Monday, September 3, 2012

உடல் ஊனம்




உடல் ஊனம்

ஒரு பெண் எவ்வளவு அழகானவளாக இருந்தாலும் உடலில் ஒரு குறைபாடு இருந்துவிட்டால் அவளை ஊனமுற்றவளாக கருதுகிறோம். சிறிய ஊனங்களாக இருந்து விட்டால் அந்தப் பெண்ணிற்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. அதுவே கை, கால்களில் பாதிப்போ, முக லட்சண குறைவாகவோ பிறந்து விட்டால் அவளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. சிறு வயதில் வளர்ப்பதில் இருந்து அவளை பெரியவளாக்கும் வரை பெற்றோரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம்  ஆயிரத்தில் ஒரு ஆணுக்குத்தான் இருக்கும். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் தன்னால் தான் அவளுக்கு மறுவாழ்வு கிடைத்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். கண்ணுக்குத் தெரியும் ஊனம் ஒருவகை என்றால், பார்க்க அழகாக தெரியும் பெண் வாய்பேச முடியாதவளாக, காது கேளாதவளாக இருப்பது இன்னும் கொடுமை. இதற்கு காரணம் தான் என்ன? தாய் தந்தையர் செய்த பாவமா? முன்வினை பயனா? என பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கிறது. ஐயோ நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏனிந்த நிலை என மனம் புலம்புகிறது. இந்த பெண்ணிற்கு வரும் வாழ்க்கைத் துணையையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி நீசம் பெற்றோ அஸ்தங்கம் பெற்றோ பலஹீனமாக இருந்து, ஜென்ம லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ சுப பார்வை இல்லாமல் சனியின் பார்வை இருந்தால், உடல்நிலையில் அங்கஹீனம், தோற்றத்தில் ஒரு குறைபாடு உண்டாகும். நவகிரகங்களில் ரத்த காரகன் செல்வாயாவார். செவ்வாய் பலஹீனமாக  இருந்து சனி, ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு உடல் நலிவடையும். 

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வாக்கு ஸ்தானம் ஆகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதி பலமிழந்து சனி ராகு போன்ற பாவிகள் 2ல் பகை பெற்று அமையப் பெற்றால்  பேச்சில் கோளாறு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 3,11 ம் பாவமானது காதுகளைப் பற்றி குறிப்பிடக்கூடியதாகும். நவகிரகங்களில் புதன் பகவான் காதுகளுக்கு காரகனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 3,11 க்கு அதிபதிகள் புதன் வலுவிழந்து சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்று சுப பார்வையின்றி இருந்தாலும் 3,11ல் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் இருந்தாலும் காதுகளில் பாதிப்பு ஏற்படும். 

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வலது கண்ணைப் பற்றியும், 12ம் வீடு இடது கண்ணைப்பற்றியும் குறிப்பிடுவதாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கண் பார்வைக்குரிய  கிரகங்களாகும். சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்றவர்களில் ஒருவர் பலஹீனமாக இருந்து, லக்னத்திற்கு 2,12 ல் சுபர் பார்வையின்றி பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும். அதுபோல 2,12 க்கு 7ம் வீடான 6,8 ல் பாவகிரகங்கள் வலுவாக இருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும். 



ஜோதிட மாமணி முருகு பாலமுருகன்  0091 72001 63001

1 comment:

Anonymous said...

Sir en kulanthaiku jathagam paarka vendum pls give me whatsApp num