Friday, January 13, 2017

இன்று - 13.01.2017

இன்று -  13.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
13.01.2017, மார்கழி 29, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 02.40 வரை பின்பு தேய்பிறை துதியை, பூசம் நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு ஆயில்யம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, அம்மன் வழிபாடு நல்லது, போகி பண்டிகை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  






கேது  செவ்
சுக்கி  
திருக்கணித கிரக நிலை
13.01.2017



சந்தி

ராகு
புதன்
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  13.01.2017

மேஷம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். பணவரவு சுமாராக இருக்கும். அலைச்சல்கள் ஏற்படும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். வேலையில் சக தொழிலாளிகளால் பிரச்சனைகள் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத  லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கன்னி
இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண்விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் ஓரளவு தீரும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
மகரம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தொழிலில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். புத்திரர்கள் இன்று அனுகூலமாக அமைவார்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும்.


No comments: