Saturday, December 24, 2016

ஏப்ரல் முதல் ஏறுமுகத்தில் ஸ்டாலின்



திரு. மு.. ஸ்டாலின் அவர்களின் ஜாதகம்

தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் அதில் முக்கிய கட்சியாக விளங்குவது தி.மு.. இந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னனி தலைவராக விளங்குபவர் திரு. மு..ஸ்டாலின் அவர்கள். அரசியலில் மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்து பல இன்னல்களை சந்தித்து நெருக்கடியான காலங்களில் பல முறை சிறை செல்ல நேரிட்டாலும் தனக்கென மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர். அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், கழகத்தின் துணை பொது செயலாளாராகவும் விளங்குகிறார். மாநகர மேயராக 1996 முதல் 2001 வரை பணியாற்றி உள்ளார். தமிழகத்தின் துணை முதல்வராக 2009 முதல் 2011 வரை மக்களுக்கு சேவை செய்துள்ளார். தற்போது எதிர் கட்சி தலைவராக உள்ளார்.
திரு. மு.. ஸ்டாலின் அவர்கள் சிம்மராசி, பூர நட்சத்திரம், விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ளார். அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு காரகனான சூரியனின் ராசியில், நிர்வாகத்திறனுக்கு காரகனான செவ்வாயின் லக்னத்தில் பிறந்திருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் அரசியலில் ஈடுபடுவதற்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியவர். லக்னாதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானமான 5ல் நட்பு கிரகமான குருவின் வீட்டில் அமைந்து குருவுடன் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதால் பரிவர்த்தனை யோகம் உண்டாகி உள்ளது. இரு நட்பு கிரகங்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனைப் பெற்றிருப்பது அற்புதமான அமைப்பாகும். இது மட்டுமின்றி செவ்வாய், 7ம் அதிபதி சுக்கிரன் மற்றும் 11ம் அதிபதி புதனுடன் இணைந்து அமைந்துள்ளார்செவ்வாய் அம்சத்தில் உச்சம் பெற்றள்ளார். 8ம் அதிபதி புதன் 5ல் நீசம் பெற்றிருந்தாலும் உடன் சுக்கிரன் உச்சம் பெற்று அமைந்து வர்கோத்தமும் பெற்றிருப்பதால் புதனுக்கு வலுவான நீசபங்க ராஜயோகம் உண்டாகி உள்ளது. 8ம் அதிபதி புதன் 5ல் நீசம் பெற்றிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் ஆயுள்காரகன் சனி உச்சம் பெற்றிருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. (சனி வக்ரம் பெற்றிருந்தாலும் வக்ர ஆரம்ப காலம் ஆகும். குரு பார்வை இருப்பது சிறப்பு.)
விருச்சிக லக்னத்திற்கு 9,10க்கு அதியான சூரியனும் சந்திரனும் சமசப்தமமாக பார்வை செய்து கொள்வதன் மூலம் வலுவான தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகி உள்ளது. சிம்ம ராசியில் பிறந்துள்ள ஜாதகருக்கு சந்திரன் வர்கோத்தமம் பெற்று அமைந்திருப்பதும், சந்திரனையும், ஆயுள்காரகன் சனியையும், வாக்கு ஸ்தானமான 2ம் வீட்டையும், குரு பார்வை செய்வதும் அற்புதமான அமைப்பாகும். சந்திரனுக்கு திரிகோண ஸ்தானமான 9ல் குரு அமைந்திருப்பதால் குருசந்திர யோகம் உண்டாகி உள்ளது. சர்ப கிரகமான ராகு மகரத்தில் அமைந்து லக்னத்திற்கு 3லும், ராசிக்கு 6லும் இருப்பதும் சிறப்பு. இப்படி பல்வேறு ராஜ யோகங்களை கொண்டது திரு. ஸ்டாலின் அவர்களின் ஜாதகம்.
கடந்த 19.12.2005ல் திரு. ஸ்டாலின் அவர்களின் ஜாதகப்பலனை பாலஜோதிடம் என்ற வார இதழிலில் எழுதும் போது விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள ஜாதகருக்கு 18.05.2009 முதல் நடைபெறவுள்ள குருமகா திசை பல்வேறு உயர்வுகளை தரும் என்று ஆணித்தரமாக எழுதி இருந்தேன். அதே போல மே 2009ல் தமிழகத்தின் துணை முதல்வர் பதவியை ஏற்றார்-.

சுயபுக்தி காலத்தில் துணை முதல்வர் பதவியை வகித்தவர்க்கு அடுத்து நடைபெற்ற லக்னாதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமான சனி புக்தியும், அதற்கடுத்து நடைபெற்ற நீசம் பெற்று அமைந்த புதன் புக்தியும் நல்ல பலனை ஏற்படுத்தவில்லை. தற்போது 30.03.2017 வரை குரு திசையில் கேது புக்தி நடைபெறவுள்ளதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. அடுத்து பூர நட்சத்திரத்தில் பிறந்துள்ள ஜாதகருக்கு நட்சத்திரத்திற்கு அதிபதியான சுக்கிரன் லக்கினத்திற்கு திரிகோண ஸ்தானமான 5ம் வீட்டில் உச்சம் பெற்று, அம்சத்திலும் உச்சம் பெற்று, வர்கோத்தமும் பெற்று வலுவாக அமைந்து 30.03.2017 முதல் புக்தி தொடங்குவதால் திரு. மு..ஸ்டாலின் அவர்களின் பலம் அதிகரித்து உயரிய பதவியினை அடையும் யோகத்தினை உண்டாக்கும்.

No comments: