Sunday, May 8, 2016

அக்ஷய திருதியை

அக்ஷய திருதியை
          அக்ஷய திருதியை திதியில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

இந்த ஆண்டு துர்முகி வருடம் சித்திரை மாதம் 25ம் நாள் 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 05.51 மணி முதல் சித்திரை மாதம் 26ம் 09.05.2016 மதியம் 02.52 மணி முடிய அக்ஷய திருதியை திதி உள்ளது. 
இந்த திருதியை திதி நன்னாளில் தங்கம் வாங்கினால் அது மேலும் மேலும் பெருகும் என்பது மரபு. நம்மால் முடிந்த அளவு ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கி பூஜையறையில் வைத்து இறைவனை வழிபட்டால் தங்கத்தை மேலும் மேலும் வாங்கக் கூடிய யோகத்தை உண்டாக்குகிறது அட்சயம் என்றாலே அள்ள அள்ள குறையாதது என்பது பொருள்.
    இந்த அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி எந்தவொரு புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும் அதன் முலம் லாபம் பெருகும். கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது, நம்முடைய மூதாதையர்களை வழிபாடு செய்வது போன்றவையும் நற்பலனை தரும். குடிநீர், பானகம், மோர், உணவு போன்றவற்றை தானம் செய்வது ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது மிகவும் உத்தமம். தாம்பூலம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், போன்றவற்றையும் சுமங்கலிகளுக்கு தானமாக தரலாம். அட்சய திருதியை அன்று தேவியை வழிபட்டு ஸ்தோத்திரங்கள் கூறி வருவதன் மூலம் வாழ்வில் அதிர்ஷடங்கள் அனைத்தும் தேடி வரும்.
     வறுமையில் வாடிய குசேலனிடம் ஒரு பிடி அவலைப் பெற்றுக் கொண்ட கண்ணன் அவனை குபேரனாக்கியதும் அக்ஷய திருதியை நன்னாளில் தான். இறைவனை மனதாரவழிபட்டு வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வோமாக!
     அக்ஷய திருதியை நன்னாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது என்று பார்க்கின்ற போது 08.5.2016 ஞாயிறு மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை, திங்கள் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை, பகல் 12.00 மணி முதல் 02.00 மணி வரை, பொன் பொருள் வாங்க உகந்த நேரமாகும்.


No comments: