Saturday, November 12, 2016

வார ராசிப்பலன் நவம்பர் 13 முதல் 19 வரை 2016 ஜப்பசி 28 முதல் கார்த்திகை 4 வரை

வார ராசிப்பலன் நவம்பர் 13  முதல்  19 வரை   2016
ஜப்பசி 28 முதல் கார்த்திகை 4 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





கேது 
கிரக   மாற்றம்
16.11.2016           விருச்சிக சூரியன்





செவ்  
ராகு
சுக்கி
சனி  புதன் 
சூரிய
குரு 

               
                                                               
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மேஷம்    12.11.2016 இரவு 10.29 மணி முதல் 14.11.2016 இரவு 09.39 மணி வரை.
ரிஷபம்    14.11.2016 இரவு 09.39 மணி முதல் 16.11.2016 இரவு 08.56 மணி வரை.
மிதுனம்   16.11.2016 இரவு 08.56 மணி முதல் 18.11.2016 இரவு 10.33 மணி வரை.
கடகம்     18.11.2016 இரவு 10.33 மணி முதல் 21.11.2016 காலை 04.02 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
13.11.2016 ஐப்பசி 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசிதிதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் சுக்கிரன், 10ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்து கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 13,14,17,18

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ராசிக்கு 5ல் குரு 6ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 15,16,19.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சனி 7ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 16ம் தேதி முதல் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்  13,14,17,18

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் 7ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 13,14,15,16,19

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 3ல் சூரியன், 6ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல் படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்15,16,17,18

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 16ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 17,18,19.
சந்திராஷ்டமம்                      12.11.2016 இரவு 10.29 மணி முதல் 14.11.2016 இரவு 09.39 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், 4ல் செவ்வாய், 12ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 13,14,19.
சந்திராஷ்டமம்                      16.11.2016 இரவு 08.56 மணி முதல் 18.11.2016 இரவு 10.33 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுலாம். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 13,14,15,16
சந்திராஷ்டமம்                      16.11.2016 இரவு 11.26 மணி முதல் 18.11.2016 இரவு 01.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு ஏழரைசனி தொடருவதும், 2ல் செவ்வாய், 10ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்ணைப் பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 15,16,17,18.
சந்திராஷ்டமம்                      18.11.2016 இரவு 10.33 மணி முதல் 21.11.2016 காலை 04.02 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் குரு, 11ல் புதன் சனி, 16ம் தேதி முதல் 11 சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். விநாயகப் பொருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 17,18,19

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் கேது,7ல் ராகு சஞ்சரிப்பதும், 8ல் குரு, 12ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாதுஉத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. திறம்பட செயல்பட முடியும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்                     13,14,19.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் குரு, 10ல் சக்கிரன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும்.


வெற்றிதரும் நாட்கள்     15,16.

No comments: