Saturday, November 26, 2016

வார ராசிப்பலன் - நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை 2016





இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD

வார ராசிப்பலன்   -      நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை   2016
கார்த்திகை  12 முதல் 18 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
திருக்கணித கிரக நிலை




செவ்  
ராகு
சுக்கி
சனி  புதன்
சூரிய
சந்தி  
குரு 


கிரக   மாற்றம்
28.11.2016 தனுசு புதன் இரவு 12.42 மணிக்கு
2.12.2016 மகர சுக்கிரன் இரவு 09.13 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 
துலாம்    26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.
விருச்சிகம் 28.11.2016 மதியம் 02.19 மணி முதல் 01.12.2016 அதிகாலை 02.36 மணி வரை.
தனுசு     01.12.2016 அதிகாலை 02.36 மணி முதல் 03.12.2016 மதியம் 01.45 மணி வரை.
மகரம்     03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு 11.01 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

27.11.2016 கார்த்திகை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். தேய்பிறை

01.12.2016 கார்த்திகை 16 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைதிதி மூல நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சனி, சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் சுக்கிரன், 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்      27,3
சந்திராஷ்டமம்                     28.11.2016 மதியம் 02.19 மணி முதல் 01.12.2016 அதிகாலை 02.36 மணி வரை.
ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் குரு, 9ல் செவ்வாய், 10ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 7ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,29,30,
சந்திராஷ்டமம்        -  01.12.2016 அதிகாலை 02.36 மணி முதல் 03.12.2016 மதியம் 01.45 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபமுயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30,1,2.
சந்திராஷ்டமம்      - 03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு 11.01 மணி வரை.
கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் குரு 7ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம்பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் வரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. ராகு கேதுவுக்கு சர்பசாந்தி செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள் - 1,2,3.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,3.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், சனி, 4ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், சனி 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் முன் ஜாமீன் பொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது, தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலை பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,1,2,3.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்= 28,29,30,3.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய், 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சோர்வு, மந்த நிலை தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவையும் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும்எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர் பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சனேயரை வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,1,2,3.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல் சனி சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 27,28,29,30,3.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன், புதன், 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனகளை ஏற்படுத்திவிடும் எனபதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

வெற்றிதரும் நாட்கள் - 28,29,30,1,2,3.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 9ல் சூரியன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 1,2,3.

சந்திராஷ்டமம்      - 26.11.2016 அதிகாலை 01.33 மணி முதல் 28.11.2016 மதியம் 02.19 மணி வரை.

No comments: