Monday, June 30, 2014

தலைவலி நரம்பு கோளாறு

தலைவலி நரம்பு கோளாறு

தலை உடலின் முதல் உறுப்பாகும்,முக்கியமான காரியங்களை தலையாய கடமை என்கிறோம்,எதாவது அவசர வேலை இருந்தால் தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்கிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து தலை வணங்கி நடப்பது அவசியம் யாருக்கும் அடிப்பணியாதவனை தலைகனம்பிடித்தவன் என்கிறோம்.தலை என்று ஒன்று இருக்கும் வரை தலைவலி என்ற ஒன்றும் இருக்கும்,அதிக பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கும் தேவையற்ற சிந்தனைகளை மனத்தில் பூட்டி வைத்திருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி உண்டாகும். சிலருக்கு நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகளாலும் தலைவலி ஏற்படும்

நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் & சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். இச்சேர்க்கை 6,8,12 & இல் பாவிகளுடன் அமையப் பெற்றால், தலை வலி, தலையில்  நீர்சேர்தல், மூக்கில் நீர் ஒழுகும் நிலை, தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும். 

புதன் செவ்வாய் 6,8,12ல் இணைந்திருந்தால் ஒய்வில்லாத நிலையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும்.

லக்னாதிபதியும் சனியும் சேர்ந்து 6,8,12 களில் ஒன்றில் இருந்தால் தலையில் ஏதேனும் பாதிப்பு உண்டாகும்.

புதன் வலுவிழந்து, செவ்வாய் பகவான் ரத்தக் காரகன் என்பதால் இவரும் நீசம் அல்லது பகையாகி பலமிழந்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஒட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, மயக்கம் வலிப்பு நோய்கள் உண்டாகும்.
புதனுக்கு பரிகாரம் செய்தால் தலை சம்மந்த பட்ட நோய்கள் விடுதலையாகும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078

Sunday, June 29, 2014

சனி -கோச்சாரம் முருகுபாலமுருகன்

சனி - முருகுபாலமுருகன்

சுக்கிரன் பாிகாரம் - முருகுபாலமுருகன்

சுக்கிரன் -- முருகுபாலமுருகன்

குரு பாிகாரம் -முருகுபாலமுருகன்

குரு 2 - முருகுபாலமுருகன்

குரு - முருகுபாலமுருகன்

புதன் 2 --- முருகுபாலமுருகன்

புதன் -- முருகுபாலமுருகன்

செவ்வாயும் பாிகாரமும் -- முருகுபாலமுருகன்

செவ்வாய் முருகுபாலமுருகன்

சந்திரன் 3 முருகுபாலமுருகன்

சந்திரன் - முருகுபாலமுருகன்

சந்திரன்

சந்திரன்

சூாியன் 2 முருகு பாலமுருகன்

சூாியன் - முருகுபாலமுருகன்

பாதகாதிபதி என்றால் என்ன -- முருகுபாலமுருகன்

கண்டத்தை ஏற்படுத்து காலம் -- முருகு பாலமுருகன்

ஒரை என்றால் என்ன - முருகு பாலமுருகன்

சனி பாா்வை என்ன செய்யும் -- முருகுபாலமுருகன்

குரு பாா்வை என்ன செய்யும் - முருகுபாலமுருகன்

கிரக பாா்வை - முருகுபாலமுருகன்

அஸ்தங்கம் 2 முருகுபாலமுருகன்

அஸ்தங்கம் - முருகுபாலமுருகன்

Planet retrograde By Murugubalamurugan

Planet retrograde By Murugubalamurugan

Speech about 12 bhava By Murugubalamurugan

Financial gain By Murugubalamurugan

உடன் பிறப்பு

Job an astrological view By Murugubalamurugan

Investment in Share yoga By MuruguBalamurugan

Investment in Share yoga By MuruguBalamurugan

Own Business yoga By MuruguBalmurugan

10 Th Bhava By Murugubalamurugan

Speech on 9 th Bhava By Murugubalamurugan

Accident an Astrological view By Murugubalamurugan

Thirumana purutham By Murugubalamurugan 2

Thirumana purutham By Murugubalamurugan

Thirumana Yogam By MuruguBalamurugan

Period for marriage By Murugubalamurugan

Thirumana Dosa By Murugubalamurugan

THirumanam 7 By Murugubalamurugan

உறவில் திருமணம்

Reason for delay marriage By Murugubalamurugan

Thirumanam 6 By Murugubalamurugan

Thirumanam 5 MuruguBalamurugan

Thirumanan 4 By murugubalamurugan

Thirumanam 3 By murugubalamurugan

திருமணம்

Thursday, June 26, 2014

உடலின் வாசல்கள்


ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களின் ஜெனன கால ஜாதக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களின் பரிபூரண அருள் கிடைத்தால் மட்டுமே ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சரி வர இயங்கினால் மட்டுமே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள துவாரங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் சரி வர ஜீரணித்து சிறு நீர் மலமாக சென்றால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அது போல சுவாசிக்கும் காற்றும் சரி வர இயங்கினால் தான் நல்லது. நமது உடலில் ஒன்பது வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலையும் நவக்கிரங்கள் ஆட்சி செய்கின்றன. குறிப்பாக சூரியன்  இடது கண் (வாசல்) சந்திரன் & வாய், குரு & வலது காது, ராகு & மலம், புதன்  இடதுநாசி துவாரம், சுக்கிரன் & வலது கண், கேது & சிறுநீர், சனி & இடது காது, செவ்வாய் & வலது நாசி துவாரம்,நமது தொப்பிளை மாந்தி அல்லது குளிகன் ஆளுகிறார். ஜெனன காலத்தில் எந்த கிரகம் வலு இழந்து இருக்கிறதோ அக்கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வாசல் சற்று பாதிக்கப்படுகிறது. ஜெனன கால கிரக அமைப்பில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்வது மூலம் ஏற்படக் கூடிய சோதனைகள் குறையும்.

Contact

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


Friday, June 6, 2014

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மகரம்

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016  மகரம் 
 உத்திராடம் 2,3,4 ,திருவோணம், 
அவிட்டம் 1,2ம் பாதங்கள்

பதிவு-502

அன்பார்ந்த வாசக நேயர்களே

சோதிட சம்மந்தமான 500 பதிவுகளை  இது வரை எனது  வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ),தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். 


காணத்தவறாதீர்

விஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்


13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று 

விஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை 
12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்
இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்


முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091 - 7200163001.9383763001,9841771188

அதிகமான தன்னம்பிக்கையும் எதிலும் போராடி வெற்றி பெறக் கூடிய ஆற்றலும் கொண்ட மகர ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 9லும், கேது பகவான் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். 05.07.2015 வரை குரு பகவான் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டிலும் 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்க விருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால்  குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். பெரிய மனிதர்களின் நட்புகளால் பல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பதவி உயர்வுகளையும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

உடல் நிலை
உடல் நிலை மிக சிறப்பாக அமையும். இது வரை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் நீண்ட கால நோய்களுக்கான சிகிச்சைகளும், அதனால் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்திலுள்ள மனைவி,பிள்ளைகள் மற்றும் பெரியவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம் குழந்தை
குடும்பத்தில் எடுத்து திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு நினைத்தவரையே கை பிடிக்க கூடிய யோகமும் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். இதுவரை பகைமை பாராட்டியவர்களும் ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். சேமிப்பும் பெருகும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உங்களுக்கு இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், நெருக்கடிகள் யாவும் குறைந்து எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களையும். கூட்டாளிகளையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
இது வரை எதிர்பார்த்து காத்திருந்த நல்ல பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உங்கள் பணியில் மற்றவரின் தலையீடு இருக்காது. புதிய வேலை தேடுபவர்களுக்கும், வெளியிடங்களில் சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள், பணி நிரந்தரம் கிடைக்கும்.

பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன்னும், பொருளும் சேரும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும், சொந்த வீடு மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு
மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயரும். மாண்புமிகு உயர் பதவிகள் தேடி வரும். பொருளாதார நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

விவசாயிகளுக்கு
விளைச்சல் சிறப்பாக அமைந்து விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைக்கும். லாபம் பெருகும் பட்ட பாட்டிற்கானப் பலனை தடையின்றிப் பெற முடியும். கால் நடைகளாலும் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும்.

கலைஞர்களுக்கு
எதிர்பார்த்து காத்திருக்கும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். படபிடிப்பிற்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. அசையும் அசையா சொத்துக்கள் சேரும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நினைக்கும் காரியங்களை நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற நட்புகள் விலகி நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் உதவிகள் தேடி வரும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் பாராட்டும் மன நிம்மதியை கொடுக்கும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவானும் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்த பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செய்யும் தொழில் வியபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நன்மையானப் பலன்களையே பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 16.12.2014 முதல் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் உண்டாகும். பண வரவுகள் திருப்தி கரமாக இருக்கும். புதிய நவீன கருவிகளை வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். போட்டி பொறாமைகள் விலகி நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் பதவி உயர்வுகள் யாவும் கிட்டும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களும் திறமையுடன் செயல்பட்டு திறமைக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும்.  கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மையானப் பலன்களைப் பெற முடியும் என்றாலும் 05.07.2015 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் பண விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் சேமிப்பு குறையாமலிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருந்தாலும் உடன் பணி புரிபவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும்.

குரு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் என்றாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. சில நேரங்களில் முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் சிக்கலில் சிக்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் லாபங்களும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல் பட்டால் நற்பலனை அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

உத்திராடம் 2,3,4ம் பாதங்கள்
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்க முனைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமானப் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிட்டும்.

திருவோணம்
தனக்கென தனிக்கொள்கையும் கட்டுப்பாடும் கொண்ட உங்களுக்கு பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல்  சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மணமாகாதவர்களுக்கு மணமாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.

அவிட்டம் 1.2ம் பாதங்கள்
தன் பேச்சாற்றலால் எதிரிகளை ஒட ஒட விரட்டும் குணம் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபார ரீதியாக அனுகூலமான பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். ஆடம்பர செலவுகளை சற்று குறைக்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  8,5,6,17,14,15
கிழமை  சனி, புதன்
திசை மேற்கு
நிறம்  நீலம், பச்சை
கல் நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு 16.12.2014 வரை சனி பகவான் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்லது. 5.7.2015 முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க விருப்பதால் வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு நெய்தீப மேற்றி வழிபடவும்.

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078

Thursday, June 5, 2014

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மீனம்


இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மீனம் 
 பூரட்டாதி &ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

பதிவு-501

அன்பார்ந்த வாசக நேயர்களே

சோதிட சம்மந்தமான 500 பதிவுகளை  இது வரை எனது  வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ),தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். 


காணத்தவறாதீர்

விஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்


13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று 

விஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை 
12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்
இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்


முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091 - 7200163001.9383763001,9841771188

எல்லோருக்கும் எல்லா வகையிலும் நன்மை செய்ய நினைக்கும் நற்குணம் கொண்ட மீனராசி அன்பர்களே! சர்ப கிரங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. குரு பகவான் 05.07.2015 வரை பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் திருமணம் போன்ற மங்கள கரமான சுப காரியங்களும் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அஷ்டம சனி நடைபெறுவதால் வீண் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கும் உங்களுக்கு 16.12.2014இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் அஷ்டம சனி முடிவடைகிறது. இதனால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு விடுதலைப் பெற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். 05.07.2015 முதல் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவுள்ளதால் வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.

உடல் நிலை

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தி கொண்டேயிருக்கும். சோம்பல் தனம், மந்த நிலை கைகால்களில் அசதி உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகவே செயல்படுவீர்கள். வீண் மனக்குழப்பங்களும் ஏற்படும்.

குடும்பம் குழந்தை

கணவன் மனைவியிடையே உண்டாக கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் அமைதி குறையும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வசதி வாய்ப்புகளுடன் தேடி வரும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பும், பூர்வீக சொத்துக்களால் லாபமும் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். பல பொது நல காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். வீண் வம்பு வழக்குகளை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகாது.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும் என்றாலும் கூட்டாளிகளால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். தொழிலாளர்களின் பிரச்சனையும் வலுக்கும். முடிந்த வரை அனைவரையும் தட்டி கொடுத்து வேலை வாங்குவது விட்டு கொடுத்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பணியில் உயரதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிட்டாலும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளையும் இடமாற்றங்களையும் தடையின்றி பெற முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க நேரிட்டாலும் எதையும் திறம் பட சமாளிக்க முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லது.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் திறம்படசெயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாகும். அழகிய புத்திர பாக்கியமும் கிடைக்கும். ஆடை அணிகலன்கள் சேரும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் மனசஞ்சலங்கள் ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும்.

அரசியல்வாதிகளுக்கு

நல்ல பதவிகளும் பெயர் புகழும் தேடி வந்தாலும் மக்களின் அவ நம்பிக்கைக்கு ஆளாக நேரிடும். முடிந்த வரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது, பத்திரிகை நண்பர்களை பகைத்து கொள்ளாதிருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு

விளைச்சல் சிறப்பாக அமைய இரு மடங்கு உழைக்க நேரிடும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமல் தாங்களே முன் நின்று எல்லா பணிகளையும் செய்ய நேரிடும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அரசு வழியில் உதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு

நல்ல வாய்ப்புகள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிபடுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கட்சி பணிகளுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.

மாணவ மாணவியர்களுக்கு

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்றாலும் முழு முயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற நட்புகள் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானம் தேவை. உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். ஆசிரியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை

ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அவ்வளவாக நற்பலன்களை எதிர் பார்க்க முடியாது. உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் சற்று மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் யாவும் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்திலும் 7,1 இல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மணவயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் ஏற்படும்.  அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. 16.12.2014 முதல் சனி பகவான் 9&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முழுவதும் முடிவடைகிறது. இதனால் கடந்த காலங்களிலிருந்த பிரச்சனைகள் சற்றே குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு சுமாரான நற்பலன்களை பெறுவீர்கள். குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்-றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான  நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களைப் பெற முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும்.  05.07.2015 முதல் குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் வீண் பிரச்சனைகள் குறையும்.

ராகு பகவான்  உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 7ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெறுவீர்கள். குரு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். சில நேரங்களில் நண்பர்களே எதிரிகளாக மாறுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கான ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பூர்வீக சொத்து விஷயங்களில் உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வர காலதாமதமாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளைப் பெற முடியாமல் போகும்.

பூரட்டாதி 4ம் பாதம்
முன் கோபியாக இருந்தாலும், சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

உத்திரட்டாதி
சாதுவான குணமும், மிகுந்த திறமைசாலியான ஆற்றலும்  கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாக கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

ரேவதி
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தேவையற்ற பயணங்களும் அதனால் அலைச்சல்களும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  1,2,3,9,10, 11,12
கிழமை  வியாழன், ஞாயிறு
திசை  வடகிழக்கு
நிறம்  மஞ்சள், சிவப்பு
கல்  புஷ்ப ராகம்
தெய்வம்  தட்சிணாமூர்த்தி


பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம  ராசியில் கேது 7&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 16.12.2014  வரை அஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது. 05.07.2015 முதல் குரு பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு செய்வது நல்லது.

For your consultation

Please sent  Rs 500 ,(  20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer )  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) &  5 questions  to ( e-mail ) me for  horoscope reading

please contact my postal adress  

Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.

Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ;

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கும்பம் ; 
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

அன்பார்ந்த வாசக நேயர்களே

சோதிட சம்மந்தமான 500 பதிவுகளை  இது வரை எனது  வலை தளம் மூலம் வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2.5 வருடத்தில் தினமும் சராசரியாக 1500 வாசகர்கள் எனது வலை தளத்தை பார்வை செய்வது எனக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. (மொத்ததில் 7.30 லட்சத்திற்கு அதிகமான வாசகர்கள் ), தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். 


காணத்தவறாதீர்

விஜய் டிவியில் குரு பெயர்ச்சி பலன்கள்


13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று 

விஜய் டிவியில் காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை 
12 இராசிகளுக்கு குரு பெயர்ச்சி பலன்கள் 
பற்றிய எனது சிறப்பு நிகழ்ச்சியை காணத்தவறாதீர்
இப்படிக்கு


ஜோதிட மாமணி,முருகுபாலமுருகன்


முனைவர் பட்ட ஆய்வாளர்
எண் 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, 
வடபழனி, சென்னை - 600 026
செல் 0091 - 7200163001.9383763001,9841771188


எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்த்து வைக்க கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! சர்ப கிரகங்களான ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். குரு பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சனி பகவான் 16.12.2014 முதல் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. 05.07.2015 முதல் குரு பகவான் 7&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவரவுகள் அதன் பின்னர் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தொழில் வியாபார உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும்.

உடல் நிலை
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். சோர்வு அசதி, மந்த நிலை யாவும் கொடுக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாதபடி சுனக்கம் உண்டாகும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெரியவர்களால் ஏற்படக் கூடிய மருத்துவ செலவுகளால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் முன் கேபாத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உங்களுக்கே மனசஞ்சலங்களை ஏற்படுத்தும். திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்க கூடிய காலம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் யாவும் வந்து சேரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
பணி புரியும் இடத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் உழைப்பிற்கான பலனை பிறர் பெறுவார்கள். இதனால் மனநிம்மதி குறையும். வரவேண்டிய உயர்வுகளும் சற்று தாமதமடையும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும்.

பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைய சற்று தாமத நிலை உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்.

அரசியல்வாதிகளுக்கு
மக்களிடையே உங்களின் செல்வாக்கு குறைய கூடிய காலம் என்பதால் அவர்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பட்ட பாட்டிற்கான பலனை பெறுவதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். புதிய யுக்திகளை கையாள்வதால் ஒரளவுக்கு அனுகூலத்தை அடையலாம். புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிர் விளைச்சல் பாதிக்கும்.

கலைஞர்களுக்கு
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. நிறைய போட்டிகள் உண்டாவதால் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும். வர வேண்டிய பணத் தொகைகளிலும் இழு பறி நிலை நீடிக்கும். படபிடிப்பிற்காக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சேர்க்கைகளையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும்.

ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை

ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது புதனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்கள் சாதகமானது எனக்கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் நெருக்கடிகள் உண்டாகும். குரு பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமராகத் தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சம்பவகங்கள் நடைபெறும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். புத்திர வழியில் சிறு சிறு நிம்மதி குறைவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும்.

ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை

ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும் குடும்பத்திலுள்ள்வர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு-கள் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படுவதால் சுகவாழ்வு பாதிப்படையும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். 16.12.2014 முதல் சனிபகவான் 10&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்ற அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உயர்வுகளை பிறர்தட்டி செல்வார்கள்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இக்காலங்களிலும் சுமாரான அனுகூலங்களையேப் பெற முடியும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்குப் பெற்றாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை

ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 8&ஆம் வீட்டிலும்,கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 2ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குரு பகவான் சம சப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி கை கூடும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்க முடியும் என்றாலும் நிறைய போட்டிகளையும் சமாளிக்க வேண்டி வரும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும்.

அவிட்டம் 3,4ம் பாதங்கள்

எதற்கும் அஞ்சாத நெஞ்சமும், மன வலிமையும் கொண்ட உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.  பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும்.

சதயம்

உழைத்து வாழ்க்கையில் உயர்வு பெற விரும்பும் உங்களுக்கு குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் பிரச்சனைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

முன் கோபியாக இருந்தாலும் பரந்த மனப்பான்மை கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மன நிம்மதி குறைவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற முடியும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகை வீண் பிரச்சனைகளை உண்டாக்கும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  5,6,8,14,15,17
கிழமை  வெள்ளி, சனி
திசை  மேற்கு
நிறம்  வெள்ளை, நீலம்
கல் நீலக்கல்
தெய்வம்  ஐயப்பன்

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2இல் கேதுவும் 8இல் ராகுவும் சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. 16.12.2014 முதல் சனி 10இல் சஞ்சரிக்க விருப்பதால் சனிக்கு பரிகாரம் செய்யவும். 05.07.2015 வரை குரு 6இல் சஞ்சரிப்பதால் தட்சிணா மூர்த்தியை வழிபடுடவும்.