Thursday, December 29, 2016

ஜனவரி மாத ராசிப்பலன் - 2017

ஜனவரி மாத ராசிப்பலன் - 2017

(ஜனவாி 1ம் தேதி முதல் தினமும் 
வலைதளத்தில் தினப்பலன்)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


                                                               
               



சுக்கி செவ்,கேது
திருக்கணித
கிரக நிலை

ê‰F
ராகு
சூரிய புதன் ()
சனி

குரு 

09.01.2017  புதன் () நிவர்த்தி
14.01.2017  மகர சூரியன்.
20.01.2017  மீன செவ்வாய்
26.01.2017  தனுசு சனி
27.01.2017  மீன சுக்கிரன்

மேஷம்    அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே அஞ்சா நெஞ்சமும், நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் செவ்வாய், சுக்கிரன், 9ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் அக்கரை எடுத்து கொள்வது உத்தமம். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
பரிகாரம். விநாயகரை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 22.01.2017 அதிகாலை 04.23 மணி முதல் 24.01.2017 மாலை 04.36 மணி வரை.

ரிஷபம் கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, நல்ல பேச்சாற்றலும் இனிமையான சுபாவமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் அஷ்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த  லாபம் கிட்டும். புதிய புதிய வாய்ப்புகளும் கிடைக்க பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிட்டும். வேலை பளு குறைவாகவே இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  24.01.2017 மாலை 04.36 மணி முதல் 27.01.2017 அதிகாலை 02.53 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நல்ல அறிவாற்றலும், எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும், மாத பிற்பாதியில் அஷ்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சரிக்க உள்ளதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் சற்ற ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்றாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  30.12.2016 இரவு 07.38 மணி முதல் 02.01.2017 அதிகாலை 04.25 மணி வரை.மற்றும்  27.01.2017 அதிகாலை 02.53 மணி முதல் 29.01.2017 காலை 10.50 மணி வரை.

கடகம்  ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே அழகான முகத்தோற்றமும் கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத பண்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் ராகு 8ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்க் கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
பரிகாரம். ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  02.01.2017 அதிகாலை 04.25 மணி முதல் 04.01.2017 பகல் 11.15 மணி வரை.மற்றும்  29.01.2017 காலை 10.50 மணி முதல் 31.01.2017 மாலை 04.48 மணி வரை

சிம்மம்  ;  மகம், பூரம். உத்திரம்1ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வைராக்கியமான குணமும், வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 7ல் சுக்கிரன், மாதபிற்பாதியில் 6ல் சூரியன், சஞ்சாரம் செய்ய இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழ்பாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  04.01.2017 பகல் 11.15 மணி முதல் 06.01.2017 மதியம் 03.45 மணி வரை.மற்றும்  31.01.2017 மாலை 04.48 மணி முதல் 02.02.2017 இரவு 09.11 மணி வரை

கன்னிஉத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே நல்ல பண்பும், மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம  ராசிக்கு 3ல் சனி, 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கை கூட தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்        06.01.2017 மதியம் 03.45 மணி முதல் 08.01.2017 மாலை 05.58 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் ராகு, மாத முற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்ற சிரமம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  08.01.2017 மாலை 05.58 மணி முதல் 10.01.2017 மாலை 06.48 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே பிடிவாத குணமும், தன்னுடைய கொள்கைகளிலிருந்து மாறாமல் வாழும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபம் அளிக்கும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்  10.01.2017 மாலை 06.48 மணி முதல் 12.01.2017 இரவு 07.50 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே தன்மையான குணமும், வேகமாக பேசினாலும் திருத்தமாக பேசக் கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், கேது சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும் என்றாலும் ஏழரைச் சனியில் விரய சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுக்காதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்றங்கள் உண்டாகும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று கூடுதலாகும்.அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்  12.01.2017 இரவு 07.50 மணி முதல் 14.01.2017 இரவு 10.57 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஆற்றலும், தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணமும் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் செவ்வாய், 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் தோன்றும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதுடன் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும்
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்  14.01.2017 இரவு 10.57 மணி முதல் 17.01.2017 அதிகாலை 05.35 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே முரட்டு சுபாவமும், மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 7ல் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எதையும் ஓரளவுக்கு சமாளித்து விடுவீர்கள். பொருளாதார  சுமாராகத்தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெற முடியும்உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகன் சற்ற தாமதப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  17.01.2017 அதிகாலை 05.35 மணி முதல் 19.01.2017 மதியம் 03.54 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காமல்  காரியங்களில் கண்ணாக செயல்படும் உங்களுக்கு, மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 6ல் ராகு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்  19.01.2017 மதியம் 03.54 மணி முதல் 22.01.2017 அதிகாலை 04.23 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

01.01.2017 மார்கழி 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியைதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.01.2017 மார்கழி 18ம் தேதி திங்கட்கிழமை சதுர்த்திதிதி அவிட்ட நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

05.01.2017 மார்கழி 21ம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

19.01.2017 தை 06ம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

23.01.2017 தை 10ம் தேதி திங்கட்கிழமை ஏகாதசிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை



No comments: