Sunday, May 5, 2019

Today rasi palan - 06.05.2019


Today rasi palan - 06.05.2019
இன்றைய ராசிப்பலன் -  06.05.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
06-05-2019, சித்திரை 23, திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 03.18 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.36 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் மாலை 04.36 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கிருத்திகை. சந்திர தரிசனம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சுக்கி
சூரிய புதன்
செவ் சந்தி
ராகு

திருக்கணித கிரக நிலை
06.05.2019



கேது சனி (வ)
குரு (வ)
 


இன்றைய ராசிப்பலன் -  06.05.2019
மேஷம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
கடகம்
இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். சுப முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
துலாம்
இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க அனுகூலமான நாளாகும். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். சிறப்பான வருமானத்தால் மகிழ்ச்சி ஏற்படும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண சிக்கலை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும், கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

No comments: