Monday, October 17, 2016

கோட்சாரத்தில் ராகு



கோட்சாரத்தில்  ராகு


சாயா கிரகம், சர்ப்ப கிரகம், நிழல் கிரகம், கரும் பாம்பு என அழைக்கப்படும் ராகு நெடிய உருவமுடையது. பெண் கிரகம். கருமை நிறம், ஆகாய கிரகம், பித்த நாடி, முழங்காலை ஆளுமை செய்யும். ராகுவுக்குரிய உலோகம் கருங்கல், ரத்தினத்தில் கோமேதகம், தானியம் உளுந்து, திசை தென்மேற்கு, சமித்து அறுகு, சுவை புளிப்பு, வாகனம் ஆடு, நவதுவாரம் வலது கண், தூபம் கடுகு, முழு பாவி, அதிதேவதை பத்ரகாளி, உரிய புஷ்பம் மந்தாரை. ராகுவுக்கு சொந்த வீடு இல்லை. எவ்வீட்டில் அமைகிறதோ அதனை தன் சொந்த வீடாகக் கொண்டு பலன் தரும். சனி, சுக்கிரன் நட்பு. புதன், குரு சமம். சூரியன், சந்திரன், செவ்வாய் பகை. ராகு வக்ரமோ, அஸ்தங்கமோ அடைவது இல்லை.
ராகுவுக்குரிய நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம். ராகு கோட்சாரத்தில் ஒரு ராசியில் 1 1/2 வருட காலம் தங்கும். விருச்சிக ராசியில் உச்சமும், ரிஷபத்தில் நீசமும் பெறும். மாலை போன்ற வடிவம் கொண்ட ராகு பகவான் கோட்சார ரீதியாக 3,6,11ல் வரும் போது மிகவும் சிறப்பான யோக பலனையும், உயர்வையும் உண்டாக்கும். சூரியனையே பலமிழக்க செய்யும் சக்தி கொண்டது. சூரியனின் சேர்க்கை பெற்றால் கடுமையான கெடுபலன்களை ஏற்படுத்தும். ராகு சாதகமற்று இருந்தால் விஷ பூச்சிகளால் கண்டம், வயிறு கோளாறு, அஜீரண கோளாறு, புற்று நோய், உண்ணும் உணவு விஷமாகும் அமைப்பு, தோல் வியாதி போன்றவை உண்டாகும்.
கோட்சார ரீதியாக ராகு 12 ராசிகளில் சஞ்சரிக்கும் போது உண்டாகும் பலன்கள்
ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலங்களில் உடல் நலப் பாதிப்பு, அலைச்சல், டென்ஷன், கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு, குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும்.
2ல் சஞ்சரிக்கின்ற காலத்தில் பண நஷ்டம், குடும்பத்தில் கலகம், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, கண்களில் பாதிப்பு, பேச்சால் பிரச்சனைகள் உண்டாகும்.
     3ல் சஞ்சரிக்கும் காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, குடும்பத்தில் உள்ளவர்களால் அனுகூலம், எதிர்ப்புகளை சமாளிக்கும் வலிமை உண்டாகும்.
4ல் சஞ்சரிக்கும் காலத்தில் தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, சுக வாழ்விற்கு தடை, வெளியூர் பயணங்களால் அலைச்சல், கல்வியில் தடை, குடும்பத்தில் அமைதி குறைவு உண்டாகும்.
5ல் சஞ்சரிக்கும் காலத்தில் பூர்வீக வழியில் அனுகூமற்ற நிலை, பண நஷ்டம், பிள்ளைகளால் அமைதி குறைவு, புத்திர பாக்கியம் தடைபடும் அமைப்பு, திருமண சுபகாரியம் நடைபெற தடை ஏற்படும்.
6ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியம், எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல், பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும்.
7ல் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை, கணவன் மனைவி இடையே ஒற்றுமையற்ற நிலை, உடல் நலப் பாதிப்பு, மனைவிக்கு கருச் சிதைவு, மஞ்சள் காமாலை உண்டாகும் நிலை கூட்டாளிகளிடையே வீண் விரோதம் ஏற்படும்..
     8ல் சஞ்சரிக்கும் காலத்தில் பகைவர்களால் பயம், விஷத்தினால் கண்டம், விஷப்பூச்சிகளால் ஆபத்து, உணவே விஷமாக மாறும் நிலை, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, மனக்கஷ்டம், பணக்கஷ்டம் உண்டாகும்.
9ல் சஞ்சரிக்கும் காலத்தில் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் பகை, விரோதம், பங்காளிகளால் அவமானம், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை, தந்தையின் உடல் நலம் பாதிப்பு உண்டாகும்.
10ல் சஞ்சரிக்கும் காலத்தில் ஓரளவுக்கு தொழில் வியாபார நிலையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் தேவையற்ற தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
11ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் தாராள தன வரவு எடுக்கும் முயற்சிகளில் லாபம், உயர்வு உண்டாகும்.
12ல் சஞ்சரிக்கும் காலத்தில் பண விரயம், தூக்கம் சரியாக அமையாத நிலை, கட்டில் சுக வாழ்வில் பாதிப்பு, தூரப்பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.
    

No comments: