இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
2014 2016 - விருச்சிகம் ;
விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 11இல் ராகுவும் 5இல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். 05.07.2015 வரை குரு பகவானும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் யாவும் தடையின்றி கை கூடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும் என்றாலும் பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் பெரிய தொகைகளை பயன்படுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறு சிறு மறைமுக எதிர்ப்புகள் போட்டிகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து வெற்றியினை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும்.
உடல் நிலை
உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் பலமும் வலிமையும் கூடுவதால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.
குடும்பம் குழந்தை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். சில உதவிகளும் கிடைக்கப் பெறும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சாதகப் பலனை தரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளும் உண்டாகும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர் பார்த்து காத்திருக்கும் பதவி மற்றும், ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். இது வரை நிலுவையிலிருந்த பணத் தொகைகளும் கைக்கு வந்து சேரும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றமும் உண்டாகும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும்.
அரசியல்வாதிகளுக்கு
மேடை பேச்சுக்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களிடையே உங்கள் மதிப்புயும் மரியாதையையும் காப்பாற்றி கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மேம்படும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய புதிய யுக்திகளை கையாளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். விளைச்சலும் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கால் நடைகளால் லாபம் கிட்டும். அரசு வழியிலும் மானிய உதவிகள் தேடி வரும்.
கலைஞர்களுக்கு
எதிர் பார்த்து காத்திருந்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நல்ல பெயரும் புகழும் கிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலையில் சோர்வு உண்டாகும். உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானமுடன் பேசுவது நல்லது.
மாணவ மாணவியர்களுக்கு
மாணவ மாணவியருக்கு கல்வியில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் தாண்டி நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் கவனம் தேவை. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும்.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஏற்றமானப் பலன்களைப் பெற முடியும். ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும் என்றாலும் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாகவே இருக்கும். ராகுவும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் சிறு சிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நற்பலன்களையே பெற முடியும். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வரும் 16.12.2014 முதல் சனி ஜென்ம ராசியில் சஞ்சரிக்க விருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்தும் கொண்டால் ஒற்றுமையுடன் வாழ முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும், கேது பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நற்பலன்களையே உண்டாக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கை கூடும். கடன்கள் சற்று குறையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு நன்மை தீமை கலந்தப்பலன்களைப் பெற முடியும். 05.07.2015 முதல் குரு பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் சிறப்பாக அமையும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைகளுக்குப் பின் உயர்வுகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்
அனைவரிடமும் அன்பாகவும், அடக்கமாகவும் பேசக் கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். பொன் பொருள் சேரும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபங்கள் கிடைக்கும்.
அனுஷம்
யாருக்கும் தீமை நினைக்காத சிறந்த மனப்பான்மையை கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை தேவைகேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டினைப் பெறுவீர்கள். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
கேட்டை
தான தர்மங்களை நிறைய செய்யும் குணம் கொண்ட உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். எந்த புதிய முயற்சிகளிலும் திறம்பட செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் 1,2,3,9,10,11
நிறம் ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை செவ்வாய், வியாழன்
திசை தெற்கு
கல் பவளம்
தெய்வம் முருகன்
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது. ஏழரை சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு தொடர்ந்து பரிகாரங்கள் செய்யவும். 05.07.2015 முதல் குரு பகவான் 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment