11.13 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்


இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும்.  சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் பெறுவீர்கள்.

Tuesday, May 30, 2017

இன்று - 30.05.2017

இன்று -  30.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சூரியன் ஏற்படுத்தும் அஸ்தங்கத விளைவு! -     கே.பி. ஐயப்ப சர்மா

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

குலம் காக்கும் தெய்வம் எது? – ஆரூடம் சொல்லும்! - அம்சி விவேகானந்தன்

ரோகிணி தரும் பலன்கள்!-- -          -டாக்டர் இராரகு M,Sc Astro

12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

நவதானியப் பரிகாரத்தின் அறிவியல் விளக்கம்! –      ஜோதி ஷண்முகம்

நோயின்றி வாழச் செய்யும் சந்திர தரிசனம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

வள்ளல் குணம் யாருக்கு? -          பிராஜசேகரன் M.Phil Astro

சாதனைக்குத் துணை நிற்கும் வாழ்க்கைத் துணை!-
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஜீவ ஆற்றல் தரும் அரச மரம்! –      சித்தயோகி சிவதாசன் ரவி

வார ராசிபலன் (04-06-2017 முதல் 10-06-2017 வரை) வைகாசி 21 முதல் 27 வரை

முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
30-05-2017, வைகாசி -16, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 08.47 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூசம் நட்சத்திரம் பகல் 11.57 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1 , ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சுக்கி
புதன்
சூரிய
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
30.05.2017

சந்தி

ராகு
சனி(வ)
 

               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  30.05.2017

மேஷம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
மிதுனம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.
கடகம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். பொன்பொருள் வாங்கி மகிழ்வார்கள்.
துலாம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.
தனுசு
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
மீனம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.