Thursday, January 12, 2017

இன்று - 12.01.2017


இன்று -  12.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
12.01.2017, மார்கழி 28, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 05.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை, புனர்பூசம் நட்சத்திரம்    பின்இரவு 01.19 வரை பின்பு பூசம், அமிர்த யோகம் பின்இரவு 01.19 வரை பின்பு சித்தயோகம் நேத்திரம் 2, ஜீவன் 1.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.





சந்தி
கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
12.01.2017





ராகு
புதன்
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  12.01.2017

மேஷம்
இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் பிரச்சனை ஒரளவு குறையும்.
சிம்மம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும்.
துலாம்
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். மன் நிம்மதி குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.
மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.
கும்பம்
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும்.
மீனம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். சொத்துகளை விற்பதில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.


No comments: