Wednesday, August 31, 2016

கோட்சாரத்தில் புதன்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.


புந்தி, அலி என அழைக்கப்படுகின்ற புதன் கல்விக்குரிய காரகனாகவும், தாய் வழி மாமனுக்குரிய காரகனாகவும் விளங்குகிறது. புதன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்கும். எப்போதும் சூரியனை ஒட்டியே காணப்படும். புதனுக்கு மிதுனம், கன்னி ஆகியவை ஆட்சி வீடாகும். கன்னியில் ஆட்சி, உச்சமும், மீனத்தில் நீசமும் அடையும். வடிவம் அறுகோணம். கழுத்து, நரம்புகளை ஆளமை செய்யும். புதன் வைசிய குலமும், பச்சை நிறமும், உலோகத்தில் பித்தளையையும், ரத்தினத்தில் மரகதப் பச்சையையும், திசையில் வடக்கையும் பெற்ற ஒரு அலி கிரகமாகும். நெடிய உருவம். சமித்து நாயுருவி. சீதோஷ்ணமாக புசிப்பவர். சுவை உவர்ப்பு. வாகனம் குதிரை. துவாரம் இடது காது, தூபம் கற்பூரம். வஸ்திரம் நல்ல பசுமை வண்ணம். அதி தேவதை விஷ்ணு. வாயு கிரகம். வாத நாடி. புஷ்பம் வெண் காந்த மலர்கள். நவதானியம் பச்சை பயிறு. வித்யா காரகன் புதன் பாவகிரக சேர்க்கையானால் பாவியாகவும், சுப கிரக சேர்க்கையானால் சுபராகவும் செயல்படும். தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்யும். சூரியனும், சுக்கிரனும் நட்பு கிரகமாகும். குரு செவ்வாய், சனி, ராகு, கேது சமம். சந்திரன் பகை. புதனின் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி. 
சூரியனுக்கு 12 டிகிரிக்குள் புதன் அமையப் பெற்றால் அஸ்தங்கம் அடையும். சூரியனை ஒட்டியே செல்வதால் பிரதான காலம் அஸ்தங்கமாகவே இருக்கும். புதன் சூரியனுக்கு மிக அருகில் சஞ்சரிக்கும் போது பிறந்தவர்களுக்கு கல்வியில் தடை, மாமனுக்கு தோஷம் போன்ற கெடுபலன் உண்டாகிறது. புதன் அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கணிதம், கம்ப்யூட்டர்களில் விருப்பம் இருக்காது. புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் நல்ல கல்வி, அறிவு கூர்மை உண்டாகும். நட்பு வீட்டில் இருந்தால் நகைச் சுவையுணர்வு இருக்கும். 3மாதங்களுக்கு ஒரு முறை 3 வாரம் வக்ரம் பெறும். புதனால் உண்டாகும் நோய்கள் மனநோய், சோகை, புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, தலைவலி, ஞாபக சக்தி குறையும் அமைப்பு, காக்காய் வலிப்பு, வாதநோய், வெண்குஷ்டம், ஆண்மை குறைவு, சீதள நோய்கள். புதன் 2,4,6,8,10,11 இந்த இடங்களில் வந்தால் மட்டுமே சுப பலனை உண்டாக்கும். மற்ற இடங்களில் சுமாரான பலன்களே உண்டாகும். 

கோட்சார ரீதியாக புதன் 12 ராசிகளில் சஞ்சரிக்கும் போது உண்டாகும் பலன்கள்
ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிக்கும் காலத்தில் பண விரயம், மதிப்பு குறையும் அமைப்பு, அதிகமான அலைச்சல், தலைவலி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் ஏற்படும்.
2ல் சஞ்சரிக்கும் போது தேவையற்ற பேச்சுக்களால் அவமானம், கோபமாக வார்த்தைகளை பேசும் சூழ்நிலை உண்டாகும்.
3ல் சஞ்சரிக்கும் போது உற்றார் உறவினர்களுடன் விரோதம், பகைவரால் தொல்லை ஏற்படும்.
4ல் சஞ்சரிக்கும் போது தாராள தன வரவுகள், திருமணம் நடைபெறும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, உயர்வு உறவினர்களால் அனுகூலம் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
5ல் சஞ்சரிக்கும் போது பயம், பயணங்களால் அலைச்சல், குழந்தைகளால் மனசஞ்சலம், விரோதம் உண்டாகும்.
6ல் சஞ்சரிக்கும் போது சிறப்பான தேக நிலை, எடுக்கும் காரியங்களில் வெற்றி, எதிலும் மேன்மையான நிலை ஏற்படும்.
7ல் சஞ்சரிக்கும் போது கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடு, குடும்பத்தில் பிரச்சனை, தேவையற்ற அவமானங்கள், பணகஷ்டம் உண்டாகும்.
8ல் சஞ்சரிக்கும் போது புத்திரர்களால் அனுகூலம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வித்தைகளில் தேர்ச்சி, நல்ல கல்வி முன்னேற்றம், புத்தியில் தெளிவு, மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற சிறப்பான நற்பலன்கள் ஏற்படும்.
  9ல் சஞ்சரிக்கும் போது தேவையற்ற வீண்பழிகளை சுமக்கும் நிலை, அலைச்சல், டென்ஷன், விரோதம், எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகள் உண்டாகும்.
      10ல் சஞ்சரிக்கும் காலம் செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம், உயர்வு, நல்ல தனவரவு, போட்டி பொறாமை எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், சிறப்பான ஆரோக்கியம் ஏற்படும்.
      11ல் புதன் சஞ்சரிக்கும் போது தனலாபம், எல்லோரும் பாராட்டும் படியாக நடக்கும் அமைப்பு, வண்டி வாகனம் மூலம் அனுகூலம் போன்ற சுபபலன்கள் நடைபெறும்.
      12ல் சஞ்சரிக்கும் காலத்தில் பகைவர்களால் தொல்லை, தூக்கம் சரியாக அமையாத நிலை, கண்களில் பாதிப்பு, வியாதி, அவமானம், மனக்கலக்கம், போன்ற அசுப பலன்கள் உண்டாகும்.
     
புதன் பகவான் கோட்சார ரீதியாக சுபகிரக சேர்க்கை பெற்றிருந்தால் கெடுபலன்கள் இருக்காது. பாவகிரக சேர்க்கை பெற்றிருந்தால் கெடுபலன்களையே ஏற்படுத்துவார். குரு சுக்கிரன் வளர்பிறைச் சந்திரனால் பார்க்கப்பட்டால் நன்மைகள் ஏற்படும்.
      புதனின் சஞ்சாரம் சாதகமற்று இருக்கும் காலத்தில் புதனின் அம்சமான விஷ்ணு பகவான் பூஜிப்பது, பச்சை பயிறு தானம், பச்சை பயிறு சுண்டலை புதன் பகவானுக்கு நைவேத்தியம் செய்து தானமாக வழங்குவதும்,பச்சை வஸ்திரம் சாற்றுவதும், விஷ்ணு சகஸ்ர நாமத்தை உச்சரிப்பதும் உங்களது கெடுபலன்களை குறைக்கும். வசதி படைத்தவர்கள் விட்டில் சுதர்சன ஹோமம் செய்யலாம். மதுரை மீனாட்சி ஆலயம் சென்று வணங்கி வரலாம். மரகத பச்சை இரத்தினத்தை அணியலாம்.
      

Saturday, August 27, 2016

மாத ராசிப்பலன் செப்டம்பர் 2016

மாத ராசிப்பலன் செப்டம்பர்   2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com






கேது                                  

09.09.2016  சிம்ம புதன்      
16.09.2016  கன்னி சூரியன்   
18.09.2016  தனுசு செவ்வாய்  
19.09.2016  துலாம்  சுக்கிரன்  
22.09.2016  புதன் () நிவர்த்தி



ராகு  சூரிய   

சனி  செவ்     

குரு புதன்                  சுக்கி()

                                                               

மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் கேது மாதபிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும்  8ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும் என்றாலும் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மேலேங்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்றே குறையும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 07.09.2016 மாலை 06.52 மணி முதல் 10.09.2016 காலை 06.51 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே தற்பெருமைக்கும், புகழ்ச்சிக்கும் ஆசைபடாத குணம் கொண்ட உங்களுக்கு ல் சூரியன் ராகு சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் என்றாலும் 5ல் குரு, சுக்கிரன் 11ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும்.

பரிகாரம். சிவ வழிபாடு மேற்கொள்வது ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.09.2016 காலை 06.51 மணி முதல் 12.09.2016 மாலை 04.06 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 3ல் சூரியன் ராகு 6ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உற2வினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செவுகள் ஏற்படாதுதொழில் வியாபாலம் சிறப்பாக நடை பெறும்.

பரிகாரம். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 12.09.2016 மாலை 04.06 மணி முதல் 14.09.2016 இரவு 09.42 மணி வரை.

கடகம்  ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத பிற்பாதியில் 3ல் சூரியன் சஞ்சரிப்பதும் 9ஆம் தேதி முதல் 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
பரிகாரம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி தட்சிணாமூர்த்£ரியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.09.2016 இரவு 09.42 மணி முதல் 16.09.2016 இரவு 12.10 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பதால்  குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தினை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.

கன்னிஉத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு 3ல் சனி 6ல் கேது சஞ்சரிப்பது ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும் 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே வெற்றிகளை பெற முடியும்கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதால் அனுகூலப்பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை பெற்றுவிட முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போதும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.
பரிகாரம். அம்மன் வழிபாடு மேற்கொள்வது தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 18.09.2016 இரவு 12.54 மணி முதல் 21.09.2016 அதிகாலை01.38மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ல் ராகு  மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் 9ம் தேதி முதல் 3ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் தொட்டது துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற்ற விட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

பரிகாரம். சனி பகவானை வழிபடுவது ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 21.09.2016 அதிகாலை01.38மணி முதல் 23.09.2016 அதிகாலை 03.53 மணி வரை.

விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே நியாய  அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 11ல் குரு சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சற்றே தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் என்றாலும் எதையும் எதிர் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெறுவதில் சில தடைகள் ஏற்பட்டாலும் சாதகப்பலனைப் பெற முடியும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.09.2016 அதிகாலை 03.53 மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், 12ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதமற்ற அமைப்பு என்றாலும், 9ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பதால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லுதுபுதிய ஒப்பந்தங்களில் கையெழத்திடும் போது கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 25.09.2016 காலை 08.36 மணி முதல் 27.09.2016 மாலை 16.00 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாத உங்களுக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9ல் குருவும், 11ல் சனியும் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
பரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது சிவ வழிபாடு மேற் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 27.09.2016 மாலை 16.00 மணி முதல் 30.09.2016 அதிகாலை 01.46 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்ட உங்களுக்கு 8ல் குரு 10ல் சனி சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. 9ம் தேதி முதல் செவ்வாய் 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.

பரிகாரம். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.09.2016 மாலை 06.53  மணி முதல் 05.09.2016 காலை 06.14 மணி வரை மற்றும் 30.09.2016 அதிகாலை 01.46 மணி முதல் 02.10.2016 மதியம் 01.19 மணி வரை

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 6ல் சூரியன் ராகு சஞ்சரிப்பதும் 7ல் குரு சஞ்சாரம் செய்தும் அற்புதமான அமைப்பு என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். திருமண சுப காரியங்கள் கைகூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கடன்கள் யாவும் குறையும்.
பரிகாரம். விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 05.09.2016 காலை 06.14 மணி முதல் 07.09.2016 மாலை 06.52 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.09.2016 ஆவணி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியைதிதி அஸ்த நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

08.09.2016 ஆவணி 23 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

14.09.2016 ஆவணி 29 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை

15.09.2016 ஆவணி 30 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தசிதிதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். வளர்பிறை

18.09.2016 புரட்டாசி 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

19.09.2016 புரட்டாசி 03 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

28.09.2016 புரட்டாசி 12 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசிதிதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். தேய்பிறை