Saturday, June 17, 2017

வார ராசிப்பலன் ஜுன் 18 முதல் 24 வரை - 2017

வார ராசிப்பலன்  ஜுன் 18 முதல் 24 வரை - 2017 (வைகாசி 28 முதல்  ஆனி  3  வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



சந்திர

சுக்கி

புதன்

செவ்
சூரிய,

கேது 
திருக்கணித கிரக நிலை



ராகு
சனி ( )



குரு

               
கிரக மாற்றம்
18-06-2017          மிதுன புதன் இரவு 10.52 மணிக்கு
21-06-2017          விருச்சிக சனி காலை 04.38 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                -               17-06-2017பகல் 12.44 மணி முதல் 19-06-2017மாலை 05.26 மணி வரை.
மேஷம்           19-06-2017மாலை 05.26 மணி முதல் 21-06-2017மாலை 06.48மணி வரை.
ரிஷபம் -         21-06-2017மாலை 06.48மணி முதல் 23-06-2017மாலை 06.18மணி வரை
மிதுனம் -      23-06-2017மாலை 06.18மணி முதல் 25-06-2017மாலை 06.00மணி வரை

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
19-06-2017ஆனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை, தசமி திதி, ரேவதி நட்சத்திரம், சித்தயோகம், காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன லக்னம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல் படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்                    20, 21, 24.           

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். குரு 5-ல் சஞ்சரிப்பதால் பண வரவு சிறப்பாக இருந்து எதிலும் அனுகூலமானப் பலனை பெற்றுவீடுர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். முருகப் பொருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 22, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விட முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாதிருப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 24.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும். சிறப்பான ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்கு வாதங்களால் மன நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். 10-ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வதால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நற்பலனை தரும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.

சந்திராஷ்டமம்  - 17-06-2017 பகல் 12.44 மணி முதல் 19-06-2017மாலை 05.26 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் கேது 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து அனுகூலப்பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட செயல் பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 18, 24.

சந்திராஷ்டமம் - 19-06-2017மாலை 05.26 மணி முதல் 21-06-2017மாலை 06.48மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் சூரியன், செவ்வாய் 11-ல் ராகு, சஞ்சரிப்பது ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலங்களை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி குறையாது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20.

சந்திராஷ்டமம்      - 21-06-2017மாலை 06.48மணி முதல் 23-06-2017மாலை 06.18மணி வரை

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஏழரைச்சனி தொடருவதும் 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுவலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அரிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -  19, 20, 21, 22.

சந்திராஷ்டமம்      - 23-06-2017மாலை 06.18மணி முதல் 25-06-2017மாலை 06.00மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைச்சனி தொடருவதும், 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார்- உறவினர்களும் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் ஏற்படும் சிக்கல்களில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாதுவரவேண்டிய வாய்ப்புகள் தக்க சமயத்தில் வந்து சேரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
வீண் பழிச்சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் 9-ல் குரு சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். ஆன்மீக, தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 24.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்பதால் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபடவும்.

வெற்றி தரும் நாட்கள் - 20, 21.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் அனுகூலமாக செயல்படுவதால் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்ப்பர்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள்  நல்ல மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 22, 23.


No comments: