Friday, May 20, 2016

வார ராசிப்பலன் மே 22 முதல் 28 வரை 2016

நேர மாறுதல்

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
நாளை 23.5.2016 முதல் 
விஜய் டிவியில் காலை 6.20 மணி முதல் 6.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


வார ராசிப்பலன்
மே   22 முதல்  28   வரை   2016     வைகாசி   9 முதல்  15   வரை  

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


               

புதன்
சூரிய சுக்கி

கேது 




ராகு குரு

சனி () செவ்()


                               

கிரக   மாற்றம்
22.05.2016   புதன் வக்ர முடிவு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம் 21.05.2016 மதியம் 12.30  மணி முதல் 23.05.2016 இரவு 11.36 மணி வரை.
தனுசு                23.05.2016 இரவு 11.36 மணி முதல் 26.05.2016 காலை 08.52 மணி வரை.
மகரம்               26.05.2016 காலை 08.52 மணி முதல் 28.05.2016 மாலை 04.00 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
26.05.2016 வைகாசி 13 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.



மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன் 5ல் குரு, 11ல்  கேது சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகி பொருளாதாரம் மேம்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முன் கோபத்தைக் குறைத்துக் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உளவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலிருந்த பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். பயணங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நற்பலனைத் தரும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் 26,27,28.
சந்திராஷ்டமம்                        21.05.2016 மதியம் 12.30  மணி முதல் 23.05.2016 இரவு 11.36 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், 7ல் சனி செவ்வாய், சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள் 22,23,28.
சந்திராஷ்டமம்                        23.05.2016 இரவு 11.36 மணி முதல் 26.05.2016 காலை 08.52 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். பணவரவுகளில் சிறப்பாக இருக்கும் என்பதால் சேமிப்புகள் பெருகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலை தேடுபபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 22,23,24,25.
சந்திராஷ்டமம்                        26.05.2016 காலை 08.52 மணி முதல் 28.05.2016 மாலை 04.00 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிறந்த கற்பனை திறனும், நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 11 சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பேச்சில் சற்று நிதானமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகத்தில் சற்று வேலைப் பளு குறைவாகவே இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க பெறும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது,

வெற்றிதரும் நாட்கள் 24,25,26,27.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் புதன், 10ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த பிரச்சினைகள் விலகி ஒரளவுக்கு நற்பலன்கள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது மூலம் வீண் விரயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். முன் கோபத்தை குறைப்பது உத்தமம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 26,27,28.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் 9ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களையேப் பெற முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் உத்தியோக உயர்வுகளை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 22,23.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சனி, செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 11ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாதுதிருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் முருகப் பெருமானை வழபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்திய சாலியாக வாழும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சனி செவ்வாய் 7ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் ஒரளவுக்கு கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுப்பது நடப்பது, முன் கோபத்தைக் குறைப்பது, முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காக சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். வெளியூர், வெளி நாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளும் ஓரளவுக்கு அனுசரணையாக இருப்பார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 22,23,26,27,28.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜென்ம ராசிக்கு 5 புதன் 6ல்  சூரியன் 9ல் குரு ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் செற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப்பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 24,25,26.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் சுக்கிரன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம்  செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும்கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் 22,23,26,27,28.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே ஜென்மராசிக்கு 4ல் சுக்கிரன் 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அசையா சொத்துகளால் அனுகூலப்பலன்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருப்பதால் கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 22,23,24,25,26.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன  ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 6ல் ராகு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலி ல்கவனம் தேவை. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானித்துச் செயல்படவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வு தடைகளுக்குப்பின் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். விநாயகரை வழிபடவும்.


வெற்றிதரும் நாட்கள் 24,25,26,27,28.

No comments: