Saturday, September 1, 2012

மாதவிடாய் கோளாறுகள்



மாதவிடாய் கோளாறுகள்

பெண்களுக்கே உரிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் பருவமடைவது, தாய்மையடைவது. ஒரு பெண் பூப்பெய்வதை தான் அவள் பருவமடைந்து விட்டதாக கருதுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடையும் பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் இரத்த போக்கு இருக்கும். அந்த பெண்ணின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்மை அடையும் போது  எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது. பூப்பெய்வதன் மூலம்தான் அவள் திருமண வாழ்க்கைக்கே தயராகிறாள். அவளின் உடல் நிலையிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மாதவிடாய் ஒழுங்காக வரும் பெண்களுக்கு கர்ப்பப்பையும் பலமாக இருக்கும். ஜோதிட ரீதியாக மாதவிடாய் ஒழுங்காக அமைவதற்கு பெண்கள் மிக முக்கிய கிரகமான செவ்வாய் காரகனாகிறார். செவ்வாய் ரத்த காரகன் என்பதால் ரத்த ஓட்டத்திற்கு செவ்வாய் காரகத்துவம் வகிக்கிறார்.






ஒரு பெண்ணின் கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பகுதிகளுக்கு நவகிரகங்களில்  சந்திரன் காரகனாகிறார். அதுமட்டுமின்றி பெண்ணின் உணர்ச்சிகளுக்கும், மனநிலைக்கும் சந்திரன் காரகனாகிறார். அதனால் செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்கள் பலமாக இருந்தால் மாதா மாதம் ஏற்படக்கூடிய மாதவிடாயானது ஒழுங்காக உண்டாகி ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் கோட்சார ரீதியாக ஜனன கால லக்னத்தையோ, சந்திரனையோ பலமாக பார்வை செய்கின்றபோது பூப்படைவது நிகழ்கிறது. அது போல ஜென்ம லக்னத்திற்கு கோட்சார ரீதியாக சந்திரன் 1,2,4,5,7,8,9,12 ஆகிய பாவங்களில் அமைந்து அதனை செவ்வாய் பார்வை செய்யும் போது பூப்படைவது நிகழ்கிறது.

சந்திரன் சரியாக ஒரு ராசி மண்டலத்தை சுற்றிவர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அது போலத்தான் நல்ல ஆரோக்கியம் கொண்ட பெண்களுக்கு 27 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு உண்டாகும். அது போல சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். எனவே பெண்ணின் மாதவிலக்கும் இரண்டே கால் நாட்கள் உண்டாகும். சிலருக்கு 3,4, நாட்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதற்கு செவ்வாயின் நிலை காரணமாகிறது.

அதுவே சந்திரன், செவ்வாய் நீசம் பெற்றாலும் சனி, ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றாலும் சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட்டு உடல் எடை கூடவோ, குறையவோ செய்யும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு கூட தடைகள் ஏற்படும்.

சந்திரன், செவ்வாய் பலவீனமாக அமையப் பெற்று அதன் தசாபுக்தி நடைபெற்றால்  மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.  சந்திரன் மனோகாரகன் என்பதால் பெண்களுக்கு இக்காலங்களில் மனக்குழப்பங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கும் மாத விடாய் கோளாறுகள் உள் பெண்களுக்கும் அமாவசை, பௌர்ணமி காலங்களில் தேவையற்ற மனக்குழப்பங்களும், அதிகப்படியான உடல்நிலை பாதிப்பும் உண்டாகும்.


ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

1 comment:

Anonymous said...

idharku enna parigaram iruku