Sunday, January 29, 2017

மாத ராசிப்பலன் பிப்ரவரி 2017

மாத ராசிப்பலன் பிப்ரவரி 2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

செவ் சுக்கி 




கேது 


சூரிய
ராகு 
சனி  புதன் 


குரு 

               
கிரக   மாற்றம்
03.02.2017  மகர புதன்
06.02.2017  குரு வக்ர ஆரம்பம்
12.02.2017  மகர சூரியன்
22.02.2017  கும்ப புதன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11ல் கேது சஞ்சாரம் செய்வதும், அதிசாரமாக 9ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபத்தினை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதோடு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும்

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, உத்தமம்.
சந்திராஷ்டமம்  18.02.2017 பகல் 12.31 மணி முதல் 20.02.2017 இரவு 12.55 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 10ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாதுஉற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள்

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, குருப்பீரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  20.02.2017 இரவு 12.55 மணி முதல் 23.02.2017 பகல் 11.33 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும் 3ல் ராகு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வலாய்ப்பும் அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.

பரிகாரம் சிவ பெருமானை வழிபாடு செய்வது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்  23.02.2017 பகல் 11.33 மணி முதல் 25.02.2017 இரவு 07.14 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும் 2ல் ராகு, அதிசாரமாக 3ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.

பரிகாரம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  25.02.2017 இரவு 07.14 மணி முதல் 27.02.2017 இரவு 12.09 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்றாலும் அஷ்டம ஸ்தானமான 8ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சற்திக்க வேண்டியிருந்தாலும் எதிர் பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள்.

பரிகாரம். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  27.02.2017 இரவு 12.09 மணி முதல் 02.03.2017 அதிகாலை 03.16 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு சமசப்தம ஸ்தானமான 7ல் சுக்கிரன், மாத பிற்பாதியில் 6ல் சூரியன்  சஞ்சாரம் செய்வதும் சாதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது, குருப்பீரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்        02.02.2017 இரவு 09.11 மணி முதல் 04.02.2017 இரவு 12.20 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய், 11ல் ராகு சஞ்சரிப்பது ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் என்றாலும், 4ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்திம் செய்பபவர்கள் அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.

பரிகாரம். சனி பகவானை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  04.02.2017 இரவு 12.20 மணி முதல் 07.02.2017 அதிகாலை 02.43 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தொடருவது சாதமற்ற அமைப்பு என்றாலும் 5ல் சுக்கிரனும், மாத முற்பாதியில் 3ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். வேளைபளு குறையும்.

பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  07.02.2017 அதிகாலை 02.43 மணி முதல் 09.02.2017 காலை 05.11 மணி வரை


தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு மாத பிற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்தும் 3ல் கேது சஞ்சாரிப்பதும் அனுகூலமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  09.02.2017 காலை 05.11 மணி முதல் 11.02.2017 காலை 08.56 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு 3ல் செவ்வாய், சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பழைய வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்

பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்  11.02.2017 காலை 08.56 மணி முதல் 13.02.2017 மதியம் 03.11 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு 2ல் செவ்வாய், 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் சனி 11ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும்.

பரிகாரம். சிவ பொருமானை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  13.02.2017 மதியம் 03.11 மணி முதல் 15.02.2017 இரவு 12.36 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6ல் ராகு, 11ல் சூரியன் புதன், சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு அனுகூலமானப்பலனைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை சில காலம் மதள்ளி வைப்பது உத்தமம். பொன் பொருள் போன்றவற்றை வாங்குவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது  விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்  15.02.2017 இரவு 12.36 மணி முதல் 18.02.2017 பகல் 12.31 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்
01.02.2017 தை 19 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம்  09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

02.02.2017 தை 20 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

03.02.2017 தை 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

06.02.2017 தை 24 ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம்வளர்பிறை

09.02.2017 தை 27 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி புனர்பூச நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

16.02.2017 மாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம்தேய்பிறை

17.02.2017 மாசி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டிதிதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

23.02.2017 மாசி 11 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை


No comments: