Wednesday, January 3, 2018

வார ராசிப்பலன் - ஜனவரி 7 முதல் 13 வரை

வார ராசிப்பலன் - ஜனவரி 7 முதல்  13 வரை 
மார்கழி 23 முதல் 29 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

               




               
திருக்கணித கிரக நிலை
07.01.2018
ராகு
கேது
சந்தி
சூரிய சனி
சுக்கி புதன்


செவ் குரு
 

     
 கிரக மாற்றம்
13-01-2018 மகரத்தில் சுக்கிரன் பகல் 2.45 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி                  07-01-2018 காலை 07.15 மணி முதல் 09-01-2018 மதியம் 02.23 மணி வரை.
துலாம்                09-01-2018 மதியம் 02.23 மணி முதல் 12-01-2018 அதிகாலை 12.49 மணி வரை.
விருச்சிகம்      -12-01-2018 அதிகாலை 12.49 மணி முதல் 14-01-2018 மதியம் 01.11 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
07.01.2018 மார்கழி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை

08.01.2018 மார்கழி 24 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை

12.01.2018 மார்கழி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.15 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவதால் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்ப்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -7, 8, 9, 10, 11.

சந்திராஷ்டமம் - -12-01-2018 அதிகாலை 12.49 மணி முதல் 14-01-2018 மதியம் 01.11 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைகேற்படி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 6-ல் குரு, 8-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது உத்தமம். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடு சிறப்பான பலன்களை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12, 13.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப்பெற்று சமசப்தம ஸ்தானமான 7-ல் வலுவாக இருப்பதாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் இந்த வாரம் ஏற்றமான பலன்களையே பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும். நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 4-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாயும், பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரனும் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது  உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் கைகூடும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9, 12, 13.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறுவார்கள். வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், குருவுடன் 12-ல் இருப்பதாலும் 2-ஆம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். முடிந்த வரை முன்கோபத்தை குறைத்துக் கொள்வதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9, 12, 13.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். ஜென்ம ராசியில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9, 10, 11.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
வீண் பழிச்சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும் 12-ல் சூரியன், சனி, புதன் சஞ்சரிப்பதாலும் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாதுவரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 9, 10, 11, 12, 13.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சூரியன், சுக்கிரன், புதனுடன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 12, 13.

சந்திராஷ்டமம் - 7-01-2018 காலை 07.15 மணி முதல் 09-01-2018 மதியம் 02.23 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் மீது இருந்த பழிச்சொல் விலகி மனஅமைதி அடைவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குரு, செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதும், பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும் நல்லது. வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஒரு சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 7, 8.

சந்திராஷ்டமம் - 09-01-2018 மதியம் 02.23 மணி முதல் 12-01-2018 அதிகாலை 12.49 மணி வரை.



No comments: